IPL தொடரில்தான் டி20 உலககோப்பைக்கான வீரர்கள் தேர்வுசெய்யப்படுவார்கள்! அதிரடி அறிவிப்பு.

IPL 2024.
IPL 2024.

ஐபிஎல் தொடரில் எந்தெந்த அணிகள் ப்ளே ஆஃப் சூற்றுக்கு செல்லவில்லையோ அந்த அணிகளில் உள்ள இந்திய வீரர்களுக்கு புதிய விதிமுறையை அறிவித்தது பிசிசிஐ.

டி20 உலககோப்பை இந்த ஆண்டு ஜூன் மாதம் தொடங்கவுள்ளது. சென்ற ஆண்டு ஒருநாள் கிரிக்கெட் உலககோப்பை போட்டியில் இந்திய அணி தொடக்கம் முழுதும் நன்றாக விளையாடினாலும், இறுதிப் போட்டியில் தோல்வியையே சந்தித்தது. இதனால் வீரர்கள் முதல் ரசிகர்கள் வரை அனைவருக்கும் இது ஒரு பெரிய ஏமாற்றமாக அமைந்தது. இதனால் இந்த டி20 உலககோப்பையில் எப்படியாவது உலக கோப்பையைத் தட்டிவிட வேண்டும் என்று பிசிசிஐ பல திட்டங்களைத் தீட்டி வருகிறது.

அந்தவகையில் உலககோப்பை டி20 தொடருக்கு முன்னர் இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெறவுள்ளது. இந்த தொடர்களில் சிறப்பாக விளையாடும் இந்திய வீரர்கள் மட்டுமே டி20 இந்திய அணியில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

அப்படி வீரர்களைத் தேர்வு செய்தாலும் அந்த வீரர்கள் இருக்கும் அணி ப்ளே ஆஃப்பிற்கு செல்லவில்லை என்றால் , இந்த தொடரின் இறுதியில் டி20 உலககோப்பை நடைபெறும் இடமான நியூயார்க்கிற்கு அனுப்பிவைக்கப்படுவார்கள் என்று பிசிசிஐ தெரிவித்துள்ளது.

ஏனெனில், ஒரு அணி ப்ளே ஆஃப் போகவில்லை என்றால், அந்த அணியின் வீரர்களின் ஃபார்ம் மோசமாகவோ அல்லது சராசரியாகவோத்தான் இருக்கும். ஆகையால் அவர்களை மீண்டும் ஃபார்மிற்கு கொண்டுவர முன்னதாகவே நியூயார்க்கிற்கு அனுப்பி வைத்து பயிற்சி அளிக்க வேண்டும் என்று பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.

மேலும் இந்த தொடரில் ப்ளே ஆஃப் சுற்றுக்கு சென்ற அணி வீரர்களைப் பொறுத்தவரையில், அச்சுற்று ஒரு வாரக் காலம் நடைபெறும் என்பதால் அந்த வீரர்கள் பயிற்சியில் ஈடுப்படுவார்கள் என்பதில் சந்தேகமேயில்லை. அதுவே டி20 தொடருக்கும் சேர்த்து பயிற்சியில் ஈடுப்பட்டது போல் தான் இருக்கும். அந்த வீரர்களுக்கு இதுவே போதுமானதாக இருக்கும் எனவும் பிசிசிஐ விளக்கம் அளித்துள்ளது.

இதையும் படியுங்கள்:
கிரிக்கெட்டில் Demerit Point என்றால் என்ன? அது யாருக்கு வழங்கப்படும்?
IPL 2024.

எனவே, ப்ளே ஆஃப் செல்லாத அணியின் வீரர்கள் ஓய்வே இல்லாமல் விளையாடுவதுபோல் தான் இருக்கும். ஆனால் ப்ளே ஆஃப் சென்ற வீரர்களுக்கு டி20 தொடருக்கு முன்னர் ஓய்வு பெற ஒரு வாரக் காலம் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com