டெஸ்ட் மேட்ச்சுக்களும் கடைசி வரையில் எதிர் பார்ப்புக்களை அதிகரிக்க செய்வதுடன் அல்லாமல் சாதனைகளையும் படைக்கின்றன.
வெற்றி பெற இலக்கு 511 ரன்கள்.
முதல் டெஸ்ட். சில்ஹெட் ஸ்டேடியம், வங்க தேசம்.
22 - 25 மார்ச் , 2024
முதலில் பேட்டிங் ஆடிய ஸ்ரீலங்கா அணி ஆல் அவுட் 280 ரன்கள்.
முதல் 5 விக்கெட்டுக்களை இழந்து தவித்துக் கொண்டிருந்த ஸ்ரீ லங்கா அணிக்கு , உதவி வந்தது இரண்டு வீரர்களால். தனஞ்சய டி சில்வா கேப்டன், கமிண்டு மெண்டிஸ். இருவரும் சேர்ந்து வங்க தேசப் பவுலிங்கை பல திக்குகளில் பறக்க விட்டனர். ஆரம்பம் முதல் விக்கெட்டுக்களை இழந்து வந்த நிலைமை மாறி , ரன்கள் வேகமாக முன்னேறின.
இந்த இருவரும் சதங்கள் எடுத்தனர். கேப்டன் அடித்தது 102 ( எதிர் கொண்ட பந்துக்கள் 131. 12 பவுண்டரிகள். 1 சிக்ஸர் )
கமிண்டு மெண்டிஸ் எடுத்ததும் அதே 102 ரன்கள் ( ஆடிய பந்துக்கள் 127. 11 பவுண்டரிகள். 3 சிக்ஸர் கள் )
இருவரின் பார்ட்னர்ஷிப் பெற்று தந்த ரன்கள் 202.
இந்த இருவரின் சிறப்பான ஆட்டத்தினால் ஸ்கோரில் முன்னேற்றம் ஏற்பட்டு ஸ்ரீலங்கா 280 ரன்கள் எடுக்க முடிந்தது.
வங்க தேசம் அணி 83 ரன்கள் எடுத்த பொழுது 5 விக்கெட்டுக்களை இழந்தது. ஆனால் ஸ்ரீலங்காவின் சிறந்த பவுலிங், பீல்டிங்கால் 188 ரன்களுக்கு ஆல் அவுட் ஆகிவிட்டது.
92 ரன்கள் முன்னிலையில் இரண்டாவது இன்னிங்சை தொடர்ந்த ஸ்ரீ லங்கா அணி வெளுத்து வாங்கி விட்டது. ஸ்கோர் 418.
திமுத் கருணரத்னே 52, கேப்டன் தனஞ்சய டி சில்வா 108 (179 பந்துக்கள். 9 x 4 & 2 x 6 )
கமிண்டு மெண்டிஸ் 164 ( 237 பந்துக்கள். 16 x 4 & 6 x 6 )
இவர்களது இந்த இன்னிங்ஸ் பார்ட்னர்ஷிப் பெற்று தந்த ரன்கள் 173
இரண்டு இனிங்க்சிலும் இந்த ஜோடி அட்டகாசமான ஆட்டத்தை வெளிப் படுத்தினர்.
இருவரையும் அவுட் செய்ய வங்க தேச பவுலர்கள் மிகவும் பிரயர்த்தன பட வேண்டியிருந்தது.
ஒரே டெஸ்டில், இந்த இரு வீரர்களும் இரண்டாவது இன்னிங்சிலும் தொடர்ந்து சதங்கள் எடுத்து சரித்திரம் படைத்தனர்.
நான்காவது இன்னிங்சில் வெற்றி பெற எடுக்க வேண்டிய கடினமான 511 ரன்கள் இலக்குடன் களம் இறங்கிய வங்க தேச அணிக்கு அதிர்ச்சி வரவேற்றது.
51 ரன்கள் குவிப்பதற்குள் 6 விக்கெடுக்களை இழந்து தத்தளித்துக் கொண்டு இருந்தனர்.
ஒரு மாதிரி தேறி, ரன்கள்
அடிக்க முயன்றனர். ஸ்ரீலங்காவின் சிறப்பான பவுலிங், பீல்டிங்கை தாக்கு பிடிக்க முடியவில்ல.
182 ரன்களுக்கு ஆல் அவுட்.
விஸ்வா பெர்னான்டோ 7, கசுன் ரஜிதா 8 விக்கெட்டுக்கள் எடுத்தனர்.
வங்க தேச வீரர் மொமினுல் ஹயூ 87 *
ஸ்ரீலங்கா அணி 328 ரன்கள் வித்தியாசத்தில் மகத்தான வெற்றி பெற்றது, அதுவும் வங்க தேச மண்ணில்.
ஸ்ரீலங்கா வீரர்கள் அடித்த சிக்ஸர்களும், பவுண்டரிகளும் ஒரு டெஸ்ட் மேட்ச் என்ற தோற்றத்திற்கு பதிலாக டி 20 மேட்ச் காணும் எண்ணத்தை உருவாக்கியது உண்மை.