ஷமி! நீ எல்லை மீறி ஆடுகிறாய்! –பாகிஸ்தான் வீரர் எச்சரிக்கை!

Shami
Shami
Published on

பாகிஸ்தான் முன்னாள் வீரரான இன்சமாம் உல் ஹக் குறித்து ஷமி பேசியிருந்தார். அதற்கு பாகிஸ்தானின் முன்னாள் வீரர் பாசித் அலி ஷமியை தாக்கி பேசியிருக்கிறார்.

டி20 உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அபாரமாக வெற்றிபெற்றதும், பலர் பலவித கருத்துக்களை வெளிப்படுத்தினர். சிலர் இந்த வெற்றியினை ஏற்றுக்கொள்ள முடியாமல், தொடர்ந்து எதாவது சொல்லிக்கொண்டே உள்ளனர். முன்னதாக, டி20 தொடரில் இந்திய அணியின் வேகப்பந்துவீச்சாளர்கள், பந்தை சேதப்படுத்தி ஸ்விங் செய்வதாக இன்சமாம் உல் அக் கூறியிருந்தார்.

அதேபோல் பாகிஸ்தானின் மற்றொரு வீரமும், பந்தில் எதோ கருவி வைத்து இந்திய வீரர்கள் விளையாடுகின்றனர் என்று யாரும் நம்பமுடியாத குற்றச்சாட்டை முன்வைத்தார்.

இதற்கு முகமது ஷமி ஒரு பதில் அளித்திருந்தார். அதாவது, "இது போன்ற கார்ட்டூன் தனமான நடத்தைகள் வேறு எங்காவது வேண்டுமானால் நடக்கும்." என்று கூறியிருந்தார். அவர் பொதுவாகத்தான் கூறினார். யாரையும் மனதில் வைத்துக் கூறவில்லை.

ஆனால், தற்போது பாசித் அலி, ஷமி எதோ இன்சமாமை கூறியதுபோல பதிலளித்திருக்கிறார். அதாவது கார்டூன் என்று இன்சமாமை கூறியிருக்கிறார் என்பதுபோல பேசியுள்ளார்.

பாசித் அலி என்ன கூறினார் என்றால், "இன்சமாமை கார்ட்டூன் என ஷமி கூறி இருப்பது சரியல்ல. இன்சமாம் உல் ஹக் எங்கள் அணியை சர்வதேச கிரிக்கெட்டில் கேப்டனாக இருந்து வழிநடத்தியவர். ஷமி அவர் பற்றி பேசிய வார்த்தை சரியானது அல்ல. அவரது வார்த்தை என்னை காயப்படுத்தி விட்டது. இன்சமாம் உல் ஹக் தவறு செய்ததாக நீங்கள் நினைத்தால், அதை நல்ல விதமாக சொல்லுங்கள்.

இதையும் படியுங்கள்:
மனைவியைச் சுமக்கும் போட்டி: பங்கேற்க தயாரா? விதிகள் உண்டு தெரியுமா?
Shami

அவர் ஒரு மூத்த வீரர். அவருக்கு மரியாதை அளியுங்கள். அப்படி செய்யவில்லை என்றால் நீங்கள் வருடத்தின் 365 நாட்களில் 300 நாட்கள் அழுது கொண்டுதான் இருப்பீர்கள். உங்களுக்கு வாய்ப்பு கிடைக்காது. எனவே, இதை செய்யாதீர்கள். இது எனது தனிப்பட்ட கோரிக்கையாகும். முகமது ஷமி ஆபத்தான முறையில் மூத்த வீரர்களையெல்லாம் பேசுகிறார். அவர் வீட்டில் அவருக்கு மரியாதைக் குறித்து கற்றுத்தரவில்லை போல." என்று பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com