Virat kohli and Rohit sharma hug
Virat kohli and Rohit sharma

T20 Worldcup: இந்திய அணி வீரர்களின் பட்டியலை வெளியிட்ட பிசிசிஐ!

Published on

இந்த ஆண்டு ஜூன் மாதம் ஆரம்பமாகும் டி20 உலகக்கோப்பைத் தொடருக்கான இந்திய வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அறிவித்தது. இந்தப் பட்டியலில் சஞ்சு சாம்சன் இடம்பெற்றுள்ளது ரசிகர்களை உற்சாகமடைய செய்துள்ளது.

அமெரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் ஆகிய நாடுகளில் ஜூன் மாதம் 4ம் தேதி டி20 உலகக்கோப்பைத் தொடங்குகிறது. இந்தத் தொடரில் மொத்தம் 20 அணிகள் மோதவுள்ளன. குரூப் ஏ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், அயர்லாந்து, கனடா, அமெரிக்கா ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ளன. குரூப் பி பிரிவில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, நமீபியா, ஸ்காட்லாந்து, ஓமன் ஆகிய அணிகள் இருக்கின்றன.

குரூப் சி பிரிவில் நியூசிலாந்து, மேற்கிந்தியத் தீவுகள், ஆப்கானிஸ்தான், உகான்டா, பாபுவா நியூ கினியா ஆகிய அணிகள் உள்ளன. குரூப் டி பிரிவில் தென்னாப்பிரிக்கா, இலங்கை, வங்கதேசம், நெதர்லாந்து, நேபால் ஆகிய அணிகள் உள்ளன. அரையிறுதி போட்டிகள் ஜூன் 26, 27 ஆகிய தேதிகளிலும், இறுதி போட்டி 29ம் தேதியிலும் நடைபெறவுள்ளன.

சமீபத்தில் டி20 உலகக்கோப்பையில் நியூசிலாந்து அணி வீரர்களின் பட்டியல் அறிவிக்கப்பட்டது. அந்த அணியில் பலம் வாய்ந்த வீரர்கள் இடம்பெற்றதால், நியூசிலாந்து அணி பலம் வாய்ந்த அணிகளில் ஒன்றாக விளங்கும் என்று ரசிகர்கள் விமர்சனம் செய்கிறார்கள்.

அதேபோல், இந்த மாதத்தின் கடைசி தேதியில் டி20 அணியில் விளையாடப்போகும் இந்திய அணி வீரர்களின் பட்டியலை பிசிசிஐ அறிவிக்கும் என்று கூறப்பட்டது. அந்தவகையில் சென்ற மாதத்தின் இறுதி நாளான நேற்று, பிசிசிஐ டி20 தொடரில் விளையாடப்போகும் இந்திய அணியை அறிவித்தது.

டி20 இந்திய அணியில், கேப்டனாக ரோஹித் ஷர்மா, யஷஸ்வி ஜெய்ஸ்வால், விராட் கோலி, சூர்ய குமார் யாதவ், ரிஷப் பண்ட், சஞ்சு சாம்சன், ஹார்திக் பாண்டியா, ஷிவம் துபே, ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், குல்தீப் யாதவ், யுஸ்வேந்திர சஹால், அர்ஷதீப் சிங், ஜஸ்பிரித் பும்ரா, முகமது சிராஜ் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மேலும் சப்ஸ்ட்டிட்யூட் வீரர்களாக சுப்மன் கில், ரிங்கு சிங், கலீல் அஹமது, ஆவேஷ் கான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படியுங்கள்:
T20 Worldcup: நியூசிலாந்து அணி வீரர்களின் பட்டியல் அறிவிப்பு!
Virat kohli and Rohit sharma hug

ரிஷப் பண்ட் ஒரு ஆண்டு காலமாக கிரிக்கெட் விளையாடாமல், பின் உடற்தகுதி பெற்று இந்த ஐபிஎல் தொடர் மூலமே மீண்டும் கம்பேக் கொடுத்தார். பிசிசிஐயும் இவர் நீண்ட இடைவெளிக்கு பிறகு சிறப்பாக விளையாடுகிறாரா? என்பதைப் பார்த்துவிட்டே தேர்ந்தெடுக்கும் என்று கூறியது. இதனையடுத்து இவர் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டதால், ரசிகர்கள் உற்சாகமடைந்தனர். அதேபோல் சஞ்சு சாம்சனும் இந்திய அணியில் இடம்பெற்றது ரசிகர்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்துள்ளத்.

logo
Kalki Online
kalkionline.com