டி20 உலகக்கோப்பை 2024: வரலாற்று சாதனையை நோக்கி விராட் கோலி!

Virat Kohli
Virat Kohli

டி20 உலகக்கோப்பை தொடர் கடந்த ஜூன் 2ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்தவகையில் இந்திய வீரர் விராட் கோலி ஒரு வரலாற்று சாதனையைப் படைக்கவுள்ளார்.

இந்த டி20 தொடரில் 20 அணிகள் நான்கு பிரிவுகளாகப் பிரிந்து விளையாடி வருகின்றன. இந்தியா தனது முதல் போட்டியை ஜூன் 5ம் தேதி அயர்லாந்து அணியுடன் எதிர்கொள்கிறது. இந்த ஆட்டத்தில் வெற்றிபெறுவதற்காக, இந்தியா வங்கதேச அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. அதில் இந்திய அணி வெற்றிபெற்றது என்றாலும், அந்த ஆட்டத்தில் விராட் கோலி பங்குபெறவில்லை.

மேலும் அமெரிக்காவுக்கு வந்த விராட் கோலி எந்த ஒரு பயிற்சி முகாமிலும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. போட்டிக்கு ஒரு நாள் மட்டும் தான் இடைவெளி இருப்பதால் நியூயார்க் மைதானத்தில் பயிற்சி செய்ய இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், ஐபிஎல் தொடருக்குப் பின்னர் விராட் கோலி நேரடியாக நாளைய ஆட்டத்தில் களமிறங்கவுள்ளார்.

கடந்த 2007ம் ஆண்டு டி20 போட்டியில் டெல்லி அணிக்காக களமிறங்கிய விராட் கோலி, இதுவரை 12,735 ரன்களை எடுத்தார். இதுவரை அவர் 391 டி20 போட்டிகளில் விளையாடியுள்ளார். ஆகையால்  இன்னும் 265 ரன்கள் எடுத்தால் 13 ஆயிரம் ரன்களை எடுத்த முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார். மேலும் உலகளவில் மூன்றாவது வீரர் என்ற வரலாற்று சாதனையையும் படைப்பார். இதுவரை டி20 கிரிக்கெட் வரலாற்றில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் கிறிஸ் கெயில் 463 டி20 போட்டிகளில் விளையாடி 14,562 ரன்கள் அடித்திருக்கிறார்.

இதையும் படியுங்கள்:
இஸ்ரேல் மக்கள் மாலத்தீவிற்குள் நுழையத்தடை… வெளிப்படை எதிர்ப்பு தெரிவித்த முதல்நாடு!
Virat Kohli

இதில் 22 சதங்கள் 88 அரை சதங்களும் அடங்கும். இதேபோன்று பாகிஸ்தான் வீரர் சோயுப் மாலிக் 542 டி20 போட்டிகளில் விளையாடி 13,360 ரன்கள் அடித்திருக்கிறார். மூன்றாம் இடத்தில் பொலார்ட் இருக்கிறார். பொலார்ட் 660 டி20 போட்டிகள் விளையாடி 12,900 ரன்கள் அடித்திருக்கிறார். ஆனால், பொலார்ட் சமீபக்காலமாக அவ்வளவாக விளையாடுவதில்லை என்பதால், விராட் கோலி மூன்றாவது இடத்தைப் பிடிக்க வாய்ப்புள்ளது. மேலும் இரண்டாவது இடத்தில் இருக்கும் பாகிஸ்தான் வீரர் சோயுப் மாலிக்கின் ரெக்கார்டையும் விரைவில் விராட் முறியடித்துவிடுவார் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com