முகமது சிராஜ் சாம்பியன்ஸ் ட்ராபியிலிருந்து நீக்கப்பட்டதை அடுத்து, அதுகுறித்து தற்போது வருத்தம் தெரிவித்திருக்கிறார் சிராஜ்.
இந்திய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவரான சிராஜ், 44 ஒருநாள் போட்டிகளில் விளையாடியுள்ளார். 24.04 என்பதை சராசரியாக வைத்து 71 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். இவர் பல சாதனைகளையும் படைத்திருக்கிறார், 2023ஆம் ஆண்டில் ஐசிசி ஒருநாள் பந்துவீச்சாளர்கள் பட்டியலில் முதலிடமும் பிடித்திருந்தார். அதுமட்டுமின்றி 2022 ஆம் ஆண்டு முதல் ஒருநாள் போட்டிகளில் அதிக விக்கெட்களை வீழ்த்திய மூன்றாவது வேகப்பந்து வீச்சாளர்.
இப்படிபட்ட ஒரு வீரரை சாம்பியன்ஸ் ட்ராபியில் தேர்ந்தெடுக்காதது குறித்து ரசிகர்கள் விமர்சனங்கள் செய்தனர். இதற்கு காரணம் கவுதம் கம்பீரின் ஆதிக்கமோ என்று ரசிகர்கள் கருத்துக்கள் தெரிவித்தனர்.
ஆனால் சாம்பியன்ஸ் ட்ராபியை இந்திய அணி வென்றதால், இந்த விமர்சனங்கள் மறைந்தன.
சிராஜ் ஐபிஎல் தொடரில் இதுவரை மூன்று அணிக்காக விளையாடியிருக்கிறார். 201ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ரூ.2.60 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். 2017ஆம் ஆண்டு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ரூ.2.60 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார்.
2018 முதல் 2024 வரை கிட்டதட்ட 7 ஆண்டுகள் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணிக்காக விளையாடினார் சிராஜ். இப்படியான நிலையில்தான் இவர் குஜராத் அணியின் வாங்கப்பட்டார். நேற்றைய போட்டியில் ஹைத்ராபாத் அணிக்கு எதிராக குஜராத் அணி விளையாடியது. மொத்தம் நேற்றைய போட்டியில் வெறும் 17 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து 4 விக்கெட்டுகளை சாய்த்த சிராஜ், ஆட்ட நாயகன் விருதை மீண்டும் தட்டிச் சென்றார். அத்துடன் ஐபிஎல் கிரிக்கெட்டில் 100 விக்கெட்டுகளையும் கடந்தார்.
இப்படியான நிலையில்தான் தான் சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் சேர்க்கப்படாதது குறித்து பேசினார். “ஆர்சிபி அணிக்காக நான் 7 வருடங்கள் விளையாடி இருக்கிறேன். அப்பொழுது என்னுடைய பந்துவீச்சினை மேம்படுத்த கடினமாக உழைத்தேன்.
அதேபோல், என்னுடைய மனநிலையையும் தயார் செய்தேன். அது எனக்கு மிகவும் உதவியது. ஒரு கட்டத்தில், சாம்பியன்ஸ் டிராபி அணிக்காக தேர்வு செய்யப்படாதபோது அதனை என்னால் ஜீரணிக்கவே முடியவில்லை. ஆனால் மனம் தளராமல் என்னை ஊக்கப்படுத்திக் கொண்டு என்னுடைய ஸ்பிரிட்டை கைவிடாமல் கடினமாக உழைத்தேன். என்னுடைய உடற்தகுதியையும் பந்துவீச்சு திறனையும் மேம்படுத்தினேன்” என்றார்.