"ஒரு தொடக்கம்.. ஒரு முடிவு!" - ஜாக்சனின் முதல் சதமும், கவாஸ்கரின் கடைசி 96-ம்! ஒரு வரலாற்று பதிவு..!

Archie Jackson
Archie Jackson source:cricket thrills
Published on

அறுபது வருட இடைவெளியில் நடைபெற்ற, கிரிக்கெட் உலகின் இரண்டு ஆதிக்கம் செலுத்திய அணிகள் சந்தித்த எதிர்பாராத திருப்பங்களைப் பற்றி இங்கே காண்போம். 20 ரன்களுக்குள் வெற்றி - தோல்வி தீர்மானிக்கப்பட்ட இந்த இரண்டு டெஸ்ட் போட்டிகளிலும் கடைசி வரை விறுவிறுப்புக்குக் குறைவில்லை.

1. அறிமுக நாயகன் ஆர்ச்சி ஜாக்சன் (1929 - அடிலெய்ட்)

1929-ஆம் ஆண்டு, அடிலெய்ட் மைதானத்தில் இங்கிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணியின் இளம் வீரராக ஆர்ச்சி ஜாக்சன் அறிமுகமானார். "தன்னை விடச் சிறந்த திறமை மிக்க வீரர்" என்று டான் பிராட்மனாலேயே புகழப்பட்டவர் ஜாக்சன்.

தனது அறிமுகப் போட்டியிலேயே 331 பந்துகளைச் சந்தித்து, 15 பவுண்டரிகளுடன் 164 ரன்கள் குவித்து அசத்தினார். எதிர்காலத்தில் 'பாடி-லைன்' (Bodyline) தொடரின் மூலம் உலகையே அச்சுறுத்தப் போகும் வேகப்பந்து வீச்சாளர் ஹரோல்டு லார்வுட் மற்றும் சுழற்பந்து வீச்சாளர் ஜாக் வைட் ஆகியோரின் பந்துவீச்சைத் துணிச்சலாக எதிர்கொண்டார்.

போட்டியின் போக்கு:

  • இங்கிலாந்து: முதல் இன்னிங்ஸில் 334 ரன்கள் (வாலி ஹம்மான்ட் 119*). இரண்டாவது இன்னிங்ஸில் வாலி ஹம்மான்ட் 177 ரன்களும், டக்ளஸ் ஜார்டின் 98 ரன்களும் எடுக்க, ஆஸ்திரேலியாவிற்கு 349 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.

  • ஆஸ்திரேலியா: முதல் இன்னிங்ஸில் 369 ரன்கள் எடுத்து ஆதிக்கம் செலுத்தியது. இரண்டாவது இன்னிங்ஸில் டான் பிராட்மன் 58 ரன்களில் ரன்-அவுட் ஆனார். இறுதியில், ஆஸ்திரேலிய அணி போராடி 12 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

  • இங்கிலாந்து பந்துவீச்சாளர் ஜாக் வைட் இப்போட்டியில் 13 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

2. ஜாம்பவான் சுனில் கவாஸ்கரின் கடைசி ஆட்டம் (1987 - பெங்களூர்)

அறுபது ஆண்டுகளுக்குப் பிறகு, 1987-ல் பாகிஸ்தானுக்கு எதிராகப் பெங்களூரில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி, சுனில் கவாஸ்கரின் கடைசி டெஸ்ட் போட்டியாக அமைந்தது.

போட்டியின் போக்கு:

  • பாகிஸ்தான்: முதல் இன்னிங்ஸில் மணிந்தர் சிங்கின் சுழலில் (7 விக்கெட்) சிக்கி 116 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது. இரண்டாவது இன்னிங்ஸில் 249 ரன்கள் எடுத்தது.

  • இந்தியா: முதல் இன்னிங்ஸில் 145 ரன்கள் எடுத்தது. வெற்றி பெற 221 ரன்கள் தேவை என்ற கடினமான இலக்குடன் இந்தியா களம் இறங்கியது.

  • ஆடுகளம் சுழற்பந்து வீச்சுக்குச் சாதகமாக இருந்த நிலையில், இக்பால் காசிம் மற்றும் துசீப் அஹ்மத் ஜோடி இந்தியாவை அச்சுறுத்தியது. ஆனால், ஒருபுறம் விக்கெட்டுகள் சரிந்தாலும், சுனில் கவாஸ்கர் பாறை போல நிலைத்து நின்று ஆடினார்.

  • அணி வெற்றி பெற வேண்டும் என்ற முனைப்பில் ஆடிய கவாஸ்கர், 96 ரன்கள் எடுத்திருந்தபோது இக்பால் காசிம் பந்தில் அவுட் ஆனார். இறுதியில் இந்தியா 16 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.

இந்திய அணி ஆல்  அவுட்  204 ரன்கள்.சிறப்பாக பந்து வீசிய   இக்பால் காசிம் மற்றும் துசீப் அஹ்மத் ஜோடி இந்த இன்னிங்சில் தலா 4 விக்கெட்டுக்கள் எடுத்தனர்.

இந்த இரண்டு டெஸ்டுகளிலும் கடைசி வரை போராடி வெற்றி பெற முடியாத  ஆஸ்திரேலியா (அறிமுக டெஸ்ட்
வீரர் ஆர்ச்சி ஜாக்சன்) இந்தியா ( கடைசி டெஸ்ட்  வீரர் சுனில் கவாஸ்கர் ) முயற்சிகள் வெற்றி பெற்று தரவில்லை.

இப்பொழுது அற்புத திறமை வாயந்த ஆர்ச்சி ஜாக்சன் 8 டெஸ்டுகளுக்கு மேல் விளையாடாததன் காரணம் ஷாக்கிங் ஆனது. 

காச நோயின் ( Tuberculosis ) தாக்கத்தால் அவர் உயிர் பிரிந்தது பிப்ரவரி 16, 1933 ல்.

பிரகாசமான எதிர் காலம் டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்த இளம் வீரர் ஆர்ச்சி ஜாக்சன் உயிர் பிரிந்த பொழுது அவருக்கு வயது 23 வருடங்கள் 164 நாட்கள்.

அன்று தான் பாடி லைன் தொடரில் ஆஸ்திரேலிய அணி புகழ் பெற்ற ஆஷஸ் கோப்பையை திரும்ப பெற்றது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com