T20 World Cup: இறுதி ஆட்டத்தில் தென் ஆப்பிரிக்க அணி சந்திக்கப் போகும் அணி..!

South Africa
South Africa
வாசுதேவன்

எழுதுவதின் மேல் இருக்கும் ஆர்வம் காரணமாக, பல ஆண்டுகளாக என் பெயரிலும் ( வாசுதேவன் ), புனை பெயரிலும் ( மஞ்சுதேவன் ) (Pen name. Manjudevan) எழுதி வருகிறேன். பல்வேறு பத்திரிகைகளில் எனது படைப்புக்கள் வந்துள்ளன. பணி நிமித்தம் கர்நாடகா, தமிழ் நாடு, மேற்கு வங்காளம், குஜராத், மகாராஷ்டிரா பகுதிகளில் வேலை செய்யும் பொழுது, பல்வேறு மக்களை சந்திக்கவும், பழகவும் கிடைத்த வாய்ப்புக்கள், பெற்ற அனுபவங்கள் எழுத உதவுகின்றன

Updated on

தென் ஆப்பிரிக்க அணி இறுதி ஆட்டத்திற்கு இவ்வளவு சுலபமாக செல்வார்கள் என்று யாரும் (அந்த அணி உட்பட) எதிர் பார்க்கவில்லை. அது தான் கிரிக்கெட் ஆட்டத்தின் ஸ்பெஷாலிட்டி. ஆப்கானிஸ்தான் அணியில் ஒரு வீரர் மட்டும் தான் இரட்டை இலக்கு ரன்கள் எடுத்தார், 10 ரன்கள். தென் ஆப்பிரிக்க அணி 10 ஓவர்களுக்குள் வெற்றி இலக்கை அடைந்து, ஆட்டத்தை விரைவில் முடித்து விட்டனர்.

போட்டி முடிய இன்னும் இரண்டே இரண்டு ஆட்டங்கள் உள்ளன. எனவே இரண்டும் மிகவும் முக்கியம் வாய்ந்தவை. இன்று நடைப்பெறப் போகும் இந்தியா, இங்கிலாந்து ஆட்டம் எந்த அணி தென் ஆப்பிரிக்க அணியை இறுதி ஆட்டத்தில் சந்திக்கப் போகிறது என்பதை முடிவு செய்யும். ஆரம்பம் முதலே இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி தங்கள் தனி திறமைகளை ஒவ்வொரு ஆட்டத்திலும் வெளிப் படுத்தி முத்திரை பதித்து வந்துள்ளது. இன்றையயை ஆட்டத்தில் இன்னும் முனைப்போடு ஆடி அடுத்த மற்றும் இறுதி கட்டத்திற்கு செல்ல எல்லா வகை திறமைகளையும் செலுத்துவார்கள், என்று எதிர் பார்க்கலாம். முக்கிய தேவை எல்லா வீரர்களும் ஒரு அணியாக திரண்டு ஆட வேண்டும். சூழ்நிலைக்கு ஏற்ப பொறுப்புக்கள் உணர்ந்து ஆட வேண்டிய தருணம் காத்துக் கொண்டு இருக்கின்றது.

அதே சமயம் இங்கிலாந்து அணியை லேசான அணி என்று எடை போட்டு விட முடியாது. ஆரம்ப கட்டங்களில் ஒரு வேளை போட்டியை விட்டே வெளியேறி விடுமோ என்ற நிலையில் விளையாடிய இந்த அணி கிட்ட தட்ட இறுதி ஆட்டத்தை நெருங்கிவிடுமோ என்ற நிலையில் அரை இறுதி போட்டியில் பங்கு கொள்கிறது என்றால் அவர்களின் திறமையை சாதாரணமாக எண்ணி விட முடியாது. அடுத்த இரண்டு ஆட்டங்களிலும் எந்த அணி சூழ் நிலைக்கு ஏற்ப அட்ஜஸ்ட் செய்து கொண்டு முழு திறமைகளையும் அழுத்தம் மிக்க தருணங்களிலும் நிதானம் தவறாமல் விளையாடுகின்றதோ அதற்கே வாய்ப்புக்கள் பிரகாசமாக உள்ளது.

அது இங்கிலாந்து அணிக்கு இன்றும் பொருந்தும்.

இதையும் படியுங்கள்:
T20 Worldcup 2024: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது தென் ஆப்பிரிக்கா அணி!
South Africa

ஆக மொத்தம் இந்தியா, இங்கிலாந்து வீரர்கள் எப்படி ஆடப் போகின்றனர் என்பதை கணக்கில் அடங்கா ரசிகர்கள் ஆவலுடன் கண்டு களிப்பார்கள். குறிப்பாக தென் ஆப்பிரிக்க அணி வீரர்கள் மற்றும் அந்த அணிக்கு தொடர்பு உள்ளவர்கள் என்று நம்பலாம்.

இன்று சந்திக்கும் இரண்டு அணிகளிலும் திறமை உள்ள வீரர்கள் இருப்பதால் விறு விறுப்பான ஆட்டம் காத்துக் கொண்டு இருப்பதாக நம்பலாம்.

இரண்டு அணிகளிலும் பங்கு பெரும் வீரர்கள் பலர் பல T20 ஆட்டங்களில் பல்வேறு அழுத்தம் மிக்க கட்டங்களில் விளையாடியவர்கள் ஆனதால் , இரண்டு அணி வீரர்களும் போட்டிப் போட்டுக் கொண்டு விளையாடுவார்கள் என்று எதிர் பார்க்கலாம். மேலும் இன்றையை ஆட்டம் கடைசி ஓவர் வரை சென்று வெற்றி பெறப் போகும் அணிக்கு அவர்கள் ஆடப் போகும் இறுதி ஆட்டத்திற்கு ஒரு ஓத்திகையாக கூட அமைய வாய்ப்புக்கள் இருக்கின்றது. அதற்கு இன்றையை ஆட்டம் பதில் அளிக்கும்.

logo
Kalki Online
kalkionline.com