Ashwin - Mark Watt
Ashwin - Mark Watt

அஸ்வின் leaks to மார்க் வாட்!

Published on

இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வினின் ஃபார்முலாவை பின்பற்றி வருகிறார் ஸ்காட்லாந்து கிரிக்கெட் வீரர் மார்க் வாட். இதுகுறித்த சுவாரஸ்யமான தகவலை இங்கு பார்ப்போம்.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் அஸ்வின் தனது மாயாஜால சுழற்பந்து வீச்சால் உலக அளவில் பிரபலமடைந்தவர். இவர் இந்திய அணிக்காக ஒருநாள், டி20 மற்றும் டெஸ்ட் ஆகிய 3 வடிவ கிரிக்கெட் போட்டிகளிலும் பங்கேற்று பல விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். மேலும், இவர் தனது பேட்டிங் திறமையால் அவ்வப்போது இந்திய அணிக்கு தேவையான ரன்களைச் சேர்த்துள்ளார். இவர் இந்திய அணிக்காக 100 டெஸ்ட் போட்டிகளில் விளையாடிய முதல் தமிழர் என்ற பெருமையைப் பெற்றது மட்டுமின்றி, 500 டெஸ்ட் விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனைப் படைத்துள்ளார்.

கடந்த 2021 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமனில் 7வது ஐசிசி டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடர் நடைபெற்றது. இந்தத் தொடருக்காக இந்திய அணிக்கு விராட் கோலி தலைமை வகித்தார். இந்தியாவில் இருந்து சிறப்பான அணி உலகக்கோப்பைக்கு சென்ற போதும் இந்திய அணி லீக் சுற்றோடு வெளியேறியது. தமிழகத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின் மற்றும் வருண் சக்கரவர்த்தி ஆகிய இரண்டு ஸ்பின்னர்களும் இந்திய அணியில் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்தத் தொடரில் பங்கேற்ற ஸ்காட்லாந்து அணி இந்தியாவை எதிர்கொண்டு விளையாடிய போட்டியில், மார்க் வாட் என்ற ஸ்பின்னர், அஸ்வினைச் சந்தித்து நீங்கள் எப்படி பந்து வீசுகிறீர்கள்? எப்படி அனைத்தையும் ஞாபகம் வைத்து களத்தில் அதனை செயல்படுத்துகிறீர்கள் என்று கேட்டார். இத. ற்கு பதிலளித்த அஸ்வின், நான் அனைத்து விதமான குறிப்புகளையும் ஒரு டைரியில் எழுதி வைத்துக் கொள்வேன். எழுதும் போதே மனதில் பதிந்து விடுவதால் என்றும் நினைவில் இருக்கும் என்றார்.

இதையும் படியுங்கள்:
“எனக்கு அவர் குணம் பிடிக்கும்” - கவுதம் கம்பீரைப் பாராட்டிய அஸ்வின்!
Ashwin - Mark Watt

அதற்கு அடுத்த டி20 உலகக்கோப்பையில் ஸ்காட்லாந்து ஸ்பின்னர் மார்க் வாட் கையில் ஒரு சிறிய காகிதத்துடன் களத்தில் இருப்பதை அஸ்வின் கண்டுள்ளார். இதுகுறித்து மார்க் வாட்டிடம் விசாரித்தார் அஸ்வின். என்னால் உங்களைப் போல் டைரியில் எல்லாம் எழுத முடியாது. அப்படி எழுதினால் எனக்கு மறந்து விடுகிறது. அதனால் தான் அவ்வப்போது கிடைக்கும் துண்டு காகிதத்தில் எழுதி வைத்துக் கொண்டு, அந்தக் குறிப்பை களத்தில் செயல்படுத்துகிறேன் என வாட் பதிலளித்தார். இதனைக் கேட்ட அஸ்வின் களத்தில் நீங்கள் சிறப்பாக செயல்பட வாழ்த்துகள் என கூறியிருக்கிறார்.

அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த ஸ்பின்னர்களில் ஒருவர். ஸ்பின்னர்கள் இவரைப் பின்பற்றுவதும், பேட்டர்கள் இவரைக் கண்டால் தடுமாறுவதும் வழக்கமான ஒன்றாகி விட்டது. ஆஸ்திரேலிய பேட்டர்கள் அஸ்வினைக் கண்டால் கொஞ்சம் நடுங்குவதுண்டு. குறிப்பாக ஸ்டீவ் ஸ்மித் மற்றும் டேவிட் வார்னர் ஆகிய இருவரும் அஸ்வினின் சுழலில் அதிகமுறை ஆட்டமிழந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com