SRH Vs KKR: ஐபிஎல் இறுதி போட்டிக்கு முன்னேறப்போவது யார்?

Shreyas Iyer and Cummins
Shreyas Iyer and Cummins

ஐபிஎல் போட்டிகளில் மிகவும் முக்கியமான போட்டி இன்று நடைபெறவுள்ளது. ஹைத்ராபாத் மற்றும் கொல்கத்தா அணிகளுக்கு இடையே முதல் ப்ளே ஆஃப் சுற்று நடைபெறவுள்ளது. இன்றைய போட்டியில் வெற்றிபெறுபவர்களே இறுதிபோட்டிக்கு முன்னேறக்கூடும்.

நடப்பு ஐபிஎல் தொடரில் 10 அணிகள் மோதிக்கொண்டன. அதில் லீக் போட்டிகளில் படிப்படியாக முன்னேறி நான்கு அணிகள் புள்ளிப்பட்டியலில் முதல் நான்கு இடங்களைப் பிடித்துள்ளன. அந்தவகையில், பெங்களூரு அணி, கொல்கத்தா அணி, ஹைத்ராபாத் அணி, ராஜஸ்தான் அணி ஆகிய நான்கு அணிகளும் ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறினர். இன்று அகமதாபாத்தில் நரேந்திர மோதி மைதானத்தில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த கொல்கத்தா அணி மற்றும் ஹைத்ராபாத் அணி நேருக்கு நேர் மோதவுள்ளன.

இதில் வெற்றிபெறும் அணி நேரடியாக இறுதி சுற்றுக்கு செல்லும். தோல்விபெறும் அணிக்கு மறுவாய்ப்பு அளிக்கப்படும். அதாவது, இன்று தோல்வியடையும் அணி, நாளை நடைபெறவிருக்கும் வெளியேற்றுதல் சுற்றில் வெற்றிபெறும் அணியுடன் மோதும். அந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணியே இறுதிப்போட்டிக்கு செல்லும்.

2012 மற்றும் 2014ம் ஆண்டுகளில் கோப்பை வென்ற கொல்கத்தா அணி நடப்பு ஆண்டு ஐபிஎல் சுற்றின் லீக் சுற்றில், 14 ஆட்டங்களில் 9 வெற்றி, 3 தோல்வி, 2 போட்டிக்கு முடிவில்லை என 20 புள்ளிகளுடன் முதல் இடத்தைப் பிடித்தது. இதனையடுத்து இந்த அணி முதல் அணியாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறியது. ப்ளே ஆஃப் சுற்றுக்கு இதுவரை 7 முறை இந்த அணி அடி எடுத்து வைத்திருக்கிறது. இது 8வது முறையாகும்.

கொல்கத்தா அணியை பொறுத்தவரை சுனில் நரைன் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் பலமாக இருந்து வருகிறார். இவருக்கு இணையாக விளையாடிய பில் சால்ட் உலகக்கோப்பை பயிற்சிக்காக நாடு திரும்பியுள்ளார். இது அணியின் பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது. அதேபோல், ஸ்ரேயாஸ், வெங்கடேஷ் ஐயர் மற்றும் ரிங்கு சிங் இன்னும் ஃபார்முக்கு வராததால், தெளிவாக சொல்ல முடியாது. போட்டி எப்படி வேண்டுமென்றாலும் மாறலாம்.

2016ம் ஆண்டு சேம்பியன் வென்ற ஹைத்ராபாத் அணி நடப்பு ஆண்டு ஐபிஎல் தொடரில் தொடக்கத்திலிருந்தே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. 14 லீக் ஆட்டங்களில் விளையாடி, 8 வெற்றி, 5 தோல்வி, ஒரு முடிவில்லை என 17 புள்ளிகள் பெற்று இரண்டாம் இடத்தைப் பிடித்தது. இந்த அணி 7வது முறையாக ப்ளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுகிறது.

இதையும் படியுங்கள்:
“இதை என்னால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை” – பெங்களூரு அணி குறித்து பேசிய கவுதம் கம்பீர்!
Shreyas Iyer and Cummins

நடப்பு ஐபிஎல் தொடரில் மட்டும் ஹைத்ராபாத் அணி 6 முறை 200 க்கும் மேல் ரன்கள் எடுத்து அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. டிராவிஸ் ஹெட், அபிஷேக் ஷர்மா, ஹென்ரிச், நிதிஷ் குமார், ராஹுல் திரிபாதி ஆகியோர் சிறப்பாக விளையாடுகிறார்கள். அதேபோல் பந்துவீச்சில், நடராஜன், கம்மின்ஸ், புவனேஷ் குமார் ஆகியோர் சிறப்பாக செயல்படுகிறார்கள்.

ஒருவேளை மழையால் போட்டி தடைப்பட்டது என்றால், அடுத்த நாள் போட்டி நடத்தப்படும். அப்போதும் மழை தடுத்துவிட்டது என்றால், புள்ளிப்பட்டியலில் முன்னிலை வகிக்கும் அணியே வெற்றிபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com