தென்னிந்திய கிரிக்கெட் அணிகளை அவ்வளவு எளிதாக வீழ்த்த முடியாது – ராகுல் ட்ராவிட்!

Rahul Dravid talk about south indian cricket teams
Rahul Dravid
Published on

ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்ட ராகுல்  ட்ராவிட் தென்னிந்திய கிரிக்கெட் அணிகளை வீழ்த்துவது நினைப்பதைவிட கஷ்டம் என்று பேட்டியளித்திருக்கிறார்.

இந்திய அணியின் முன்னாள் பயிற்சியாளர் ராகுல் ட்ராவிட் கடந்த டி20 உலகக்கோப்பை தொடர் வரை பதவியில் இருந்தார். பின்னர் தனது பதவியிலிருந்து ஓய்வுபெற்றார். அந்த பதவிக்கு கவுதம் கம்பீர் தேந்தெடுக்கப்பட்டார். பின் ராகுல் ட்ராவிட் தனது குடும்பத்துடன் நேரத்தை செலவிட்டு வந்தார்.

மறுபக்கம் ஐபிஎல் தொடரின் ஏற்பாடுகள் வேகமாக நடைபெற்று வருகின்றன. ராஜஸ்தான் அணியின் புதிய பயிற்சியாளராக ராகுல் ட்ராவிட் நியமிக்கப்பட்டார். ராகுல் ட்ராவிட் அணியை ஒற்றுமையுடன் கொண்டுசென்று வெற்றிப் பழத்தை பறிக்க வைப்பவர். ஆகையால், அவர் பயிற்சியளிக்கும் அணி வெற்றிபெற அதிக வாய்ப்பிருக்கிறது. அதேபோல், கவுதம் கம்பீர் பயிற்சி அளிக்கும் முறை வேறாக இருந்தாலும், இவரும் அணியை வெற்றிபெற வைக்க என்ன வேண்டுமென்றாலும் செய்வார். ஆகையால், இவர்கள் பயிற்சியளிக்கும் அணிகள் நேருக்கு நேர் மோதும்போது  மிகவும் சுவாரசியமாக இருக்கும் என்பது மட்டும் உண்மை.

இந்தநிலையில், மவுண்ட் ஜாய் கிரிக்கெட் கிளப்பின் 50வது ஆண்டு கொண்டாட்டத்தில் கலந்துக்கொண்டு பேசியிருக்கிறார், ராகுல் ட்ராவிட். “இந்திய கிரிக்கெட்தான் உலகிலேயே மிகவும் பவர்ஃபுல் ஆனது. அதற்கான காரணம், திறமையான வீரர்கள் இந்தியா முழுவதிலுமிருந்து வருகிறார்கள். நமது நாட்டின் ஒவ்வொரு மூலையிலும் வீரர்கள் உருவாக்கப்படுகிறார்கள். ஜிஆர் விஸ்வநாத் காலத்தில் அல்லது நான் அறிமுகமான காலத்தில் பார்த்தால், பெரிய நகரங்களில் இருந்து மட்டும் தான் கிரிக்கெட் வீரர்கள் இந்திய அணிக்கு விளையாடுவார்கள்.

சிறிய நகரங்களிலோ அல்லது கிராமத்திலோ திறமையான வீரர்கள் இருந்தாலும், அவர்கள் கிரிக்கெட் விளையாடுவதற்கு பெரிய நகரங்களை நோக்கி வர வேண்டும். ஆனால் இந்திய அணியில் இன்று விளையாடும் வீரர்கள் நாட்டின் பல்வேறு திசைகளில் இருந்தும், சிறிய கிராமங்களில் இருந்தும் வரத் தொடங்கியுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
படுகுழியை நோக்கிச் செல்லும் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி! வாசிம் அக்ரம் கடும் விமர்சனம்!
Rahul Dravid talk about south indian cricket teams

என்னுடைய காலத்தில் தென்னிந்திய அணிகள் என்றால், ஹைத்ராபாத் மற்றும் தமிழ்நாடு அணிகளே தீவிரமாக விளையாடுவார்கள். ஆனால், இன்று தென்னிந்திய அணிகளை வீழ்த்துவது அவ்வளவு சுலபமான காரியம் அல்ல. இந்த நிலை தொடர வேண்டுமென்றால் கிளப் கிரிக்கெட் வலிமையாக இருக்க வேண்டும். அதேபோல் கிரிக்கெட் ஒரு சிலரின் கைகளுக்கு மட்டும் சென்றுவிடக் கூடாது. அதேபோல், ஆண்கள் பெண்கள் என இரு தரப்பினருக்கும் சமமாக வாய்ப்புகள் கிடைக்க வேண்டும்." என்று பேசினார்.


Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com