

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகள் மோதிய மூன்றாவது ஒருநாள் போட்டி கடந்த சனிக்கிழமை சிட்னி மைதானத்தில் நடைபெற்றது. மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் தொடங்கிய போட்டியில் இந்திய அணி 9 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி ஆகியோர் மீண்டும் கம்பேக் கொடுத்து ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.
முன்னதாக ஆஸ்திரேலிய அணி பேட்டிங் செய்தபோது கேட்ச் பிடிக்கும் போது, ஸ்ரேயாஸ் ஐயருக்கு வயிற்றில் காயம் ஏற்பட்டது. உடனே அவர் மைதானத்தில் இருந்து சிகிச்சைக்காக வெளியேற்றப்பட்டார். இந்நிலையில் தற்போது உடலில் ரத்தக் கசிவு காரணமாக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான முதல் இரண்டு போட்டிகளில் தோல்வி பெற்ற இந்திய அணி, வைட் வாஷை தவிர்க்க மூன்றாவது போட்டியில் களமிறங்கியது. கடந்த சனிக்கிழமை நடைபெற்ற இம்போர்ட்டியலில் முதலில் ஆஸ்திரேலியா அணி பேட்டிங் செய்தது. அப்போது ஹஷித்ரான வீசிய பந்தை அலெக்ஸ் கேரி தூக்கி அடித்தார். அப்போதைய கேட்ச் பிடிக்க ஸ்ரேயாஸ் ஐயர் பவுண்டரி எல்லை வரை ஓடினார்.
கீழே விழுந்து அற்புதமான கேட்ச்சை பிடித்த பிறகு, பந்து அவரின் வயிற்றில் பட்டது. அப்போது கடுமையான வலியால் ஸ்ரேயாஸ் ஐயர் துடித்தார். உடனே மருத்துவக் குழு மைதானத்திற்குள் நுழைந்து ஸ்ரேயாஸ் ஐயரை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
இதனைத் தொடர்ந்து தற்போது, உடலில் ரத்தக் கசிவு ஏற்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதனால் ஸ்ரேயஷ் ஐயரை தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றினர். இவருக்கு விலா எலும்பில் அடிபட்டு இருப்பதால், மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் இருக்கிறார்.
நடப்பாண்டு நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராபியில் மிடில் ஆர்டரில் இறங்கி, சிறப்பாக பேட்டிங் செயதார் ஸ்ரேயாஸ் ஐயர். டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் ஸ்ரேயாஸ் ஐயருக்கு இடம் கிடைக்காவிட்டாலும், ஒரு நாள் போட்டிகளில் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனாக நன்றாக விளையாடி வந்தார்.
இந்நிலையில் தற்போது இவருக்கு காயம் ஏற்பட்டு இருப்பதால், மீண்டும் அணியில் இடம் பிடிக்க சில மாதங்கள் ஆகலாம் எனத் தெரிகிறது. ஐபிஎல் தொடரில் சிறப்பாக விளையாடியும், இந்திய டி20 அணியில் இவருக்கு இடம் கிடைக்கவில்லை. டி20 போட்டிகளில் இடம் பிடிக்க கடுமையாக போராடி வரும் ஸ்ரேயாஸ் ஐயருக்கு, தற்போது ஏற்பட்டிருக்கும் காயம் இவரது கிரிக்கெட் பயணத்தை பாதிப்புக்குள்ளாக்கும் என முன்னாள் வீரர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.