T20I 2023: இந்தியா VS ஆஸ்திரேலியா, ஜெயிக்கப்போவது இவங்கதான்!

T20I 2023-India vs Australia
T20I 2023-India vs Australia

உலகக் கோப்பை ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியின் இறுதியில் இந்திய அணியும், ஆஸ்திரேலிய அணியும் மோதின. இதில் ஆஸ்திரேலிய அணி கோப்பை வென்றது.

இந்த நிலையில் உலக கோப்பை போட்டி நடந்து முடிந்த சில நாட்களில் மீண்டும் இந்தியா, ஆஸ்திரேலிய அணிகள் மோதுகின்றன. இந்த முறை ஆட்டம் மாறுபட்டது. இரு அணிகளுக்கும் இடையிலான முதல் டி-20 ஒருநாள் போட்டி விசாகப்பட்டினத்தில் உள்ள ஓய்.எஸ்.ராஜசேகர ரெட்டி சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியத்தில் இன்று நடைபெறுகிறது.

உலக கோப்பை போட்டியில் சூரியகுமார் யாதவ் சிறப்பாக ஆடவில்லை என்றாலும் ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டி-20 தொடரில் இந்திய அணிக்கு அவர்தான் தலைமையேற்கிறார். ஹர்திக் பாண்டியா, ஜஸ்ப்ரீத் பும்ரா, ருதுராஜ் கெய்க்வேட் ஆகியோரைத் தொடர்ந்து டி-20 அணிக்கு அவர் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். ஆஸ்திரேலிய அணிக்கு மாத்யூ கேப்டனாக இருப்பார். சூர்யகுமார் யாதவ் போல் அல்லாமல் மாத்யூ வாடே, ஏற்கெனவே ஆஸ்திரேலிய டி-20 அணிக்கு தலைமையேற்று வழிநடத்தியிருக்கிறார்.

இந்தியா, ஆஸ்திரேலியா ஆகிய இரு அணிகளும் இதுவரை 26 முறை டி-20 போட்டிகளில் விளையாடி உள்ளது. இதில் இந்தியா 15 முறையும், ஆஸ்திரேலியா 10 முறையும் வென்றுள்ளது. ஒரேயொரு போட்டியில் எந்த முடிவும் எட்டப்படவில்லை. கடைசி 5 டி-20 போட்டிகளில் இந்தியா மூன்று முறையும் ஆஸ்திரேலியா இரண்டு முறையும் வெற்றிபெற்றுள்ளது.

கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் தேதி இரு அணிகளும் ஹைதராபாதில் மோதின. அந்த போட்டியில் இந்தியா, ஆஸ்திரேலியாவை 6 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது. சூரியகுமார் 36 பந்துகளில் 69 ரன்கள் குவித்தது குறிப்பிடத்தக்கது.

இந்திய அணி: யஷாஸ்வி ஜெய்ஸ்வால், இஷான் கிஷன், ருதுராஜ் கெய்க்வேட், திலக் வர்மா, சூர்யகுமார் யாதவ் (கேப்டன்), ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், அக்ஸர் படேல், ஜிதேஷ் சர்மா (விக்கெட் கீப்பர்), அர்ஷ்தீப்சிங், பிரசித் கிருஷ்ணா, ரவி விஷ்ணோய், அவேஷ்கான்.

ஆஸ்திரேலிய அணி: மாத்யூ ஷார்ட், மாத்யூ வாடே (விக்கெட் கீப்பர்), ஸ்டீவ் ஸ்மித், கிளென் மாக்ஸ்வெல், டிம் டேவிட், ஆரோன் ஹார்டீ, நாதன் எல்லிஸ், சீன் அப்போட், தன்வீர் சங்கா, ஸ்பென்சர் ஜான்சன், ஜாஸ்கோன் பெஹ்ரன்டார்ஃப்.

இதையும் படியுங்கள்:
உலக கோப்பையை தொடர்ந்து டி20 போட்டியிலும் வாய்ப்புகளை இழந்த வீரர்கள் பற்றி உங்களுக்கு தெரியுமா?
T20I 2023-India vs Australia

விசாகப்பட்டினம் கிரிக்கெட் விளையாட்டு அரங்கம் இரு அணிகளுக்கும் புதியது அல்ல. கடந்த மார்ச் மாதம் இரு அணிகளும் இதே இடத்தில் மோதியுள்ளன. அந்த போட்டியில் ஆஸ்திரேலியா, இந்திய அணியை 117 ரன்களுக்குள் சுருட்டியது. பின்னர் 11 ஓவர்களில் ரன்களை குவித்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வென்றது.

விசாகப்பட்டினம் ஆடுகளம் பேட்டிங் மற்றும் பீல்டிங்கில் ஈடுபடும் இரு அணிகளுக்கு சமவாய்ப்பு அளிக்கும் தன்மை கொண்டது.

வானம் தெளிவாக இருப்பதால் மழைபெய்வதற்கான வாய்ப்புகள் மிக மிக குறைவு.

முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி வெற்றிபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக கிரிக்கெட் ஆட்ட நிபுணர்கள் கூறுகின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com