

ஜிம்பாவே அணிக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனாவிற்கும் முன்னாள் கேப்டன் ஹர்மன்பிரித் கவுருக்கும் இடையேயான உரசல் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. நீண்ட நாட்களாகவே இருவருக்கும் இடையில் நல்ல உறவு இல்லை என்று ஊடகங்கள் கூறிவரும் நிலையில், தற்போது அவை உண்மையாக இருக்குமோ? என்று சந்தேகம் எழத் தொடங்கியுள்ளது.
நேற்று (அக்டோபர் 28) ஜிம்பாப்வே அணிக்கு எதிராக வதோதராவில் மூன்றாவது ஒருநாள் போட்டி நடைபெற்றது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த ஜிம்பாப்வே அணி ரன்கள் எடுக்க மிகவும் தடுமாறியது. அந்த அணியின் பேட்டிங் ரன் ரேட் மிகவும் குறைவாக இருந்தது. 50 ரன்களைக் கடக்கவே கிட்டத்தட்ட 15 ஓவர்கள் வரை அந்த அணிக்கு தேவைப்பட்டது. அவர்களின் வேகம் நத்தையை விட மிகவும் மெதுவாக சென்றது. 39.5 ஓவர்கள் முடிவில் ஜிம்பாப்வே அணி வெறும் 131 ரன்களை மட்டுமே குவித்து அனைத்து விக்கட்டுகளையும் இழந்தது.
இந்த போட்டியில் இந்திய அணியின் வைஷ்ணவி ஷர்மா 39 ரன்களைக் கொடுத்து 5 விக்கெட்டைகளை வீழ்த்தி இந்திய அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தார். இந்த எளிய இலக்கை விரட்டிய இந்திய அணி 17 ஓவர்களிலேயே 133 ரன்களை குவித்து வெற்றி பெற்றது. பிரித்திகா ராவல் 59 ரன்களையும் ஷபாலி வர்மா அதிவேகமாக 51 ரன்களைக் குவித்து இறுதி வரை ஆட்டமிழக்காமல் அணியினை வெற்றி பெற வைத்தனர்.
இந்திய அணி இந்த தொடரை 3-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளது. போட்டி முடிந்தவுடன் வழக்கமாக அணியின் வீராங்கனைகள் கைகுலுக்கி கொள்வதும் கட்டி அணைத்துக் கொள்வதும் வழக்கமாக அன்பையும் பாராட்டையும் பகிர்ந்து கொள்ளும் நடைமுறையாக இருக்கின்றது. ஆனால் , தொடரை வென்ற போதிலும் கேப்டன் ஸ்மிருதி , முன்னாள் கேப்டன் ஹர்மனுடன் கை கொடுக்காமல் விலகி செல்லும் வீடியோ இணையங்களில் பரவிக் கொண்டிருக்கிறது.
போட்டி முடிவில் ஹர்மன்பிரீத் ஸ்மிருதி நோக்கி வரும் போது , ஸ்மிருதி அவரை கண்டுக் கொள்ளாமல் நகரும் காட்சிகள் வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த வீடியோ அந்த இரு வீராங்கனைகளுக்கும் இடையில் உள்ள மோதலை பகிரங்கப்படுத்தி உள்ளது. ஏற்கனவே ஸ்மிருதி தனக்கு முன்கூட்டியே கிடைக்க வேண்டிய கேப்டன் பதவிக்கு , ஹர்மன் முட்டுக்கட்டையாக இருப்பதாக கருதினார். இவர்களுக்குள் நடந்த மோதல் காரணமாகத்தான் ஹர்மன் தனது கேப்டன் பதவியில் இருந்து விலகினார் என்று அப்போது கூறப்பட்டது.
ஹர்மன் நீண்ட காலம் அணியினை வெற்றிகரமாக வழி நடத்தி ஏராளமான தொடர்களை வென்று காட்டியுள்ளார். மிக முக்கியமாக மகளிர் ஒரு நாள் உலகக் கோப்பையை வென்ற முதல் இந்தியக் கேப்டன் என்ற பெருமைக்குரியவர். இந்திய மகளிர் கிரிக்கெட் அணியை வலிமைமிக்க அணிகளில் ஒன்றாக மாற்றியதில் ஹர்மன் பங்கு மிக அதிகம். புதிய கேப்டன் ஸ்மிருதி ஜிம்பாவேவிற்கு எதிரான ஒரு நாள் தொடரை 3-0 என்று வெற்றி பெற்றுள்ளார்.
இந்திய மகளிர் அணி சமீபத்திய காலமாக தான் வெற்றிகரமாகவும், பொருளாதார ரீதியில் முன்னேறி அணியாகவும் மாறி வருகிறது. அதற்குள் இது போன்ற பூசல்கள் அணியினை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டு சென்று விடுமோ? என்று ரசிகர்கள் கவலைப்படுகின்றனர்.