அடுத்தடுத்து அதிரடி! இந்திய அணி பங்கேற்கும் அடுத்த தொடருக்கான அட்டவணை வெளியீடு!

அடுத்தடுத்து அதிரடி! இந்திய அணி பங்கேற்கும் அடுத்த தொடருக்கான அட்டவணை வெளியீடு!

இந்திய கிரிக்கெட் அணி, வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கும் நிலையில், அதைத்தொடர்ந்து, அயர்லாந்து - இந்தியா அணிகள் பங்கேற்கும் போட்டிகள் குறித்த அட்டவணை தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய அணி பங்கேற்றபின் தற்போது வீரர்களுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இந்த ஓய்வுக்குப் பின், இந்திய அணி அடுத்தாக ஜூலை மாதம் வெஸ்ட் இண்டீஸ் சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாட இருக்கிறது.

அந்த சுற்றுப் பயணத்தின்போது, வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் 2 டெஸ்ட் போட்டி, 3 ஒருநாள் போட்டி, 5 டி20 போட்டிகளில் விளையாட உள்ளது. இதற்கான அட்டவணையும் ஏற்கெனவே பிசிசிஐ-ஆல் அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், தற்போது அயர்லாந்து - இந்தியா அணிகளுக்கிடையேயான போட்டிகள் குறித்த அட்டவணையை பிசிசிஐ வெளியிட்டுள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியுடனான 5 டி20 போட்டிகளும் ஆகஸ்ட் மாதத்தில் நடைபெற்று ஆகஸ்ட் 13ம் தேதி முடியவுள்ள நிலையில், அயர்லாந்து அணியுடனான டி20 போட்டிகள் ஆகஸ்ட் 18, 20, 23ம் தேதிகளில் நடக்கவிருக்கிறது.

உலகக் கோப்பை போட்டி அக்டோபர் 5ம் தேதி துவங்கவுள்ள நிலையில், அதுவரையிலும் அடுத்தடுத்து எந்த அணியுடன் இந்தியா மோதப்போகிறது என ரசிகர்களும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com