டெல்லி கேப்பிட்டல்ஸ் அணியின் அதிரடி: புதிய தலைமைப் பயிற்சியாளராக சௌரவ் கங்குலி நியமனம்!

ஐபிஎல் கோப்பையை வெல்லும் இலக்குடன் களமிறங்கும் முன்னாள் இந்திய கேப்டன் கங்குலி.
Ganguly
Ganguly x
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனான சௌரவ் கங்குலி, டெல்லி கேப்பிட்டல் அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார். அந்த அணியுடன் நீண்ட கால தொடர்பை அவர் பேணி வந்தார். 2019 ஆம் ஆண்டிலிருந்து டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் ஆலோசகராக பணியாற்றி வந்தார். பின்னர் 2024 ஆம் ஆண்டு முதல் அந்த அணியின் இயக்குநராக பதவி வகித்து வந்தார். எஸ்ஏ20 லீக்கில் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளராக பதவி வகித்து வந்தார்.

இந்திய கிரிக்கெட்டின் மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர்களில் கங்குலியும் ஒருவர் , அணியின் தொடக்க ஆட்டக்காரராகவும் பின்னாளில் புகழ்பெற்ற கேப்டனாகவும் இருந்தார். இந்திய அணியை வெற்றிகரமான அணியாக மாற்றியதில் கங்குலிக்கு முக்கிய பங்கு உண்டு. இவரது தலைமையின் கீழ் இந்திய அணி ஏராளமான வெற்றிகளை சுவைத்தது. பேட்டிங்கிலும் சரி , கேப்டன்ஷிப்பிலும் சரி அவர் ஆக்ரோஷமானவராகவே இருந்தார். பழிக்குப் பழியாக எதிரணிகளை தோற்கடித்து கொண்டாடியவர்.

டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் பயிற்சியாளர் ஹேமங் படானியின் பயிற்சிக் காலம் நிறைவடைந்த பின்னர் , அந்த பதவிக்கு காங்குலி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அந்த அணி பயிற்சியாளர் மற்றும் துணைப் பணியாளர் குழுவில் ஏராளமான மாற்றங்களை செய்து வருகிறது. ஜேஎஸ் டபிள்யூ ஸ்போர்ட்ஸ் நிறுவனம் 2027 மற்றும் 2028 ஐபிஎல் தொடர்களுக்கான செயல்பாட்டுக் கட்டுப்பாட்டை ஏற்றுள்ள சூழலில் புதிய பயிற்சியாளர் பதவி ஏற்றுள்ளார். ரிக்கி பாண்டிங் அந்த அணியில் தலைமைப் பயிற்சியாளராக இருந்த போது , கங்குலியும் அந்த குழுவில் இருந்துள்ளார்

சமீப காலத்தில் SA20 தொடரின் பிரிட்டோரியா கேப்பிட்டல்ஸ் அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்றிருந்த கங்குலி, அதில் திறம்பட செயல்பட்டு வந்தார். முன்னர் அதிக சக்தி வாய்ந்த பிசிசிஐ தலைவர் மற்றும் வங்காள கிரிக்கெட் சங்கத்தின் (சிஏபி) தலைவர் போன்ற மதிப்புமிக்க பதவிகளையும் அவர் வகித்துள்ளார். கிரிக்கெட்டின் பல்வேறு செயல்பாடுகளின் நுணுக்கங்களையும் அவர் அறிந்தவர். அதை விட நிர்வாகத் திறனும் தலைமைப் பண்பும் போராடும் குணமும் கொண்டவராக அறியப்படுகிறார்.

Champions Trophy 2002
Saurav Ganguly

ej2008-ல் நடைபெற்ற முதல் டி20 தொடருக்குப் பின்னர் , வெற்றி பெறாத அந்த அணிக்கு கங்குலி நல்வழி காட்டுவார் என்று எதிர்பார்ப்பு தொடங்கியுள்ளது. பயிற்சிக் குழுவில் புதிய உறுப்பினர்களின் சேர்க்கை அணியில் பழைய திறமையான வீரர்களை தக்க வைக்க வேண்டியது, அதே நேரம் துடிப்பு மிக்க புதிய இளம் வீரர்களை தேர்வு செய்வதிலும் கவனம் செலுத்துகிறது. அணியினை மறுப்சீரமைப்பது , அதற்கு புத்துயிர் அளிப்பது உள்ளிட்ட நடவடிக்கை முக்கியமாக தேவைப்படுகிறது.

இந்நிலையில், கங்குலியின் கரத்தினை வலிமைப்படுத்த டெல்லி அணி நிர்வாகம் ஏற்கனவே செயலில் இறங்கி இருந்தது. புதிய பயிற்சியாளர் குழுவில் , இந்திய கிரிக்கெட்டில் அதிரடியை அறிமுகப்படுத்திய யுவராஜ் சிங் பேட்டிங் பயிற்சியாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார். இலங்கையின் முன்னாள் ஜாம்பவான் பந்துவீச்சாளரான சமந்தா வாஸ் பவுலிங் பயிற்சியாளராகவும் இருப்பதால் , கங்குலியின் சிரமம் பெருமளவில் குறையும் என்று நம்பலாம்.

இது பற்றி கங்குலி ,ஒரு அறிக்கையில் ," ஐபிஎல் தொடரில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்பதை நான் ஆவலுடன் எதிர்நோக்குகிறேன். என் இதயத்திற்கு நெருக்கமானது டெல்லி கேப்பிட்டல்ஸ் அணி , அந்த அணியுடன் பல ஆண்டுகாலம் நல்ல உறவில் நான் இருந்து வருகிறேன்,"என்று குறிப்பிட்டிருந்தார்.

logo
Kalki Online
kalkionline.com