டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா?

India Vs Ireland
India Vs Ireland

டி20 உலகக்கோப்பைத் தொடரில் தனது முதல் ஆட்டத்தில் அயர்லாந்துடன் மோதவுள்ளது இந்தியா. இப்போட்டியில் இந்தியா வெற்றிபெறுமா என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் ஜூன் 2ம் தேதி டி20 உலகக்கோப்பைத் தொடர் தொடங்கியது. இந்தத் தொடரில் மொத்தம் 20 அணிகள் மோதகின்றன. குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் இருக்கின்றன.

குரூப் சி பிரிவில் நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான், உகான்டா, பாபுவா நியூ கினியா ஆகிய அணிகள் உள்ளன. குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, நேபால் ஆகிய அணிகள் உள்ளன. அரையிறுதி போட்டிகள் ஜூன் 26, 27 ஆகிய தேதிகளிலும், இறுதி போட்டி 29ம் தேதியிலும் நடைபெறவுள்ளன.

அந்தவகையில் இந்தியா தனது முதல் போட்டியில் இன்று அயர்லாந்து அணியுடன் மோதுகிறது. இந்த ஆட்டத்தில் வெற்றிபெறுவதற்காக, இந்தியா வங்கதேச அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது. அதில் இந்திய அணி வெற்றிபெற்றது என்றாலும், அந்த ஆட்டத்தில் விராட் கோலி பங்குபெறவில்லை.

அமெரிக்காவுக்கு வந்த விராட் கோலி எந்த ஒரு பயிற்சி முகாமிலும் பங்கேற்கவில்லை என்று கூறப்படுகிறது. போட்டிக்கு ஒரு நாள் மட்டும் தான் இடைவெளி இருப்பதால் நியூயார்க் மைதானத்தில் பயிற்சி செய்ய இந்திய அணிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. இதனால், ஐபிஎல் தொடருக்குப் பின்னர் விராட் கோலி நேரடியாக இன்றைய ஆட்டத்தில் களமிறங்கவுள்ளார்.

இந்த இரு அணிகளும் இது வரை 7 டி20 உலகக்கோப்பை போட்டியில் நேருக்கு நேர் சந்தித்துள்ளனர். அதில் 7 முறையும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்:
டி20 உலகக்கோப்பை 2024: வரலாற்று சாதனையை நோக்கி விராட் கோலி!
India Vs Ireland

அந்தவகையில் இரண்டு அணிகளில் விளையாடப்போகும் வீரர்களைப் பார்ப்போம்.

இந்தியா அணி :

ரோஹித் சர்மா (கேப்டன்), சஞ்சு சாம்சன், விராட் கோலி , சூர்யகுமார் யாதவ், ரிஷப் பந்த் (விக்கெட் கீப்பர்), சிவம் துபே, ஹர்திக் பாண்டியா, ரவீந்திர ஜடேஜா, குல்தீப் யாதவ், ஜஸ்பிரித் பும்ரா, அர்ஷ்தீப் சிங்.

அயர்லாந்து அணி :

பால் ஸ்டிர்லிங் (கேப்டன்), லோர்கன் டக்கர் (விக்கெட்கீப்பர்), ஆண்ட்ரூ பால்பிர்னி, ஹாரி டெக்டர், கர்டிஸ் கேம்பர், ஜார்ஜ் டோக்ரெல், கரேத் டெலானி, ராஸ் அடேர், பேரி மெக்கார்த்தி, மார்க் அடேர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com