இந்திய கிரிக்கெட் அணியின் வெற்றிகளுக்குப் பின்னால் உள்ள 'மாஸ்டர் பிளான்'!

india
india
Published on

ஒரு கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர்களை நினைத்த நேரத்தில் அடிக்கடி மாற்றலாமா? அவ்வாறு செய்தால் அதன் தாக்கம் எப்படி இருக்கும்.

தாக்கங்களை ஏற்படுத்திய மாற்றங்கள்:

இந்திய கிரிக்கெட் அணி வீரர்களின் சாதனைகளுக்கு உறுதுணையாக இருக்கும் ஊழியர்கள்(support staffs) பல தசாப்தங்களாக குறிப்பிடத்தக்க மாற்றங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பெரும்பாலும் முக்கியப் போட்டிகளில் அணி சந்திக்கும் தோல்விகளால் இது நடக்கிறது. வரலாற்று ரீதியாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் பிசிசிஐ-யைப் பொறுத்தவரை, பயிற்சியாளர் பதவிகள் என்பது ஒரு நிலையான ஒன்றல்ல; அவை அணியின் செயல்பாடுகளுக்கு ஏற்ப மாறக்கூடியவை (Dynamic Positions).

உதாரணமாக 2007 உலகக் கோப்பையில் இந்தியா ஆரம்பத்தில் வெளியேறியதைத் தொடர்ந்து, கிரெக் சேப்பல்(Greg Chappell) தலைமைப் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார். இது அப்போதைய பயிற்சி அமைப்பை முற்றிலும் மறுசீரமைக்க வழிவகுத்தது. இதேபோல் 2017 சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் தோல்வியடைந்த பிறகு அனில் கும்ப்ளே(Anil Kumble) தலைமைப் பயிற்சியாளர் பதவியை ராஜினாமா செய்தார்; இது ரவி சாஸ்திரியின்(Ravi Shastri) நியமனத்திற்கு வழிவகுத்தது. இதுவும் புதிய உதவியாளர்கள் மற்றும் பயிற்சியாளர்களை அணிக்குள் கொண்டு வந்தது. இந்த மாற்றங்கள் தலைமைப் பயிற்சியாளர்களுக்கு மட்டுமல்ல, அணி சரியாகச் செயல்படாதபோது பந்துவீச்சு பயிற்சியாளர்கள், பிசியோதெரபிஸ்டுகள்(physiotherapists) மற்றும் ஆய்வாளர்கள்(analysts) பெரும்பாலும் மாற்றப்படுகின்றனர்.

மாற்றங்களுக்குப் பின் நிகழ்ந்தவை: சாதகமும் பாதகமும்

இந்த மாற்றங்களின் தாக்கம் ஆழமானது. புதிய ஊழியர்கள் பெரும்பாலும் புதிய பயிற்சி முறைகள், புதிய உத்திகள், நுண்ணறிவுகள்(tactical insights) மற்றும் உளவியல் ரீதியான பயிற்சிகளை(psychological conditioning) அறிமுகப்படுத்துவர்.

உதாரணமாக சாஸ்திரியின் பதவிக்காலத்தில் பந்துவீச்சு பயிற்சியாளராக இருந்த பாரத் அருண்(Bharat Arun) இந்தியாவின் வேகப்பந்து வீச்சை உலக கிரிக்கெட்டின் சிறந்த தரத்திற்கு இணையானதாக மாற்றியதில் முக்கிய பங்கு வகித்தார். இருந்தும் இது அவ்வளவு எளிதில் நடக்கவில்லை. காரணம் அடிக்கடி அணியில் ஏற்படும் மாற்றங்கள் சில நேரங்களில் தொடர்ச்சியைச் சீர்குலைத்து, வீரர் - பயிற்சியாளர் உறவுகளையும், நீண்டகால திட்டமிடலையும் தாமதிக்கலாம் அல்லது பாதிக்கவும் செய்யலாம்.

எந்தக் கூட்டணி நீண்ட காலம் நீடித்தது?

2014 to 2021க்கு இடையில் இந்தியா பெரும்பாலும் சாஸ்திரி, அருண் மற்றும் ஆர். ஸ்ரீதர் (fielding பயிற்சியாளர்) ஆகியோரின் கீழ் அவர்களின் முக்கிய ஆதரவு(Support) ஊழியர்களையும் கூடவே தக்க வைத்துக்கொண்டது. இந்தக் காலகட்டத்தில் ஆஸ்திரேலியாவில் தொடர் வெற்றிகள் உட்பட, வெளிநாட்டு வெற்றிகள் சீரானதாக இருந்தன. இது ஒரு நிலையான தலைமையால் வரும் நன்மைகளை அன்றைக்கு எடுத்துக்காட்டின.

பதவிகள் கட்டாயமாக மாற்றப்படுமா?

பயிற்சியாளர்களை மாற்ற பிசிசிஐ எந்த ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவையும் (Fixed Deadline) பின்பற்றுவதில்லை. மாறாக, முக்கியப் போட்டிகளுக்குப் பிறகு நடத்தப்படும் தீவிர மதிப்பாய்வுகளின் (Reviews) அடிப்படையிலேயே முடிவுகள் எடுக்கப்படுகின்றன. வீரர்களின் கருத்து மற்றும் அணியின் நீண்டகால வளர்ச்சியே இதற்கு அளவுகோலாக உள்ளது. உதாரணமாக, ராகுல் டிராவிட்டின் (Rahul Dravid) ஒப்பந்த நீட்டிப்பு, அணியின் நல்லிணக்கத்திற்கு பிசிசிஐ கொடுக்கும் முக்கியத்துவத்தைக் காட்டுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com