கிரிக்கெட்டில் நடுவரே புகழ்ந்த 'ஒன் மேன் ஆர்மி' யார் தெரியுமா?

Umpire
Umpire
Published on

கிரிக்கெட்டில் பொதுவாக பௌலர்களும், பேட்டர்களும் தான் மற்ற வீரர்களை புகழ்ந்து பேசுவார்கள். ஆனால், ஒரு நடுவர் ஒரு கிரிக்கெட் வீரரைப் பற்றி புகழ்ந்து பேசுவது அத்தி பூத்தாற் போல் நடக்கும் நிகழ்வாகும். அப்படி நடுவர் புகழ்ந்த வீரர் யார்? அந்த நடுவர் யார் என்பதைத் தெரிந்து கொள்ளலாம் வாங்க!

உலகம் முழுவதும் பிரபலமான விளையாட்டுகளில் கிரிக்கெட்டும் ஒன்று. பல ஆண்டு கால கிரிக்கெட்டில் ஒவ்வொரு தலைமுறைக்கும் சாதனைகள் படைக்கும் பல வீரர்கள் அவதாரம் எடுக்கின்றனர். இந்திய அணியில் கபில்தேவ் தொடங்கி விராட் கோலி வரை நட்சத்திர வீரர்களின் எண்ணிக்கை அதிகமாகவே உள்ளது. இந்நிலையில் பௌலர்களும், பேட்டர்களும் ஓய்வு பெறும் சமயத்தில், தான் எதிர்கொண்ட சிறந்த வீரர் யார் என்பதைத் தெரிவிப்பார்கள். ஆனால், தற்போது ஒரு இந்திய நடுவர் ஒரு இந்திய வீரரை புகழ்ந்து இருப்பது ஆச்சரியத்தை அளிக்கிறது.

Rohit Sharma
Rohit Sharma

இந்தியாவைச் சேர்ந்த பிரபல நடுவரான அனில் சவுத்ரி, இந்திய கேப்டன் ரோகித் சர்மாவை 'ஒன் மேன் ஆர்மி' என்று புகழ்ந்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “ரோகித் சர்மா பார்ப்பதற்குத் தான் சாதரண வீரராகத் தெரிவார். கிரிக்கெட்டில் நல்ல அறிவுத் திறனைக் கொண்ட திறமையான வீரர் இவர். இவர் 150 கிமீ வேகத்தில் வரும் பந்துகளைக் கூட மிகச் சாதாரணமாக எதிர்கொண்டு தூக்கி அடிக்கும் திறன் கொண்டவர். நடுவர்களிடம் அடிக்கடி முறையிடும் அவர், நடுவர்கள் கூறுவதைக் கேட்டு அப்படியே இருக்கட்டும் என்று விட்டு விடுவார். வீண் விவாதங்களை எப்போதும் தவிர்ப்பவர் ரோகித் சர்மா. இவருக்கு அம்பயரிங் செய்வது மிகவும் எளிதானது. ஏனெனில் பேட்டிங் செய்யும் போது அதிகமாக முன்னோக்கி வராமல், பின்னோக்கி சென்று பந்துக்காக காத்திருப்பார். பந்தைப் பற்றிய புரிதல் கிரிக்கெட்டில் அவசியம் தேவை. அது ரோகித் சர்மாவிடம் அதிகமாகவே இருக்கிறது. இதற்குச் சான்றாக அவர் அடிக்கும் புல் ஷாட்டுகளைக் கூறலாம். பார்ப்பதற்கு சோம்பேறித்தனமாக இருந்தாலும், கிளாஸ் நிறைந்த வீரர் இவர். கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் ரோகித் இரட்டை சதம் அடித்த போது நான் டிவி அம்பயராக இருந்தேன். ஒன் மேன் ஆர்மியாக செயல்பட்டு, அணியின் வெற்றிக்குப் பங்களிக்கும் இவர், சிறந்த கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்” என்று புகழ்ந்துள்ளார்.

இதையும் படியுங்கள்:
எங்களுக்கு ஐபிஎல் வேண்டாம்: இதைப் பண்ணுங்க போதும்! பாகிஸ்தான் வீரர்!
Umpire

இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டெஸ்ட் கேப்டனாக செயல்பட்டு வரும் ரோகித் சர்மா, கபில்தேவ் மற்றும் தோனிக்குப் பிறகு ஐசிசி கோப்பையை வென்ற கேப்டன் ஆவார். தொடக்க வீரராக இவரது பேட்டிங் அபாரமாக இருக்கிறது. கேப்டன்சியிலும் கலக்கி வரும் இவர், அடுத்த ஆண்டு நடைபெறும் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் டெஸ்ட் சாம்பியன்ஸ்ஷிப்பை வெல்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com