

இந்திய அணியின் ஒரு நாள் மட்டும் டெஸ்ட் கேப்டன் ஆன சுப்மன் கில் ஐசிசி செப்டம்பர் மாதத்தின் சிறந்த வீரர் என்ற விருதினை பெற்றார். கடந்த செப்டம்பர் மாதம் மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிராக ஒரு நாள் போட்டி தொடரில் 110 மற்றும் 223 ரன்களைக் குவித்து தனது மிரட்டலான ஆட்டத்தினை வெளிப்படுத்தினார். ஐசிசி பட்டியலில் இந்தியாவின் அபிஷேக் ஷர்மா மற்றும் ஜிம்பாப்வே அணியின் சிக்கந்தர் ராசா ஆகியோரை ஓரங்கட்டி சுப்மன் கில் முதலிடத்தை பெற்றார்.
இந்தியாவின் மற்றொரு வீரரான அபிஷேக் சர்மாவும் இந்த ரேசில் முன்னணியில் இருந்தார். செப்டம்பர் மாதம் இந்தியாவில் நடைபெற்ற ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி 20 தொடரிலும் தன் திறமையை வெளிப்படுத்தினார். அந்த தொடரில் 82 மற்றும் 108 ரன்களை அடித்து அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். அபிஷேக்கின் செயல்பாடுகள் சிறப்பாக இருந்த போதிலும் ஐப்பானுக்கு எதிரான தொடரில் கோல்டன் டக் ஆனதால் பின் தங்கினார். சுப்மன் கில் ஒரு இரட்டை சதமடித்தது அவர் முன்னிலை பெறவும் வாய்ப்பாக அமைந்தது.
ஜிம்பாப்வே அணியின் கேப்டனான சிக்கந்தர் ராசாவும் செப்டம்பர் மாதம் சிறப்பாக விளையாடி முத்திரை பதித்துள்ளார். ஆஸ்திரேலியாவிற்கு எதிரான ஒருநாள் தொடரில் 57,45, மற்றும் 81* ரன்கள் எடுத்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.
ஐசிசியின் மாதத்தின் சிறந்த வீரர் விருதை 5 வது முறையாக கில் பெறுகிறார். இந்த விருதை இதுவரை அதிகமாக பெற்றவர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார். இதற்கு முன்னர், ஜனவரி 2023, செப்டம்பர் 2023, பிப்ரவரி 2025 மற்றும் ஜூலை 2025 ஆகிய மாதங்களில் அவர் ஐசிசி மாதத்தின் சிறந்த வீரராகத் அவர் தேர்வு செய்யப்பட்டார் .
இது குறித்து தனது கருத்துக்களை பகிர்ந்துக் கொண்ட சுப்மன் கில் , "இது எனது ஐந்தாவது ஐசிசி மாதத்தின் சிறந்த வீரர் விருது , இந்த விருதினை வென்றதில் நான் மிகவும் அற்புதமாக உணர்கிறேன். இந்த கௌரவத்தினை வழங்கிய நடுவர் குழுவிற்கு எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். அந்த ரன்களை குவித்தது எனக்கு மன நிறைவை கொடுத்தது. அதிலும் குறிப்பாக எங்கள் உள்ளூர் ரசிகர்களின் முன்னிலையில் விளையாடியது , எங்களுக்கு எப்போதுமே கூடுதல் உத்வேகம் அளிக்கும் .ரன்களை சேஸ் செய்து வெற்றி பெறும் போது அதற்கு முக்கிய காரணமாக இருந்ததால் சிறப்பு வாய்ந்தது.
மேலும் ஒரு நாள் கிரிக்கெட்டின் வேகம் தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது. அதனால், உடனடியாக ஆடுகளத்தின் நிலைமைகளை விரைவாக கணித்து உடனடியாக சிந்தித்து, அதற்கு ஏற்றவாறு விரைவாக உங்களை தகவமைத்துக் கொள்வது மிகவும் அவசியம் என்று கூறினார்.
மேலும் கூறிய அவர் , அடுத்த ஆண்டு தென் ஆப்பிரிக்காவில் நடைபெறவுள்ள ஐசிசி ஒருநாள் உலகக் கோப்பையை செல்வதை குறிக்கோளாகக் கொண்டு இந்திய கிரிக்கெட் அணி செயல்பட்டு வருகிறது. அணியின் தரத்தை தொடர்ந்து உயர்த்தி, வரவிருக்கும் சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட ஒரு வலுவான, பன்முகத் திறன் வாய்ந்த அணியை உருவாக்க நாங்கள் உறுதியாக உள்ளோம்," என்று தெரிவித்துள்ளார்.