உலக கோப்பையை தொடர்ந்து டி20 போட்டியிலும் வாய்ப்புகளை இழந்த வீரர்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?

sanju samson, yuzvendra chahal
sanju samson, yuzvendra chahal
Published on

சிசி உலககோப்பை தொடரை அடுத்து இந்திய அணி ஆஸ்திரேலியா அணியை எதிர்த்து விளையாடவிருக்கும் டி20 தொடரில், இரண்டு முக்கியமான இந்திய வீரர்களுக்கு வாய்ப்பு வழங்காதது இந்திய ரசிகர்களிடையே பெரும் ஏமாற்றமாக உள்ளது.

ஐசிசி உலகக்கோப்பை தொடர் முதன் முறை இந்தியாவில் நடைபெற்று மிக விறுவிறுப்பாக நடைபெற்று அக்டோபர் 19 தேதி முடிவடைந்தது. இப்போட்டியில் ஐந்து முறை உலகக்கோப்பை வென்ற ஆஸ்திரேலியா அணி ஆறாவது முறையாகவும் உலகக்கோப்பையை வென்றது. இந்திய அணி தொடர் ஆரம்பத்திலிருந்து நன்றாக விளையாடினாலும் இறுதிப் போட்டியில் சொதப்பி பெரும் தோல்வியைச் சந்தித்தது.

இறுதிப் போட்டியில் ஆஸ்திரேலியாவை எதிர்த்து தோல்வி அடைந்த இந்திய அணி மீண்டும் அதே ஆஸ்திரேலியா அணியுடன் t20 தொடரில் மோதவுள்ளது. ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்தியா விளையாடவிருக்கும் ஐந்து போட்டிகள் கொண்ட இந்த t20 தொடர் நவம்பர் 23ம் தேதி தொடங்கவுள்ளது. T20 தொடரின் முதல் போட்டி விசாகப்பட்டினத்தில் இரவு 7 மணிக்கு தொடங்கவுள்ளது.

உலகக்கோப்பை தொடரில் ஏற்கனவே விளையாடியவர்கள் இந்த t20 தொடரில் தொடர மாட்டார்கள் எனவும் இளம் வீரர்களுக்கே முக்கியத்துவம் வழங்கப்படும் எனவும் செய்திகள் வெளியானது. ஆனால் உலகக்கோப்பை இறுதிப்போட்டியில் இந்திய அணி தோல்வியைச் சந்தித்ததை அடுத்து அந்த முடிவு மாற்றப்பட்டதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

உலகக்கோப்பையில் இந்திய வீரர் ஹார்திக் பாண்டியா காயமடைந்து தொடரிலிருந்து வெளியேறினார். மேலும் இன்னும் மூன்று மாதங்களுக்கு அவர் விளையாட முடியாது என்று மருத்துவர்கள் ஆலோசனை வழங்கினார்கள் . இதனையடுத்து இந்த t20 தொடரின் கேப்டனாக ருத்துராஜ் தேர்ந்தெடுக்கப்படுவார் என்றிருந்த நிலையில், இப்போது சூர்யா குமார் யாதவ் கேப்டனாக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்ற அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.

மேலும் துணை கேப்டனாக முதல் மூன்று போட்டிகளில் ருத்துராஜூம் கடைசி இரண்டு போட்டிகளில் ஸ்ரேயஸ் ஐயரும் தேர்ந்தெடுக்கப்பட்டனர். காயம் காரணமாக ஒய்வில் இருந்த அக்சார் பட்டேல் இந்த t20 தொடரின் மூலம் மீண்டும் கம் பேக் கொடுக்கிறார்.

மேலும் பிரசித் கிருஷ்ணா, சிவம் டூபே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் இந்திய அணிக்குத் திரும்புகின்றனர். உலகக்கோப்பை தொடரில் விளையாடிய ஷமி, பும்ரா மேலும் சிராஜ், குல்தீப் யாதவ் ஆகியோர் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.

இதையும் படியுங்கள்:
கைகளுக்கு உள்ள மரியாதை, உடலை தாங்கும் கால்களுக்கு இல்லையா? மிட்சல் மார்ஷ் மீதான கோபம் சாதிய மனநிலையா?
sanju samson, yuzvendra chahal

உலகக்கோப்பை தொடரில் இடம்பெறாத வீரர்கள் நிச்சயம் இந்த t20 தொடரில் இடம்பெறுவார்கள் என்றிருந்த நிலையில், முக்கியமான இரண்டு வீரர்கள் அணியில் தேர்ந்தெடுக்கப்படாதது ரசிகர்களுக்குப் பெரிதும் ஏமாற்றமாக உள்ளது.

இந்திய பவுலர் யுவேந்திரா சாஹல் மற்றும் பேட்ஸ்மென் சஞ்சு சாம்சன் உலகக்கோப்பை தொடரில் இடம் பெறவில்லை. இதையடுத்து ஆஸ்திரேலியாவிற்கு எதிரான t20 தொடரில் இடம்பெறுவார்கள் என பெரிதும் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் இந்த தொடரிலும் அவர்களை பிசிசிஐ தேர்ந்தெடுக்காமல் நிராகரித்துவிட்டது.

இதற்கு ரியாக்ட் செய்யும் விதத்தில் இந்திய வீரர் சாஹல் தனது x தளத்தில் ஸ்மைலி எமோஜியை பதிவிட்டிருப்பது ரசிகர்களிடயே பேசும் பொருளாக மாறியுள்ளது. ஆஸ்திரேலியாவை எதிர்த்து இந்திய அணி விளையாடும் இந்த t20 தொடர் டிசம்பர் 3ம் தேதி பெங்களூரில் முடிவடைகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com