"ஹைதராபாத் பசங்க பிரியாணி கிண்டிட்டாங்க!" - நியூசிலாந்தை புரட்டி எடுத்த ஸ்ரீகாந்த் கலக்கல் பேட்டி!

நியூசிலாந்துக்கு எதிரான 2வது டி20 போட்டியில் திலக் வர்மா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டியின் அதிரடி வெற்றியைக் கொண்டாடிய ஸ்ரீகாந்த்!
sri kanth interview
sri kanth interview Deccan Herald, Instagram
ராஜமருதவேல்

வணக்கம்! நான் வி.ராஜமருதவேல். பொறியியல் படித்து சில வெளிநாடுகளில் பணிபுரிந்துள்ளேன். தற்போது வங்கி மற்றும் காப்பீட்டு துறையில் பணியாற்றுகிறேன். சிறு வயதில் இருந்தே புத்தகத்தின் மீதும் எழுத்தின் மீது தீராத ஈர்ப்பு எனக்குண்டு. சில வருடங்களாக வலைத்தளங்களில் எழுத தொடங்கி, கல்கியில் எழுதும் வாய்ப்பு கிடைத்தது. வாய்ப்பளித்தமைக்கு நன்றி! ஆன்மீகம், ஆரோக்கியம், பயணம், மோட்டிவேஷன், விளையாட்டு, பசுமை/சுற்றுச்சுழல், கலை/கலாச்சாரம், செய்திகள், வெள்ளித்திரை ஆகிய பிரிவுகளில் எழுதி வருகின்றேன். என் எழுத்துக்கள் மற்றவர்களையும் கவரும் என்று நம்புகிறேன். வரலாற்றுக் சிறுகதைகள், வரலாற்றுத் தொடர்கள் எழுத ஆவல்! நன்றி! ஜெய் ஹிந்த்!

Updated on: 

இந்த கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் ஶ்ரீகாந்த் , முதன்முதலாக இந்திய அணி ஒருநாள் உலக கோப்பையை வென்ற போது அணியில் இடம்பெற்றவர். தமிழ்நாட்டை சேர்ந்த இவர் அவ்வப்போது கிரிக்கெட் குறித்தும், கிரிக்கெட் வீரர்கள் குறித்தும் தனது கருத்துக்களை வெளிப்படையாக முன்வைப்பார். சமீபத்தில் நடைபெற்ற நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் இந்திய அணியின் திறமையான ஆட்டத்தினை அவர் பாராட்டியுள்ளார். பாராட்டுவது மட்டுமல்லாமல் ஆட்டம் சரியாக இல்லை எனில் கடுமையாக விமர்சிக்கவும் ஸ்ரீகாந்த் தயங்குவதில்லை. நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் முதல் போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி , இரண்டாவது போட்டியில் வெற்றி பெறுமா? என்னும் சந்தேகம் ஏற்பட்டது.

கிறைஸ்ட்சர்ச்சில் நடைபெற்ற இரண்டாவது போட்டியில், நியூசிலாந்து அணி அடித்த 181 ஸ்கோரை விரட்ட தொடங்கிய இந்திய அணிக்கு கடுமையான அதிர்ச்சி காத்திருந்தது. இந்திய அணியும் தொடக்க ஆட்டக்காரர்களும் மிடில் ஆர்டரும் சரிந்த நிலையில் இந்திய அணி 6 விக்கெட்டுகளை இழந்து 14.5 ஓவர்களில் 112 ரன்களை மட்டுமே எடுத்து தத்தளித்துக் கொண்டிருந்தது.

அந்த தருணத்தில் இந்திய அணி வெல்வதற்கான வாய்ப்புகள் எதுவும் இன்றி போனதாக ரசிகர்கள் கவலையில் ஆழ்ந்தனர். ஆனால் , ஆட்டத்தில் எதிர்பாராத திருப்பமாக திலக் வர்மா மற்றும் நிதிஷ் குமார் ரெட்டியின் திடீர் அதிரடியில் இந்திய அணி எழுச்சி பெறத் தொடங்கியது. அவர்களின் ஒத்துழைப்பில் இந்திய அணி தோல்வியில் இருந்து வெற்றியை நோக்கிச் சென்றது. திலக் வர்மா 26 பந்துகளில் அரை சதம் (51) கடந்தார். நிதிஷ் குமார் 13 பந்துகளில் 26 ரன்களை குவித்தார்.

இறுதியில் இந்திய அணி ஒரு பந்தை மீதம் வைத்து 181 ஸ்கோரை எட்டி வெற்றியை சுவைத்தது. ஏழாவது விக்கட்டுக்கு ஜோடி சேர்ந்த இந்த அணி 30 பந்துகளில் 69 ரன்களை குவித்தனர். எதிர்பாராத இந்த வெற்றியின் காரணமாக நியூசிலாந்து மண்ணில் இந்திய அணி தொடரில் 2-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. இந்த வெற்றியை ஶ்ரீகாந்த் , " ஹைதராபாத் பசங்க(திலக் வர்மா , நிதிஷ் குமார் ரெட்டி) நியூசிலாந்து பவுலர்களை வைத்து பிரியாணி கிண்டி விட்டனர்," என்று கிண்டலாக கூறியுள்ளார்.

Thilak Nithish kumar reddy
Thilak varma and NithishInstagram

மேலும் தொடர்ந்த ஶ்ரீகாந்த் , "பெரிய மைதானம் என்பதால் , தேவையில்லாமல் சிக்சர் அடிக்க நினைக்காமல் பவுண்டரிகளை விளாசியுள்ளனர். இடைவெளி உள்ள இடங்களில் ஷாட் ஆடுவதும் , திலக் ஒரு ரன்னை இரண்டு ரன்களாக மாற்றுவதில் வல்லவராக இருந்தார். இரு பேட்ஸ்மென்களும் அழுத்தத்தை உள்வாங்கி அற்புதமாக விளையாடினர்.

இந்திய அணி வெற்றி பெற்ற இரண்டு போட்டிகளிலுமே , தோல்வியின் பிடியில் இருந்து நமன் தீர் சிறப்பான ஆட்டத்தின் மூலம் மீட்டுள்ளார். 7 வது வீரராக களமிறங்கி விரைவாக 30 ரன்களை குவிப்பது டி 20 போட்டிகளில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும். திடீரென்று அணிக்குள் புகுந்த அவர் அற்புதங்களை செய்து வருகிறார்," என்று பாராட்டியுள்ளார்.

அறிமுக வீரர் நமன் தீர் , முதல் டி 20 போட்டியில் வெறும் 15 பந்துகளில் 42 ரன்களை குவித்து இந்திய அணியின் வெற்றிக்காக விரைவாக விளையாடினார். இரண்டாவது போட்டியிலும் 31 ரன்களை விளாசி அணியின் வெற்றிக்கு பங்களித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

logo
Kalki Online
kalkionline.com