ஐபிஎல் தொடர் நடைபெற்று வரும் நிலையில், டி20 தொடரில் தோனி படைத்த சாதனையை முறியடித்திருக்கிறார் சஞ்சு சாம்சன். என்ன சாதனை என்று பார்ப்போமா?
இந்தியாவில் நடைபெறும் ஐபிஎல் தொடர் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அணிகளும், வீரர்களும் சாதனைகளைப் படைத்து வருகிறார்கள். அதேபோல்தான் தற்போது சஞ்சு சாம்சன் ஒரு புதிய சாதனையை படைத்திருக்கிறார்.
சஞ்சு சாம்சன் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்து வருகிறார். ஆனால், இந்த ஆண்டில் ராஜஸ்தான் ராயல்ஸ் விளையாடிய மூன்று போட்டிகளிலும் சஞ்சு சாம்சன் கேப்டன்ஸி வகிக்கவில்லை. அவருக்கு பதிலாக ரியான் பராக் அணியை வழிநடத்தி வருகிறார்.
இதற்கு ஒரு காரணமும் உள்ளது. சஞ்சு சாம்சனுக்கு ஐபிஎல் 2025 தொடருக்கு முன்பே கை விரலில் காயம் ஏற்பட்டுவிட்டது.
அதிலிருந்து முழுமையாக குணமடையாத நிலையில், சரியாக விக்கெட் கீப்பிங் செய்ய முடியாது என்பதால், அணியின் நலன் கருதி குணமாகும் வரை பேட்டிங் செய்துவிட்டு, இம்பாக்ட் பிளேயர் மூலம் மாற்றப்படுகிறார்.
இப்படியான நிலையிலும் கூட, சஞ்சு சாம்சன் சிக்ஸர்கள் அடித்து சாதனை செய்திருக்கிறார். சஞ்சு சாம்சன் டி20 தொடரில் 342 சிக்சர்களை அடித்துள்ளார். தோனி 341 சிக்ஸர்கள் அடித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இதன்மூலம் தோனியின் சாதனையை முறியடித்திருக்கிறார்.
சஞ்சு சாம்சன் இவ்வளவு சிக்ஸர்களை 285 இன்னிங்ஸிலேயே அடித்திருக்கிறார். தோனி 345 இன்னிங்ஸில் 342 சிக்ஸர்களை அடித்தார். இதற்கிடையே டி20 கிரிக்கெட்டில் அதிக சிக்சர் அடித்த இந்திய வீரர்களில் ரோஹித் ஷர்மா 525 சிக்சர்களுடன் முதலிடத்திலும், விராட் கோலி 420 சிக்சர்களுடன் இரண்டாவது இடத்திலும் உள்ளனர். சூர்யகுமார் யாதவ் 347 சிக்சர்களுடன் சஞ்சு சாம்சனை விட சற்று முன்னால் உள்ளார்.
சஞ்சு சாம்சன் இதே வேகத்தில் சென்றால், நிச்சயம் ரோஹித் ஷர்மாவின் சாதனையையும் முறியடித்துவிட்டு இந்தியாவிலேயே அதிக சிக்ஸர்கள் அடித்த வீரராக சஞ்சு சாம்சன் சாதிப்பார் என்பதில் சந்தேகமில்லை. காயத்தில் இருக்கும்போதே தோனியின் சாதனையை முறியடித்திருக்கிறார் என்றால், விரைவில் காயம் குணமானால், அனைவரின் சாதனையையும் முறியடித்துவிடுவார்.