2024 IPL தொடரில் வரலாற்று சாதனைப் படைத்த ஹைத்ராபாத் அணி!

SRH Team
SRH Team
Published on

நேற்று மும்பை அணிக்கும் ஹைத்ராபாத் அணிக்கும் இடையே நடைபெற்ற போட்டியில் ஹைத்ராபாத் அணி ஐபிஎல் வரலாற்றிலேயே இதுவரை யாரும் படைத்திராத சாதனையை படைத்து கிரிக்கெட் வரலாற்றில் இடம் பிடித்துள்ளது.

டாஸ் வென்ற மும்பை அணி முதலில்  பவுலிங்கைத் தேர்வுசெய்தது. ஹைத்ராபாத் அணியில் பேட்டிங் செய்த நான்கு வீரர்கள் தொடர்ந்து அதிரடி ஆட்டத்தையே விளையாடினர். ஹெட் 24 பந்துகளில் 62 ரன்களும் அபிஷேக் ஷர்மா 23 பந்துகளில் 63 ரன்களும் மார்க்ரம் 28 பந்துகளில் 42 ரன்களும் க்ளாசென் 34 பந்துகளில் 80 ரன்களும் எடுத்து எதிரணியைத் திக்குமுக்காடச் செய்தனர். மும்பை அணி பவுலர்ஸ் எந்தப் பக்கம் பந்தைப் போட்டாலும் சிக்ஸ் மற்றும் பவுண்டரீஸைதான் குறிவைத்து அடித்தார்கள். ஒருவரை வெளியேற்றி மும்பை அணி பெருமூச்சு விடுவதற்குள்ளேயே அடுத்து களமிறங்கிய ஹைத்ராபாத் வீரர் அதிரடி ஆட்டத்தில் இறங்கி மீண்டும் மும்பை அணியை திணறடித்தார்.

இப்படி ஹைத்ராபாத் அணியில் களமிறங்கிய வீரர்கள் இடைவெளியே விடாமல் ஆடியதால் மும்பை அணி மிகவும் திணற ஆரம்பித்தது. மும்பை பவுலர்களால் அவர்களைக் கட்டுப்படுத்தவே முடியவில்லை. இந்த இடத்தில்தான் ஹைத்ராபாத் அணி அந்த வரலாற்று சாதனையை தன் வசமாக்கியது.

ஆம்! தனி ஒரு வீரர் மட்டுமல்லாது ஒரு அணியே சிறப்பாக விளையாடி மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு  277 ரன்களை குவித்தது. இதுதான் ஐபிஎல் வரலாற்றிலேயே மிக அதிகமான ஸ்கோராகும். மும்பை அணியும் இந்த இலக்கை எப்படியாவது அடைந்துவிட வேண்டும் என்றுப் போராடியது. ஆனால் எப்படியோ 246 ரன்கள் வரை எடுத்தாலும் இலக்கை மட்டும் அடைய முடியவில்லை.

ஆகையால் ஹைத்ராபாத் அணியின் சாதனையை மும்பை அணியால் முறியடிக்க முடியவில்லை.  ஆகையால் 31 ரன்கள் வித்தியாசத்தில் ஹைத்ராபாத் அணி  வெற்றிபெற்று தன் முதல் வெற்றியைப் பதிவிட்டது. ஆனால் மும்பை அணி இன்னும் ஒரு வெற்றியை கூடப் பதிவிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள்:
SL vs BAN: ஒரே டெஸ்ட் மேட்ச் - இரண்டு இன்னிங்ஸ் - இரு வீரர்கள் - ஆளுக்கு இரு சதங்கள் சாதனை!
SRH Team

இந்தநிலையில் ஹைத்ராபாத் அணி 277 ரன்களுடன் ஐபிஎல் வரலாற்றில் அதிக ரன்கள் எடுத்த பட்டியலில் முதல் இடத்தைப் பிடித்தது. அதேபோல் பெங்களூரு அணி 2013ம் ஆண்டு 263 ரன்கள் எடுத்து பட்டியலில் இரண்டாவது இடத்தில் உள்ளது. 2023ம் ஆண்டு விளையாடிய லக்னோ அணி 257 ரன்களுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது.

அதேபோல் ஹைத்ராபாத் அணியில் களமிறங்கிய அபிஷேக் ஷர்மா இந்தத் தொடரில் மிகக் குறைவானப் பந்துகளில் அரைசதம் அடித்த பட்டியலில் முதல் இடத்தில் உள்ளார். ஹைத்ராபாத் அணி வீரர் ஹெட் இரண்டாம் இடத்தில் உள்ளார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com