

இந்திய பெண்கள் கிரிக்கெட் அணியின் துணை கேப்டன் ஸ்மிருதி மந்தனா மகாராஷ்டிரா மாநிலம் சாங்லியை சேர்ந்தவர். சமீபத்தில் பெண்கள் உலகக் கோப்பையை வெல்வதில் முக்கிய பங்காற்றிய மந்தனா பெண்கள் ஐ.பி.எல். கிரிக்கெட்டில் பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் கேப்டனாகவும் உள்ளார்.
29 வயதான மந்தனாவும், பிரபல இசையமைப்பாளர் பலாஷ் முச்சாலும் நீண்ட காலமாக காதலித்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்பு மோதிரம் மாற்றி நிச்சயம் செய்து கொண்டனர். மந்தனா- பலாஷ் முச்சால் திருமணம் கடந்த 23-ம்தேதி (டிசம்பர்) சாங்லியில் உள்ள அவரது பண்ணை வீட்டில் நடப்பதாக இருந்தது. திருமணத்துக்கு முந்தைய முக்கிய சடங்கான மெஹந்தி விழாவும் நடைபெற்றது.
இந்நிலையில் மந்தனாவின் தந்தை ஸ்ரீனிவாசுக்கு 23-ம்தேதி பிற்பகலில் திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டதால் திருமணம் தள்ளிவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஸ்ரீனிவாசுக்கு மாரடைப்புக்கான அறிகுறி தென்படுவதாகவும், தேவைப்பட்டால் ஆஞ்சியோகிராபி செய்ய வேண்டி இருக்கும் என்றும் டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, தந்தை முழுமையாக குணமடையும் வரை, திருமணத்தை ஒத்திவைப்பதாக கூறப்பட்டது.
இந்நிலையில் மந்தனாவின் தந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சில மணி நேரத்திலேயே பலாஷும் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி அனைவரையும் அதிர்ச்சியடையச்செய்தது.
இந்நிலையில், ஸ்மிருதி மந்தனா சமூக வலைதளங்களில் இருந்து பலாஷுடன் இருக்கும் அனைத்து திருமண புகைப்படங்கள் மற்றும் ரீல்ஸ்கள் என அனைத்து பதிவுகளையும் நீக்கியுள்ளார்.
தந்தையின் உடல்நிலைக்காகத் திருமணம் தள்ளிப்போனது என்றால், கொண்டாட்டப் புகைப்படங்களை ஏன் நீக்க வேண்டும்? என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்ததுடன் இவர்களுக்கு திருமணம் நடக்குமா, நடக்காதா என்ற பெரிய சந்தேகம் எழுந்தது.
இதே சமயம், பலாஷ் வேறு ஒரு பெண்ணிடம் flirt செய்ததாக சில ஸ்கிரீன் ஷாட்கள் இணையத்தில் வைரலாக தொடங்கியது. பலாஷ் , மேரி டி'கோஸ்டா என்ற பெண்ணிடம், ஸ்விம்மிங் செய்ய அழைத்து Flirt செய்ததாக Reddit பக்கத்தில் ஸ்கிரீன்ஷாட்கள் வெளியானது.
அந்த ஸ்கிரீன்ஷாட்டில், ‘ஸ்மிருதியை நீங்கள் லவ் பண்றீங்க தானே.. அப்புறம் ஏன் என்னை அழைக்கிறீர்கள்’ என கேட்க, பலாஷ் அதற்கு பதில் சொல்லாமல் Avoid செய்ததாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஸ்கிரீன்ஷாட்கள் உண்மையா என்பது இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை என்றாலும் இந்த ஸ்கிரீன்ஷாட்கள் இணையதளத்தில் வெளியானதில் இருந்து பலரும் பலாஷை கமெண்டில் திட்டி வருகின்றனர்.
இதுகுறித்து இருவரும் அல்லது இருவரில் ஒருவர் வாய்திறந்தால் மட்டுமே உண்மை என்னவென்று தெரியவரும்.