டி20 உலகக்கோப்பை 2024: ஒரே போட்டியில் ரோஹித் ஷர்மா படைத்த உலக சாதனைகள்!

Rohit sharma
Rohit sharma

நேற்று இந்தியா மற்றும் அயர்லாந்து இடையேயான போட்டியில், இந்திய வீரர் ரோஹித் ஷர்மா உலக சாதனைகளைப் படைத்துள்ளார்.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் ஜூன் 2ம் தேதி டி20 உலகக்கோப்பைத் தொடர் தொடங்கியது. இந்தத் தொடரில் மொத்தம் 20 அணிகள் மோதுகின்றன. அந்தவகையில் இந்தியா தனது முதல் போட்டியில் நேற்று அயர்லாந்து அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் வெற்றிபெறுவதற்காக, இந்தியா வங்கதேச அணியுடன் பயிற்சி ஆட்டத்தில் விளையாடியது.

அந்தவகையில் நேற்று நியூயார்க் நகரில் நடைபெற்ற உலக்கோப்பை போட்டியில் முதலில் பேட்டிங் செய்த அயர்லாந்து 96 ரன்களிலேயே ஆல் அவுட்டானது. அதன்பிறகு இலக்கை அடைய இந்தியா, பேட்டிங்கில் களமிறங்கியபோது, ரோஹித் ஷர்மா சிறப்பாக விளையாடி அணியின் வெற்றிக்கு காரணமானார்.

அவர் 37 பந்துகளில் 52 ரன்கள் குவித்தார். அவரது ஆட்டத்தால் திணறிய அயர்லாந்து அணி எட்டு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது. இந்த போட்டியில் ரன் குவித்த ரோஹித் சர்மா சர்வதேச டி20 போட்டிகளில் 4000 ரன்களைக் கடந்தார்.

மேலும் இந்தப் போட்டியில் மூன்று சிக்ஸ் அடித்தார். அதன் மூலம் சர்வதேச கிரிக்கெட்டில் ஒட்டுமொத்தமாக 600 சிக்ஸர்களை அடித்த முதல் வீரர் என்ற இமாலய சாதனையை படைத்திருக்கிறார். மேலும், ஐசிசி தொடர்களில் 100 சிக்ஸர்களை அடித்த ஒரே இந்திய வீரர் என்ற சாதனையையும் அவர் செய்துள்ளார்.

அதன்பின்னர், சர்வதேச டி20 போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்தப் பட்டியலில் பாபர் அசாமை பின்னுக்குத் தள்ளி இரண்டாம் இடத்தைப் பிடித்தார். அதாவது இதுவரை ரோஹித் 4026 ரன்கள் அடித்திருக்கிறார். அதில் டி20 உலக கோப்பை தொடரில் மட்டும் 1000 ரன்களை கடந்தார் ரோஹித் சர்மா.

அதேபோல் சர்வதேச டி20 போட்டிகளில் குறைந்த பந்துகளில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற சாதனையையும் படைத்தார் ரோஹித். இந்த சாதனையில் விராட் கோலி, பாபர் அசாம் என இரண்டு வீரர்களையும்  பின்னுக்குத் தள்ளினார்.

இதையும் படியுங்கள்:
டி20 உலகக்கோப்பை 2024: இந்தியா தனது முதல் வெற்றியை பதிவு செய்யுமா?
Rohit sharma

அது அதுமட்டுமின்றி ஒரு நாள் போட்டி, டெஸ்ட் போட்டி மற்றும் சர்வதேச டி20 போட்டிகள் என மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் தனித் தனியாக 4000 ரன்களை கடந்த இரண்டாவது வீரர் என்ற மிகப்பெரிய சாதனையையும் ரோஹித் சர்மா செய்துள்ளார்.

இதற்கு முன்னர் விராட் மட்டுமே அந்த சாதனையைப் படைத்திருந்தார். அதேபோல் இந்திய அணியின் கேப்டனாக, அதிக வெற்றிகளை பெற்றுக்கொடுத்திருக்கிறார். நேற்றைய போட்டியையும் சேர்த்து இதுவரை 43 வெற்றிகளை பெற்றுக்கொடுத்திருக்கிறார், ரோஹித் சர்மா.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com