ரோகித் சர்மாவை புகழ்ந்து தள்ளிய தென்னாப்பிரிக்க வீரர்கள்!

Rohit Sharma
Rohit Sharma

இந்தியா தென்னாபிரிக்கா ஆகிய இரு அணிகள் டி20 உலகக்கோப்பைத் தொடரின் இறுதிப்போட்டியில் மோதவுள்ள நிலையில், தென்னாப்பிரிக்க வீரர்கள் ரோகித் சர்மாவை புகழ்ந்து பேசியிருப்பது தற்போது வைரலாகி வருகிறது. இதுகுறித்த கூடுதல் தகவல்களை இப்போது காண்போம்.

உலகளவில் அதிக ரசிகர்களால் பார்க்கப்படும் விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் ஒன்று. பல நாடுகளில் இதன் தாக்கத்தை தற்போது காண முடிகிறது. இதன் வரிசையில் 20 நாடுகள் பங்கேற்ற 9வது டி20 உலகக்கோப்பைத் தொடர் அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸில் நடந்து வருகிறது. இதன் இறுதி ஆட்டத்தில் இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்கா அணிகள் இன்று மோதவுள்ளது. இந்த நிலையில் இந்திய அணியின் கேப்டன் ரோகித் சர்மாவை புகழ்ந்துள்ளனர் தென்னாப்பிரிக்க வீரர்கள்.

டி20 உலகக்கோப்பைத் தொடரில் நடந்த லீக் போட்டிகள், சூப்பர் 8 சுற்று மற்றும் அரையிறுதி என எதிலும் தோல்வியை சந்திக்காத இரு அணிகள் இறுதிப் போட்டியில் மோதுவது இதுவே முதல் முறையாகும். பலம் வாய்ந்த இரு அணிகள் மோதிக் கொள்ளும் இறுதிப்போட்டியில் வெற்றி பெறுவது யார் என்பது கணிக்க முடியாத ஒன்று. இருப்பினும் வெற்றிக்காக இரு அணிகளும் தங்களால் முடிந்த அளவிற்கு போராடும் என்பதால் ஆட்டத்தின் விறுவிறுப்புக்குப் பஞ்சம் இருக்காது.

முதல் முறையாக ஐசிசி தொடரின் இறுதிப்போட்டிக்கு தகுதி பெற்றுள்ள தென்னாப்பிரிக்க அணி முதல் டி20 கோப்பையை கைப்பற்றுமா அல்லது 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஐசிசி கோப்பையை வெல்ல முடியாமல் தவித்து வரும் இந்திய அணி வெல்லுமா என்பதைப் பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும். அனல் பறக்கும் இறுதி ஆட்டம் தொடங்குவதற்கு முன், தனிப்பட்ட முறையில் தென்னாப்பிரிக்க வீரர்களான கேசவ் மகாராஜ், ஹென்ரிச் கிளாஸன், டேவிட் மில்லர் மற்றும் ககிசோ ரபடா ஆகியோர் ரோகித் சர்மாவின் பேட்டிங் மற்றும் கேப்டன்சி திறனைப் பாராட்டி பேசியிருப்பது தற்போது கவனத்தை ஈர்த்துள்ளது.

இதையும் படியுங்கள்:
ஜூலை 5-ல் டிஎன்பிஎல் கிரிக்கெட் திருவிழா!
Rohit Sharma

கேசவ் மகாராஜ் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா பற்றி கூறுகையில், நான் ரோகித்தின் மிகப்பெரிய ரசிகன்; பயம் என்பதே அறியாத மிகச் சிறந்த கிரிக்கெட் வீரர் இவர் என புகழ்ந்துள்ளார்.

உலகின் தலைசிறந்த பௌலரான ககிசோ ரபடா கூறுகையில், ரோகித் சர்மா உலகின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் எனப் புகழ்ந்துள்ளார்.

ஹென்ரிச் கிளாஸன் கூறுகையில், கிரிக்கெட் விளையாட்டில் யாராலும் நம்ப முடியாத அளவில் சிறந்த மூளைக்காரராக இருக்கிறார் என்றும், கிரிக்கெட்டின் நுணுக்கங்கள் குறித்து ரோகித்துடன் கலந்து பேச ஆர்வமாக இருக்கிறேன் என்றும் தெரிவித்துள்ளார்.

களத்தில் பதற்றமின்றி விளையாடும் ரோகித்தின் நிதானமான ஆட்டத்தைக் கண்டு வியப்பாக இருக்கிறது. மேலும் டி20 ஆட்டங்களில் மிகச் சிறந்த பினிஷராக இவர் இருக்கிறார் என டேவிட் மில்லர் தெரிவித்துள்ளார்.

தென்னாப்பிரிக்க வீரர்களின் இந்தப் புகழ்ச்சி, கிரிக்கெட்டில் விளையாட்டைத் தாண்டிய ஒரு புரிதலை நமக்கெல்லாம் உணர்த்துகிறது. எதிரணியாகவே இருந்தாலும் அவர்களின் திறமையௌ மதிப்பது என்பது மிகச் சிறந்த குணமாகும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com