#BREAKING IPL 2026: ஹைதராபாத் அணியின் எழுச்சி! தோல்வியே காணாத ராஜஸ்தான் ராயல்ஸை வீழ்த்தி அதிரடி வெற்றி..!!

ராஜீவ் காந்தி மைதானத்தில் அரங்கேறிய இன்றைய போட்டியில் ராஜஸ்தானை 57 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி ஐதராபாத் அணி வெற்றி வாகை சூடியது.
Sunrisers Hyderabad
SRH vs RRimage credit-newsbytesapp.com
Updated on

ஐதராபாத் ராஜீவ் காந்தி மைதானத்தில் இன்று நடைபெறும் 21-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன்ரைசர்ஸ்-ராஜஸ்தான் ராயல்ஸ் அணிகள் மோதுகின்றன.

நடப்பு ஐபிஎல் தொடரில் இதுவரை ராஜஸ்தான் விளையாடியுள்ள நான்கு போட்டிகளிலும் வெற்றிப் பெற்று புள்ளிப் பட்டியலில் முதலிடத்தில் உள்ளது. ஹைதராபாத் அணியோ நான்கில் ஒன்றில் மற்றுமே வெற்றிப் பெற்றுள்ளது.

இந்நிலையில் இன்றைய போட்டிக்கான டாஸ் போடப்பட்டதில் டாஸ் வென்ற ராஜஸ்தான் அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.

அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களத்தில் இறங்கிய ஹைதராபாத் அணி 20 ஓவர் முடிவில், 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 216 ரன்களை குவித்தது.

மெகா இலக்கான 217 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய ராஜஸ்தான் அணி, ஆரம்பம் முதலே எதிரணியின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி, இறுதியில் 57 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.

இந்த வெற்றியின் மூலம் ஹைதராபாத் அணி தனது 2-வது வெற்றியை பதிவு செய்துள்ள அதேவேளையில் நடப்பு ஐபிஎல் தொடரில் முதல்முறையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணி தோல்வியை சந்தித்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com