SRH Vs LSG: சமபல அணிகள் மோதல்… 7வது வெற்றி யாருக்கு?

SRH Vs LSG
SRH Vs LSG

இன்று ராஜிவ் காந்தி சர்வதேச மைதானத்தில் ஹைத்ராபாத் மற்றும் லக்னோ அணிகள் இடையே ஐபிஎல் தொடரின் 57வது போட்டி நடைபெறவுள்ளது. இதுவரை இரு அணிகளுமே தலா 6 போட்டிகளில் வென்றுள்ளதால், இன்று யார் வெற்றிபெற்று முன்னேறுவார் என்ற எதிர்ப்பார்ப்புகள் கூடியுள்ளன.

ஐத்ராபாத் அணி இந்த சீசனில் இதுவரை 11 போட்டிகளில் விளையாடி 6 போட்டிகள் வெற்றிபெற்று, 5 போட்டிகளில் தோல்வி என 12 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இதனால் ஹைத்ராபாத் அணி புள்ளிப்பட்டியலில் நான்காவது இடத்தில் உள்ளது. இந்த அணி தனது எஞ்சிய 3 ஆட்டங்களில் 2-ல் வெற்றி பெற்றால் மட்டுமே ப்ளே ஆஃப் சுற்றிற்குள் செல்ல இயலும். ஹைத்ராபாத் அணி நடப்பு தொடரில், ஒரு பலம் வாய்ந்த அணியாக இருந்து வருகிறது. இந்த அணிக்கு 200 ரன்களுக்கு மேல் எடுப்பது கைவந்த கலையாக உள்ளது.

ஏனெனில், நடப்பு தொடரில் மட்டும் 3 முறை 260 ரன்களுக்கு மேல் குவித்து, வியக்க வைத்த ஐத்ராபாத் அணியின் பேட்டிங் வலுவாக இருக்கிறது. ஆனால் இந்த அணி கடைசியாக விளையாடிய மூன்று போட்டிகளில் சரிவை சந்தித்ததால், இன்றைய ஆட்டத்தை கணிப்பது கடினம்.

லக்னோ அணியும் 11 ஆட்டங்களில் விளையாடி 6 வெற்றிகள், 5 தோல்விகள் என 12 புள்ளிகளை பெற்றுள்ளது. புள்ளிப்பட்டியலில் ஐத்ராபாத்துக்கு இணையாக இருக்கும் லக்னோவும் அடுத்த சுற்றுக்கு செல்ல வேண்டும் என்றால், இன்னும் இரண்டு போட்டிகளில் வெற்றிபெறுவது அவசியம். ஆகையால், இரு அணிகளும் இந்த போட்டியில் வெற்றிபெற்றே ஆக வேண்டும் என்று மல்லுக்கட்டும். எந்த அணி இந்த வெற்றியை சாதகமாக்கி அடுத்த சுற்றுக்கு போகும் என்பதைப் பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

மயங்க் யாதவ் காயம் காரணமாக அணியிலிருந்து வெளியேறினார். அதேபோல், இடக்கை வேகப்பந்து வீச்சாளர் மொசின் கான் காயத்தால் அணியிலிருந்து விலகியதும், லக்னோ அணியின் பந்து வீச்சில் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படியுங்கள்:
DC Vs RR: ப்ளே ஆஃப் செல்லுமா ராஜஸ்தான் அணி?
SRH Vs LSG

இவ்விரு அணிகளும் இதுவரை 3 முறை நேருக்கு நேர் மோதி இருக்கின்றன. இதில் மூன்று முறையும் லக்னோ அணியே வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

இன்றைய ஆட்டத்தில் யார் 7வது வெற்றியை பெற்று அடுத்த சுற்றுக்கு முன்னேர்வார்கள் என்ற எதிர்ப்பார்ப்பு அதிகம் இருப்பதால், இன்றைய போட்டியில் சுவாரசியத்திற்கு பஞ்சம் இருக்காது என்றே கூற வேண்டும்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com