சச்சினின் சாதனையை முறியடித்த சர்ஃபராஸ் கானின் தம்பி முஷீர் கான்!

mushir khan
mushir khan
Published on

இளம் வயதிலேயே ரஞ்சி ட்ராஃபி இறுதிப்போட்டியில் சதம் அடித்தப் பெருமை இதுநாள் வரை சச்சினுக்கே இருந்தது. ஆனால் தற்போது அந்தச் சாதனையை சர்ஃபராஸ் கானின் தம்பி முஷீர் கான் முறியடித்துள்ளார்.

89 வது ரஞ்சி ட்ராஃபியின் இறுதிப்போட்டி மும்பைக்கும் விதர்பாவிற்கும் இடையே நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியின் நான்காவது நாள் ஆட்டம் இன்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தின் முதல் இன்னிங்ஸில் மும்பை அணி 224 ரன்களும் விதர்பா அணி 105 ரன்களும் எடுத்திருந்தன. அதேபோல் இரண்டாவது இன்னிங்ஸில் சற்றும் எதிர்பாராவிதமாக மும்பை அணி 418 ரன்களைக் குவித்தது.

ஆகையால் விதர்பா அணி 528 ரன்கள் என்ற இலக்கில் விளையாடி வருகிறது. இந்தநிலையில் நேற்றைய ஆட்டத்தில் ஸ்ரேயஸ் ஐயர் 111 பந்துகளில் 95 ரன்களை எடுத்தார். அதேபோல் ரஹானே 143 பந்துகளில் 73 ரன்களை குவித்தார். சமீபத்தில் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் அறிமுகமான சர்ஃபராஸ் கானின் தம்பி முஷிர் கான் 326 பந்துகளில் நின்று அடித்து 136 ரன்களைக் குவித்தார். இந்தச் சதம் அணியின் பெரிய பலமாக மாறியது.

இதன்மூலம் ரஞ்சி ட்ராஃபி இறுதிப்போட்டியில் இளம் வயதில் சதம் அடித்த சச்சினின் சாதனையை முறியடித்தார் முஷீர் கான். 1994 முதல் 1995ம் ஆண்டில் நடைபெற்ற ரஞ்சி ட்ராஃபியின் இறுதிப்போட்டியில் விளையாடிய சச்சின் சதம் அடித்தார். அப்போது அவருடைய வயது 21. இதுவரை யாருமே அந்தச் சாதனையை முறியடிக்கவே இல்லை. அந்தப் போட்டியின் இரண்டு இன்னிங்ஸில் 140 மற்றும் 139 என இரண்டுச் சதங்கள் அடித்தார். ஆனால் இப்போது அந்தச் சாதனையை முஷீர் கான் தனது 19 வயதில் சதம் அடித்து முறியடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
எப்படிப் பார்த்தாலும் இவர்தான் பெஸ்ட்! ஆனால், இவருக்கான அங்கீகாரம் கிடைக்காதது வொர்ஸ்ட்!
mushir khan

யாரும் தகர்க்க முடியாத 29 ஆண்டுக்காலச் சாதனை இப்போதுதான் முறியடிக்கப்பட்டுள்ளது. இந்தப் போட்டியை நேரில் கண்ட சச்சினும் ரோஹித் சர்மாவும் தங்களது பாராட்டுகளை முஷிர் கானுக்குத் தெரிவித்தனர். இதற்குமுன்னர் பரோடாவிற்கு எதிரான காலிறுதிப் போட்டியிலும் முஷிர் இரட்டைச்சதம் அடித்தது குறிப்பிடத்தக்கது.  

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com