இங்கிலாந்திற்கு எதிரான ஒரு நாள் தொடரை வெற்றிகரமாக துவக்கியது இந்திய அணி!

Eng vs Ind
Eng vs Ind
Published on

இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய மகளிர் கிரிக்கெட் அணி , அங்கு நடைபெற்ற டி 20 தொடரை கைப்பற்றி இருந்தது. தற்போது 3 போட்டிகளைக் கொண்ட ஒரு நாள் தொடரில் இந்திய அணி பங்கேற்கிறது. ஜூலை 16, நேற்று சவுத்தாம்டனில் உள்ள ஏஜியஸ் பவுல் மைதானத்தில் நடைபெற்ற முதல் போட்டியில் , இங்கிலாந்து அணி டாஸ் வென்று பேட்டிங்கை தேர்வு செய்தது. இங்கிலாந்து அணி கடந்த டி 20 தொடர் முழுக்க டாசை வென்றது குறிப்பிடத்தக்கது .

இதற்கு முன்னர் இந்தியாவும் இங்கிலாந்தும் மொத்தமாக 76 போட்டிகளில் விளையாடியுள்ளது. இதில் இங்கிலாந்து அணி 40 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது , இந்திய அணி 34 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது, 2 போட்டிகளில் முடிவு இல்லை. இதில் இங்கிலாந்தில் நடைபெற்ற 35 போட்டிகளில் 24 இல் இங்கிலாந்து வெற்றி பெற்று ஆதிக்கம் செலுத்துகிறது. இங்கிலாந்தில் இந்திய அணி 9 வெற்றிகளை மட்டுமே பதிவு செய்திருந்தது.

துவக்க ஆட்டத்தை இங்கிலாந்தின் டாமி பியுமன்ட் மற்றும் எமி ஜோன்ஸ் ஆகியோர் துவக்கினர். துவக்க ஆட்டக்காரர்கள் இருவரையும் இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர் கிரந்தி கவுட் விரைவாக வெளியேற்றினார்.

இதையும் படியுங்கள்:
அக்பர், பாபர், அவுரங்கசீப் கொடூரமான ஆட்சியாளர்கள்: பாடப்புத்தகத்தில் தகவல்..!
Eng vs Ind

அடுத்தடுத்து ஜோடி சேர்ந்த எம்மா லாம்ப் மற்றும் கேப்டன் நாட் ஸ்கிவர் பிரண்ட் ஆகியோர் உறுதியாக நின்று விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினார்கள். எம்மா 39 ரன்களிலும் நாட் ஸ்கிவர் 41 ரன்களிலும் ஸ்னே ராணாவால் வெளியேற்றப்பட்டனர்.

அடுத்து களமிறங்கிய சோபியா டங்கிலி சிறப்பாக விளையாடி 83 ரன்கள் எடுத்து ஸ்கோரை அதிகரித்தார். இவருக்கு உறுதுணையாக ஆலிஸ் டேவிட்சன் ரிச்சர்ட்ஸ் 53 ரன்கள் குவித்து வெளியேறினார். 50 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 6 விக்கெட்டுகளை இழந்து 258 ரன்களை குவித்தது.

அடுத்து இந்தியாவின் சார்பில் பிரித்திகா ராவல் மற்றும் ஸ்மிருதி மந்தனா ஜோடி களமிறங்கியது. ஸ்மிருதி 28 ரன்கள் எடுத்து வெளியேறினார். முதல் விக்கட்டிற்கு இந்தியா 48 ரன்கள் எடுத்திருந்தது. பிரித்திகா ராவலும் (36) சிறிது நேரத்தில் வெளியேறினார். ஹார்லின் தியோல் 27 ஹர்மன் பிரித் கவுர் 17 ஆகியோர் குறைந்த ரன்களில் வெளியேற இந்திய அணி வெற்றி பெறுமா? என்ற சந்தேகம் வந்து விட்டது.

இக்கட்டான நேரத்தில் ஜெமிமாவும் தீப்தி ஷர்மாவும் ஜோடி சேர்ந்து சிறப்பாக விளையாடி ஆட்டத்தின் போக்கினை மாற்றினர். ஜெமிமா 48 ரன்களில் வெளியேறிய போது இந்திய அணி 214 ரன்களை எட்டியிருந்தது. இறுதி வரை ஆட்டமிழக்காமல் தீப்தி (62) களத்தில் இருந்தார். 48.2 ஓவர்கள் இறுதியில் இந்திய அணி 262 ரன்கள் குவித்து வெற்றியை பெற்றது. அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்த தீப்தி ஆட்ட நாயகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com