ஆடுகளம் விவகாரத்தில் இரட்டை வேடம் ஏன்? சுனில் கவாஸ்கர் காட்டம்!

Sunil Gavaskar
Sunil Gavaskar

இந்தியாவின் புகழ்பெற்ற பேட்ஸ்மென் சுனில் கவாஸ்கர், ஆடுகளம் விஷயத்தில் இரட்டை நிலையை கடைப்பிடிப்பது ஏன் என்று கேள்வி எழுப்பியுள்ளார். இந்தியாவில் விளாடும்போது ஆடுகளத்தை இந்தியர்கள் வேண்டுமென்ற தங்களுக்கு சாதகமாக அமைத்துக் கொள்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டுகிறார்கள், அதுவே தங்கள் நாடாக இருந்தால், ஆடுகளம் சரியாக இல்லாவிட்டால் அதை அமைப்பவர் சரியாக புரிந்து கொள்ளாமல் தவறு செய்துவிட்டதுபோலவும் கூறுகிறார்கள். ஏன் இந்த இரட்டை நிலை என்று கவாஸ்கர் கேள்வி எழுப்பினார்.

சமீபத்தில் கேப்டவுனில் நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி, ஆஸ்திரேலிய அணியை 7 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. எனினும் ஐந்து நாள் ஆட்டம் இரண்டு நாளில் முடிந்தது. முதல் நாளில் மட்டும் 23 விக்கெட்டுகள் சரிந்தன. கிரிக்கெட் வரலாற்றில் குறுகியகாலத்தில் நடந்து முடிந்த போட்டி இது.

இது தொடர்பாக ஆங்கில பத்திரிகைக்கு எழுதியுள்ள ஒரு கட்டுரையில் சுனில் கவாஸ்கர், முன்னாள் தென்னாப்பிரிக்க ஆல்-ரவுண்டர் ஷன் போலக், போட்டி இரண்டு நாளில் முடிந்ததற்கு ஆடுகளத்தை மைதான காப்பாளர் சரிவர அமைக்காததே காணம் என்று தெரிவித்ததை சுட்டிக்காட்டி, இந்தியாவில் நாங்கள் தவறு செய்தால் அதை வேண்டுமென்றே செய்வதாக குற்றஞ்சாட்டுகிறார்கள். ஆனால், அதே தவறை அவர்கள் செய்தால், ஏதேச்சையாக தவறு நடந்துவிட்டது என்கிறார்கள். ஏன் இந்த இரட்டை நிலை என்று கேட்டுள்ளார்.

தென்னாப்பிரிக்கா, இங்கிலாந்து, நியூஸிலாந்து, ஆஸ்திரேலியா போன்ற வெளிநாடுகளில் மைதான காப்பாளர்கள் தெரியாமல் தவறு செய்துவிட்டதாக கூறுகிறார். ஆனால், இந்தியாவில் ஆடுகளம் வறண்டதாக இருந்தால் வேண்டுமென்ற செய்தது போல் சொல்கிறார்கள். கடந்த ஆண்டு இரண்டு போட்டிகளில் ஆஸ்திரேலிய அணி தோல்வி அடைந்த போது முன்னாள் ஆஸ்திரேலிய கேப்டன் இதேபோன்ற குற்றச்சாட்டையே முன்வைத்தனர் என்றார் கவாஸ்கர்.

எனவே நாங்கள் செய்தால் வேண்டுமென்றே திட்டமிட்டு செய்தது. அவர்கள் செய்தால் அது எதேச்சையாக நடந்த தவறு என்பதுபோல் சித்தரிக்கிறார்கள். ஏன் இந்த இரட்டை வேடம் என்றார் கவாஸ்கர். இதேபோலத்தான் மூன்றாவது நடுவர் வருவதற்கு முன் அவர்கள் நாட்டு நடுவர்கள் அவுட் கொடுத்துவிட்டால் அது மனிதத் தவறு என்றனர். அதையே இங்கு தவறாக அவுட் கொடுத்துவிட்டால் ஏமாற்றுப் பேர்வழிகள் என்று குற்றஞ்சாட்டினர். இங்குள்ள நடுவர்கள் கசாப்பு கடைக்காரர்கள் என்றுகூட மோசமாக குறிப்பிட்டுள்ளனர் என்றார் கவாஸ்கர்.

இதையும் படியுங்கள்:
இந்திய பிரதமரால் கூகுளில் அதிகம் தேடப்படும் வார்த்தை!
Sunil Gavaskar

அடுத்த மூன்றுவாரங்களில் மற்றொரு டெஸ்ட் தொடர் தொடங்குகிறது. தங்கள் அணிக்கு பொருந்தாத எதுவும் விமர்சிக்கப்படும் மற்றும் புகார்கள் கடுமையாகவும் இருக்கும் என்றார் கவாஸ்கர்.

இந்திய அணி, இங்கிலாந்துக்கு எதிராக ஐந்து டெஸ்ட் போட்டிகளில் விளையாட உள்ளது. இந்த போட்டி ஜனவரி 25 இல் தொடங்குகிறது. சமீபத்தில் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் 1-1 என டிராவில் முடிந்தது. எம்.எஸ்.தோனிக்குப் பிறகு தென்னாப்பிரிக்காவில் இந்திய அணிக்கு வெற்றி தேடித் தந்த இரண்டாவது கேப்டன் ரோகித் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com