பயிற்சியில் சஞ்சு சாம்சன்… ரிஷப் பண்டின் நிலை என்ன?

Sanju samson and Rishab Pant
Sanju samson and Rishab Pant
Published on

இலங்கை அணிக்கு எதிரான தொடரின் முதல் போட்டியில் இந்திய அணி நாளை விளையாடவுள்ளது. இந்த போட்டிக்காக சஞ்சு சாம்சன் பயிற்சி செய்து வருவதால், ரிஷப் பண்ட் அணியில் இடம்பெறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்திய அணியின் புது பயிற்சியாளராக கவுதம் கம்பீர் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து யார் யார் அணியில் இடம்பெறுவார் என்பதில் குழப்பம் ஏற்பட்டே வருகிறது. அவருக்கு உதவியாக அபிஷேக் நாயர், ரியான் டென் டஸ்காட்டே ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். அதேபோல் ஃபீல்டிங் பயிற்சியாளராக டி திலீப் தொடர்கிறார். இவர் இந்திய அணியின் இளம் வீரர்களுக்கு அளித்த ஃபீல்டிங் பயிற்சியில் பலரும் சிறப்பாக செயல்பட்ட நிலையில், வீரர்கள் கொண்டாட்ட மனநிலைக்கு சென்றனர்.

எப்போதும் இறுக்கமான முகத்துடனே இருக்கும் கவுதம் கம்பீர், அந்த கொண்டாட்டத்தைப் பார்த்ததும் சிரிக்க ஆரம்பித்தார்.

அதேபோல் இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் தீவிர பயிற்சியில் ஈடுபட்டதையும் கவனிக்க முடிந்தது. இதனால், அவருக்கும் நாளைய போட்டியில் வாய்ப்பு கிடைக்கும் என்றே சொல்லப்படுகிறது. டி20 உலகக்கோப்பை தொடரில் நம்பர் 3ல் களமிறங்கிய ரிஷப் பண்ட், மீண்டும் அணிக்கு திரும்பியுள்ளார். இதனால் சஞ்சு சாம்சன் பேக் அப் விக்கெட் கீப்பராக தேர்வு செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

ஆனால், உல்டாவாக சஞ்சு சாம்சன் பயிற்சி செய்து வருவதால், ரிஷப் பண்ட் பெஞ்சில் இருப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு முன்னர், இந்திய அணியில் சஞ்சு சாம்சனின் திறமைக்கு ஏற்ப அவரை விளையாடவைப்பது இல்லை என்று கவுதம் குற்றம் சாட்டியிருந்தார். தற்போது இவரே பயிற்சியாளராக மாறியதும், சஞ்சுவை இறக்கவுள்ளார் என்று தெரிகிறது.

இதையும் படியுங்கள்:
பௌலர்கள் கேப்டன்ஷிப் பதவியிலிருந்து ஒதுக்கப்படுகிறார்களா? - பும்ரா ஆதங்கம்!
Sanju samson and Rishab Pant

இதனால், ரிஷப் பண்ட் ஓரங்கட்டப்படுவார் என்றே சொல்லப்படுகிறது. மேலும், ஜிம்பாப்வே அணிக்கு எதிரான டி20 தொடரில் சிறப்பாக செயல்பட்டு சஞ்சு சாம்சன் ஃபார்மில் உள்ளார். டாப் ஆர்டர், மிடில் ஆர்டர் என்று எந்த பேட்டிங் வரிசையிலும் சஞ்சு சாம்சன் விளையாடக் கூடியவராக உள்ளார். இதனால், கம்பீரின் திட்டம் வெற்றியில் முடியும் என்றே கிரிக்கெட் வட்டாரத்தினர் கணிக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com