டென்ஷனை குறைக்கும் எளிய வழிகள்! ரிலாக்ஸ் பிளீஸ் !

டென்ஷனை குறைக்கும் எளிய வழிகள்! ரிலாக்ஸ் பிளீஸ் !

பத்து வயது குழந்தை முதல் பல் போன பாட்டி வரை டென்ஷன் என்கிற வார்த்தையை சர்வ சாதாரணமாக சொல்கிறார்கள். அந்த அளவுக்கு அன்றாட வாழ்க்கையில் ஸ்ட்ரெஸ் மற்றும் டென்ஷன் என்பது வாடிக்கையாகி விட்டது. இதை எப்படி குறைப்பது? இதை படிங்க உங்க டென்ஷன் காணாமல் போய்விடும்

நீங்கள் ஒருவித மனப்பதற்றத்துக்குள் அமிழப்போவதாகத் தோன்றினால், உடனடியாக ஒரு ஆழமான மூச்சு எடுத்து, பின் நிதானமாக காற்றைவெளியேற்றுங்கள். இப்போது மறுபடியும் ஒருமுறை அப்படிச் செய்யுங்கள். பின்மூன்றாவதாக மீண்டும் ஒரு முறையும் அப்படியே காற்றை இழுத்துவெளியேற்றுங்கள். ஆழமான மூச்சுப் பயிற்சி மன இறுக்கத்தை விரட்டியடிக்கும்.

சொற்கள் நிகழ்த்தும் குணச் சிகிச்சையை கற்றுக் கொள்ளுங்கள். இரக்கமற்ற கடுமையான சொற்களுக்குப் பதிலாக, இனிமையும், மென்மையும் கலந்த வெகுசாந்தமான சொற்களையே கையாளுங்கள். அந்த சொற்களின் தாக்கம் வெளிப்படும் வகையில் அவற்றை மிக மிக மெதுவாக உச்சரியுங்கள். புனிதமும், அமைதியும், சாந்தியும், இளைப்பாறுதலும் தரும் சொற்களையே பயன்படுத்துங்கள்.

மனதை ஒருபோதுமே இறுக்கமாக வைத்துக் கொள்ளாதீர்கள். நீங்கள் இறுக்கமான ஒரு ரப்பர் பேண்டால் சுற்றி வைக்கப்பட்டிருப்பதாக கற்பனை செய்துகொள்ளுங்கள். இப்போது அதை மெதுவாக அவிழ்த்து, அந்த இறுக்கத்திலிருந்து விடுபட்டு மெல்ல வெளியே வாருங்கள்.

வேகமான வாழ்க்கைச் சூழலில் சாந்தமான சில நிமிடங்களையும் அவ்வப்போது ஏற்படுத்திக் கொள்ளுங்கள். அந்த நேரத்தில் எதுவுமே செய்யாமல் ஒரு கணம் அப்படியே மெளனமாக இருங்கள்.

குறைந்தபட்சம் ஒரு நாளின் பத்து நிமிடங்களையாவது ஆளரவமற்ற அமைதியான சூழலுக்கு ஒதுக்குவது மனப் பதற்றத்துக்கு எதிரான ஒரு நல்ல மருந்தாகும். அமைதியான அந்த பொழுதில் ஒரு கவிதையை வாசிக்கலாம். கண்மூடி தியானிக்கலாம். இந்த பழக்கம் மீண்டும் மீண்டும் தொடரும்போது அது உங்கள் மனப் பதற்றத்தை வேரோடு அகற்றி விடுகிறது.

கடவுள் சிந்தனைக்கு ஒரு நிமிடம் ஒதுக்குங்கள். மலை மீது தவழும் மேகக் கூட்டங்களை ரசிக்க ஒரு நிமிடம் ஒதுக்குங்கள். இப்படியே ஒரு நாளில் இதுபோன்ற ரசனை கணங்களுக்காகஎவ்வளவு நேரம் உங்களால் ஒதுக்க முடியும் என்று பாருங்கள்.

ஒரு சாய்வு நாற்காலியில் ஒரு நிமிடம் சற்றே தளர்வாக அமருங்கள். தலையைநாற்காலியில் சாய்த்துக் கொண்டு கால்களை நீட்டி வையுங்கள். இப்போதுஉங்கள் கைகள் இரண்டையும் மேலே உயர்த்தி, பின் மெதுவாக அப்படியே கீழேஉங்கள் கால் முட்டின் மீது கொண்டு வாருங்கள். . இந்த செயல் உங்கள் இறுக்கத்தைதளர்த்தி இளைப்பாற வைக்கும்.

உங்கள் வாழ்க்கையில் நீங்கள் மிகவும் ரசித்த அமைதியும், அழகும் நிறைந்த ஒரு இடத்தை உங்கள் மனக்கண்ணில் கொண்டு வாருங்கள். அற்புதமான உங்கள் நினைவாற்றலின் துணையுடன் உங்களுக்கு மனசாந்தி கொடுத்த அந்த சிலிர்க்கும்அனுபவத்தை இப்போது மீண்டும் சுவையுங்கள். இப்படியே அழகான ஒரு சமவெளி, பிரமிப்பூட்டும் ஒரு கடற்கரை, மலர்கள் பூத்துக் குலுங்கும் ஒரு புல்வெளி என்று உங்கள் நினைவடுக்குகளிலேயே பயணம் செய்யுங்கள்.

உங்கள் மனதையும், உடலையும் வருடிச் செல்லும் இறை அமைதியைப் பற்றிய ஒருகருத்தாக்கத்தை உங்களிடம் உருவாக்குங்கள். இப்போது அது உங்கள்ஆன்மாவுக்குள் ஆழமாக ஊடுருவிச் செல்வதை உங்களால் உணர முடியும். இப்போது உரக்கச் சொல்லுங்கள்: “கடவுளின் அமைதி எனது நெருக்கடிகளைஇளைப்பாறுதலாக மாற்றி விடுகின்றன.”

உங்களை பலவீனமடையச் செய்யும், போராட்டமும் பதற்றமும் மிகுந்தஎண்ணங்களை உங்களிடம் இருந்து வடிந்துபோகச் செய்யுங்கள். இப்போதுஇப்படிப்பட்ட எண்ணங்கள் உங்கள் மனதில் இருந்து மெதுவாக வெளியேறி வடிந்து போவதை உங்களால் பார்க்கமுடியும். அவை அப்படியே வெளியேறட்டும், விட்டு விடுங்கள்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com