மீண்டும் சாம்பியனான ஸ்பெயின் !

வெண்கலம் வென்ற நைஜீரியா!
ஸ்பெயின்
ஸ்பெயின்
கல்கி டெஸ்க்

1941 முதல் 2021 வரை வெளிவந்த கல்கி குழும அச்சுப் பதிப்புகளின் களஞ்சியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்டு டிஜிட்டல் வடிவில் மீள்பதிப்பிக்கப்படும் கட்டுரைகளைக் கல்கி டெஸ்க் தொகுத்து வழங்குகிறது. கல்கி குழுமத்தின் 80 ஆண்டுகால பத்திரிகை மரபில் வெளிவந்த இக்கட்டுரைகளின் அசல் உள்ளடக்கம் மாறாமல் இன்றைய வாசகர்களுக்கேற்பச் சரிபார்க்கப்பட்டு வழங்கப்படுகிறது.

Updated on

உலக கோப்பை கால்பந்து தொடரில் ஸ்பெயின் மீண்டும் கோப்பை வென்றது. பைனலில் 1-0 என, கொலம்பியாவை வீழ்த்தியது.

இந்தியாவில், 17 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 'பிபா' உலக கோப்பை கால்பந்து 7 வது சீசன் நடந்தது. இதன் பைனலில் கொலம்பியா, ஸ்பெயின் அணிகள் மோதின. முதல் பாதி முடிவில், கோல் எதுவுமின்றி சமநிலையில் இருந்தது.

இரண்டாவது பாதியின் 48 வது நிமிடத்தில் ஸ்பெயினின் கிறிஸ்டினா லிப்ரான் அடித்த கோல் கையில் பட்டுச் சென்றதாக மறுக்கப்பட்டது. பின், 82 வது நிமிடத்தில் கொலம்பியாவின் அனாகுஸ்மான் 'சேம்சைடு' கோல் அடித்தார்.

சாம்பியனான ஸ்பெயின்
சாம்பியனான ஸ்பெயின்

ஆட்டநேர முடிவில் ஸ்பெயின் அணி 1-0 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தொடர்ந்து 2 வது முறையாக (2018, 2022) சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. இதன்மூலம் அதிக முறை கோப்பை வென்ற அணிகளுக்கான பட்டியலில் முதலிடத்தை வடகொரியாவுடன் (2008, 2016) பகிர்ந்து கொண்டது.

மூன்றாவது இடத்துக்கான போட்டியில் நைஜீரியா, ஜெர்மனி அணிகள் மோதின. விறுவிறுப்பான இப்போட்டி ஆட்ட நேர முடிவில் 3-3 என சமநிலையில் இருந்தது. பின், 'பெனால்டி ஷூட் அவுட்' முறையில் அசத்திய நைஜீரியா 3-2 என்ற கணக்கில் வெற்றி பெற்று, வெண்கலப் பதக்கத்தை தட்டிச் சென்றது.

logo
Kalki Online
kalkionline.com