“அப்போது என் மனது சுக்கு நூறாக உடைந்தது” – தோனி வருத்தம்!

MS Dhoni
MS Dhoni
Published on

முன்னாள் இந்திய அணியின் கேப்டன் எம்.எஸ்.தோனி ஒரு தொடரில் "அதில் நாம் அடைந்த தோல்வியில்தான் என் மனது சுக்கு நூறாக உடைந்தது" என்று வருத்தம் தெரிவித்துள்ளார்.

இந்திய அணியின் தூனாக விளங்கிய தோனி, மூன்று விதமான ஃபார்மட்டுகளிலும் விளையாடி இந்தியாவிற்கு கோப்பை வாங்கித் தந்தவர். இவர் விளையாடிய கடைசி சர்வதேச போட்டி , கடந்த 2019ம் ஆண்டு நடைபெற்ற உலகக் கோப்பை போட்டித்தான். இப்போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியாகும்.

இந்த போட்டியை யாராலுமே மறக்கமுடியாது. இதில் வெற்றிக்கு 12 பந்துகளில் 31 ரன்கள் இந்திய அணிக்கு தேவைப்பட்ட போது களத்தில் தோனி நின்றதால் ரசிகர்களுக்கு பெரிய நம்பிக்கை இருந்தது. ஆனால் தோனி 49 வது ஓவரின் இரண்டாவது பந்தில் ரன் அவுட் ஆனார். இது ஒட்டுமொத்த இந்திய ரசிகர்களுக்கும் மிகப்பெரிய ஏமாற்றமாக அமைந்தது. ரசிகர்களுக்கு மட்டுமல்ல வீரர்களுக்கும்தான்.

இப்போட்டி குறித்துதான் தற்போது தோனியும் மனம் திறந்திருக்கிறார். “மிகவும் கடினமான ஒரு விஷயம் அது. அது என்னுடைய கடைசி போட்டி, அதில் வெற்றிபெற்றிருந்தால் மிகவும் நன்றாக இருந்திருக்கும். அப்போது என் மனது சுக்கு நூறாக உடைந்தது. அந்த தோல்வியை ஒப்புக்கொண்டு முன்னேறி செல்ல முயற்சித்தோம்.

இதையும் படியுங்கள்:
எம்.எஸ்.தோனிக்கும் ஸ்வப்னில் குசாலேவுக்கும் அப்படி என்ன ஒற்றுமை?
MS Dhoni

ஆனால், அதற்கு அதிக நேரம் தேவைப்பட்டது. அதன் பின் நான் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடவில்லை என்பதால் எனக்கு அதிலிருந்து வெளிவர நிறைய நேரம் கிடைத்தது. அனைவரும் நன்றாகவே முயற்சித்தோம். ஆனால், வெற்றிபெற முடியவில்லை. இதை நாம் ஒப்புக்கொள்ளத்தான் வேண்டும்.” என்று பேசியிருக்கிறார்.

இதற்கு ரசிகர்கள் பலரும் கருத்துக்களைப் பகிர்ந்து வருகின்றனர். தோனியின் கிரிக்கெட் வாழ்வில் நியூசிலாந்து அணிக்கு எதிரான இந்த போட்டி ஒரு கருப்பு புள்ளியாகவே அமைந்து விட்டது என்றும், ஆனால், ஒருவனால் வெற்றிமட்டுமே காணமுடியாதல்லவா? என்றும் கமெண்ட்ஸ் செய்து வருகின்றனர். 

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com