மிளகு விஷத்தை முறிப்பதாகவும், வாதத்தை அடக்குவதாகவும், நரம்பு மண்டலத்திற்கு புத்துணர்ச்சி தருவதாகவும், இரத்தத்தை சுத்திகரிப்பதாகவும், உடல் உஷ்ணத்தை தருவதாகவும் இருக்கும் . பசியின்மை செரியாமை போன்ற குறைபாட்டுக்கு மிளகு நல்ல மருந்தா இருக்கும்.
மிளகில் அடங்கியுள்ள சத்துக்கள்:
கால்சியம், இரும்பு, பாஸ்பரஸ் சத்துக்கள், தையமின், ரிபோபிளேவின், நியாசின் முதலிய உயிர் சத்துக்கள்.
* ஒரே ஒரு மிளகு போதும் உண்ணும் உணவு சுவையாக.
* இரண்டு மிளகெடுத்து இரண்டொரு ஆடாதோடா இலை சேர்த்தால் இருமல், சளிகாணாமல் போகும்.
* மூன்று மிளகெடுத்து வெங்காயம் சேர்த்து தலைக்கு தேய்த்தால் கேசம்கூட முசுமுசுவென்று வளரும்.
* நான்கு மிளகும், சுக்கும் சிறிது கலந்தால் நெஞ்சுவலி சொல்லாமல் போகும்.
* ஐந்து மிளகும் சுக்கும் திப்பிலியும் இணைந்தால் கோழை ஓடியே போகும்.
* ஆறு மிளகெடுத்து பெருஞ்சீரகம் (சோம்பு) இடித்து உண்ண, மூலநோய் வந்தசுவடின்றி தானே மறையும்.
* ஏழு மிளகை பொடி செய்து நெய் கலந்து அன்னம் பிசைந்து உண்டால் நல்ல பசிஎடுக்கும். தொண்டைப்புண்ணும் தொண்டைக்கட்டும் விட்டுப் போகும்.
* எட்டு மிளகோடு பெருங்காயம் சேர்த்துக்கொண்டால் வாந்திகூட எட்டி நிற்கும்.
* ஒன்பது மிளகும் துளசியும், ஒவ்வாமையை (அலர்ஜி) துரத்தியடிக்கும்.
* பத்து மிளகை வாயில் போட்டு கடித்து மென்று விட்டு, பகைவன் வீட்டிலும் உண்ணலாம்
திரிதோஷம்னு சொல்லப்படுற வாதம்-பித்தம்-கபம் தொடர்பான பிரச்சனைகளுக்கு திரிகடுகு (சுக்கு-மிளகு-திப்பிலி) சூரணத்த தேன்ல கலந்து சாப்பிட்டு வந்தா அந்த பிரச்சனைகள்ல இருந்து விடுபடலாம்.
திரிகடுகு சூரணம் சுவாசம் தொடர்பான பிரச்சனைகளுக்கும், ஜீரண பிரச்சனைகளுக்கும் நல்ல மருந்தா இருக்குது. இந்த திரிகடுகு சூரணம் நம்ம ஈஷா ஆரோக்கியாவிலயே நாம வாங்கிக்க முடியும்
டெய்லி பல் தேய்க்கும்போது மிளகோட உப்பு சேர்த்து தேய்த்தால் பல் கூச்சம், பல்வலி, வாய் துர்நாற்றம் எல்லாம் நீங்கி பல் வெண்மையாகும்.
சாதாரண காய்ச்சலுக்கு மிளகு கசாயம் நல்ல மருந்தா இருக்கும்; சளி இருமல் இருந்தால் மிளகு கசாயத்தோட பனைச் சர்க்கரை சேர்த்து குடிக்கலாம்.