கேப்டனாக தனது முதல் போட்டியில் சாதிப்பாரா ஸ்மிருதி மந்தனா? ஜிம்பாப்வேவிற்கு எதிரான களம் காண்கிறார்!

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான தொடரில் ஸ்மிருதி மந்தனா தலைமையிலான இந்திய மகளிர் அணியின் வியூகங்கள் மற்றும் புதிய வீராங்கனைகளின் தேர்வு விவரங்கள்.
ஸ்மிருதி மந்தனா | Indian Cricketer Smriti Mandhana
ஸ்மிருதி மந்தனா | Indian Cricketer Smriti Mandhana
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீராங்கனையான ஸ்மிருதி மந்தனா, முழு நேர கேப்டனாக தனது பதவியை இன்று முதல் வெளிப்படுத்த உள்ளார். சமீபத்தில் இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து ஹர்மன் பிரீத் கவுர் விலகியதை தொடர்ந்து, துணை கேப்டன் பொறுப்பில் இருந்த ஸ்மிருதி அந்த பதவிக்கு தேர்வுக்குழுவினரால் தேர்வு செய்யப்பட்டார். ஜிம்பாப்வே மகளிர் கிரிக்கெட் அணி, இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆறு போட்டிகளைக் கொண்ட தொடரில் விளையாட உள்ளது.

இந்த தொடர் அக்டோபர் 16ஆம் தேதியில் ஆரம்பித்து 20 வரை ராய்ப்பூரில் 3 டி20 போட்டிகளைக் கொண்ட தொடரும் , வதோராவில் 3 ஒருநாள் போட்டிகளைக் கொண்ட தொடரும் நடைபெற உள்ளது. ஜிம்பாப்வே மகளிர் அணி முதல் முறையாக இந்தியாவிற்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளது. அதனால், தங்களது இந்திய பயணத்தை வெற்றிகரமாக மாற்றுவதற்காக இவர்கள் கடினமாக பயிற்சி பெற்று வந்துள்ளனர்.

இதற்கு முன்னர் ஹர்மன் தலைமையில் இந்திய மகளிர் அணி பெரிய அளவில் முன்னேற்றம் பெற்று, சர்வதேச அளவில் தரப்பட்டியலில் முன்னணி இடங்களை பெற்றிருந்தது. மேலும் அவரது தலைமையில் உலகக் கோப்பையையும் வென்று சாதித்துள்ளது. ஸ்மிருதியும் தற்காலிக கேப்டனாக செயல்பட்டு அதிக வெற்றிகளை பெற்றுள்ளார்.

இந்நிலையில் செய்தியாளர் சந்திப்பில் ஸ்மிருதி மந்தனா , இந்திய மகளிர் கிரிக்கெட்டை எவ்வாறு முன்னோக்கி கொண்டு செல்வது, அடுத்த இரண்டு ஆண்டுகளில் நமது அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும் என்பதை பற்றியே உரையாடல்கள் இருந்தது. ஏனென்றால் நிறைய பெரிய தொடர்களை இந்திய அணி சந்திக்க உள்ளது.

ஸ்மிருதி ஒரு புதிய அத்தியாயத்தை இந்திய மகளிர் அணியில் தொடங்கினாலும், அவருக்கு இது பற்றி ஏற்கனவே அனுபவம் உண்டு. இதற்கு முன்னர் ஹர்மன் தலைமையில் அணி செயல்பட்ட போது துணை கேப்டனாக அவர் திறம்பட செயல்பட்டு இருக்கிறார். மேலும் ஸ்மிருதி முன்னாள் கேப்டனான ஹர்மன், டிரெஸ்ஸிங் ரூமில் முக்கிய கவனம் பெறுவார் , அவரது அனுபவம் அணிக்கு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கும், பேட்டிங்கில் அவரது திறமையை வெளிக்கொண்டு வர முடியும். என்று கூறியுள்ளார்.

New captain
Smirthi Mandannaimage credit: BCCI

ஜிம்பாப்வே தொடர் இந்திய மகளிர் அணி தங்களது தலைமையை மதிப்பிடுவதற்கும், அணியில் உள்ள வீராங்கனைகள் தங்களை புதுப்பித்துக் கொள்ள ஒரு வாய்ப்பினை வழங்குகிறது. தற்போது அணியின் பேட்டிங் வரிசையில் மூன்றாவது இடம் காலியாக உள்ளது. இந்த இடத்தினை நிரப்புவதற்கு அனுஷ்கா ஷர்மா, நிக்கி பிரசாத், கமாலினி ஆகியோரை தனது தேர்வுகளாக ஸ்மிருதி வைத்துள்ளார்.

ஜிம்பாப்வே மகளிர் அணி தற்போது முன்னேற்றத்தை நோக்கிய திசையில் சென்று கொண்டிருக்கிறது. அந்த அணியின் கேப்டன் ஜோசபின் என்கோமோ மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான தொடரில் தங்களது முதல் ஐசிசி மகளிர் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்று சாதித்துள்ளனர். சர்வதேச கிரிக்கெட்டில் தங்களின் நிலைநிறுத்தி கொள்ள முயற்சி செய்யும் பணிக்கு இது முக்கியமான சாதனையாகும்.

இந்தியாவைப் பொருத்தவரையில் இந்த போட்டி தொடர் ஸ்மிருதியின் தலைமை பண்பினை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அதனால் அவர் பெறும் அழுத்தம் வெற்றி என்பதை நோக்கி நகரும். இப்போது இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையேயான போட்டி நடைபெற்று வருகிறது.

logo
Kalki Online
kalkionline.com