#BREAKING ஐபிஎல் 2026: 242 ரன்கள் குவித்து அதிரடி: டெல்லியை வீழ்த்தி அசத்திய ஹைதராபாத்..!

ஹைதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று நடைபெற்ற 31-வது லீட் ஆட்டத்தில் டெல்லியை வீழ்த்தி ஐதராபாத் தனது 4-வது வெற்றியை பதிவு செய்தது.
Sunrisers Hyderabad team
Sunrisers Hyderabad teamimage credit-outlookindia.com
Updated on

19-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.

ஹைதராபாத்தின் ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று நடைபெறும் 31-வது லீட் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, டெல்லி கேப்பிட்டல்சை எதிர்கொள்கிறது.

நடப்பு ஐபிஎல் போட்டியில் ஐதராபாத் விளையாடிய 6 போட்டிகளில் 3-ல் வெற்றி பெற்றுள்ளது. டெல்லி 5 போட்டிகளில் விளையாடிய 3-ல் வெற்றி பெற்றுள்ளது. அந்த வகையில் நடப்புத் தொடரில் இரு அணிகளுமே தலா 3 வெற்றிகளைப் பெற்று, புள்ளிப்பட்டியலில் ஹைதராபாத் 4-வது இடத்திலும், டெல்லி 5-வது இடத்திலும் உள்ளன.

இப்போட்டியில் இரு அணிகளுமே ஏறக்குறைய சரிசம பலத்துடன் 4-வது வெற்றியை நோக்கி வரிந்துகட்டுவதால் களத்தில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

இவ்விரு அணிகளும் இதுவரை 26 முறை நேருக்கு நேர் மோதியதில் 13-ல் ஐதராபாத்தும், 12-ல் டெல்லியும் வெற்றி பெற்றுள்ளன. ஒரு ஆட்டம் முடிவு இல்லாமல் போனது.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸில் வெற்றி பெற்ற டெல்லி அணி பந்துவீச்சை தேர்வு செய்ய, அதன்படி பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய ஹைதராபாத் அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 242 ரன்களை குவித்தது.

மெகா இலக்கான 243 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய டெல்லி அணி ஐதராபாத் அணியின் நெருக்கடியை சமாளிக்க முடியாமல் இறுதியில் 47 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இதன் மூலம் ஐதராபாத் அணி 4-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com