ஐபிஎல் 2026: ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அபார வெற்றி!

ஐதராபாத்தில் நடைபெற்ற 45-வது லீக் ஆட்டத்தில் ஐதராபாத்தை வீழ்த்தி கொல்கத்தா அணி வெற்றி வாகை சூடியது.
Kolkata Knight Riders team
Kolkata Knight Riders teamimage credit-espncricinfo.com
Updated on

19-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் இன்று இரண்டு லீக் ஆட்டங்கள் அரங்கேறுகின்றன. இதில் ஐதராபாத்தில் நடைபெறும் 45-வது லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான ஐதராபாத் சன் ரைசர்ஸ்- கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஐதராபாத் அணி 9 ஆட்டங்களில் ஆடி 6 வெற்றி, 3 தோல்வியுடன் 3-வது இடத்தில் உள்ளது.

3 முறை சாம்பியனான கொல்கத்தா 8 ஆட்டங்களில் ஆடி 2 வெற்றி, 6 தோல்வியுடன் 5 புள்ளிகள் எடுத்து பரிதாபமான நிலையில் உள்ளது.

இவ்விரு அணிகளும் இதுவரை 31 முறை நேருக்கு நேர் மோதியதில் 20-ல் கொல்கத்தாவும், 11-ல் ஐதரபாத்தும் வென்றுள்ளன.

இன்றைய போட்டிக்கான டாஸ் வென்ற ஐதராபாத் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்து விளையாடி நிலையில் 20 ஓவர் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 165 ரன்களை மட்டுமே எடுத்தது.

அதனை தொடர்ந்து 166 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களத்தில் இறங்கிய கொல்கத்தா ஆரம்பம் முதலே அதிரடியாக விளையாடி இறுதியில் 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது

இதன் மூலம் நடப்பு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி 3-வது வெற்றியை பதிவு செய்துள்ளது.

logo
Kalki Online
kalkionline.com