#BREAKING ஐபிஎல் 2026: ஐதராபாத் அணியை வீழ்த்தி வெற்றி வாகை சூடிய லக்னோ..!!

இன்றைய லீக் போட்டியில் ஐதராபாத் அணியை 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, லக்னோ அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
SRH vs LSG
SRH vs LSG
கவிதா பக்கிள்

வணக்கம், என் பெயர் கவிதா. நான் பிரபல நாளிதழில் 14 வருடங்களாக Content Writer-ஆக பணிபுரிந்திருக்கிறேன். தற்போது பாரம்பரியமும், கலைத்துவமும் நிறைந்த கல்கி குழுமத்தின் இணையதளம் வாயிலாக எனது படைப்புகளை வெளியிடுவதில் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். செய்திகள், விளையாட்டுச் செய்திகள், சினிமா செய்திகள், கலை, ஆன்மிகம், யோகா போன்ற செய்திகளை பதிவிடுவதன் மூலம் உங்கள் கவனத்தை ஈர்க்க கடினமாக உழைக்கிறேன். உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற என்னால் முடிந்தவரை முயற்சி செய்வேன்.

Updated on: 

10 அணிகள் இடையிலான 19-வது ஐபிஎல் கிரிக்கெட் தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இன்றைய கிரிக்கெட் திருவிழாவில் இரு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகிறது.

முதல் லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியனான சன்ரைசர்ஸ் ஐதராபாத், லக்னோ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணியை எதிர்கொள்கிறது.

இவ்விரு அணிகளும் இதுவரை 6 முறை நேருக்கு நேர் மோதியதில் லக்னோ 4-2 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

இன்றைய போட்டிக்கான டாஸில் வென்ற லக்னோ அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதனை தொடர்ந்து பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய ஐதராபாத் அணி 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 156 ரன்களை எடுத்தது.

அதனை தொடர்ந்து 157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களம் இறங்கிய லக்னோ அணி ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி இறுதியில் 5 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த வெற்றியின் மூலம் லக்னோ அணி தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com