இந்த ஆண்டு நடைபெற்ற பாரிஸ் ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஒரு வீராங்கனை, பெண்ணே அல்ல, ஒரு ஆண் என்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த ஆண்டு ஒலிம்பிக் தொடர் பாரிஸில் நடைபெற்றது. மிகவும் கோலாகலமாக ஆரம்பித்த இந்த தொடரில் பல்வேறு குற்றச்சாட்டுகள் எழுந்தன. வீரர்கள் தங்க இடம் இல்லாமல், சரியான உணவு இல்லாமல் தவித்தனர். அதேபோல் சிறு விஷயங்களுக்கெல்லாம் தகுதி நீக்கம் என அனைத்தும் சரியாக இல்லை. இந்திய வீரர்களும் பல கஷ்டங்களை அனுபவித்ததாக அப்போது செய்திகள் வந்தன.
அந்தவகையில் தற்போது ஒரு செய்தி வந்து அனைவரையும் அதிர்ச்சியில் தள்ளியுள்ளது. உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் தொடரில் பாலின தகுதி சோதனையில் தோல்வியடைந்ததாக தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஒருவர்தான் இமானே கெலிஃப். இவர் அல்ஜீரிய நாட்டைச் சேர்ந்தவர். உலக சாம்பியன்ஷிப் தொடரில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட ஓராண்டிற்கு பிறகு இவர் பாரிஸ் ஒலிம்பிக்கில் கலந்துக்கொண்டார். இதில் அவர் தங்கமும் வென்றார்.
இதனைத்தொடர்ந்து அவர் சீனாவின் உலக சாம்பியனான யாங் லியூ-வை வெல்டர்வெயிட் பிரிவில் வீழ்த்தி தங்கம் வென்றார். அதன்பிறகும் இவர் மீது பாலினம் குறித்து புகார் எழுந்தது. இதனையடுத்து பரிசோதனை நடத்தப்பட்டது. இந்நிலையில் இமான் கெலிஃப் ஒரு ஆண் என்பதற்கான மருத்துவ அறிக்கை தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த அறிக்கையில் அவருக்கு கர்பப்பை இல்லை என்பது தெரியவந்துள்ளது. மேலும் ஆண்களுக்கான உடலமைப்பும், மருத்துவ ரீதியாக ஆண்களுக்கான குணா அதிசயங்கள் இருப்பதும் தெரியவந்திருக்கிறது. அவருக்கு எக்ஸ் ஒய் குரோமோசோம் இருப்பது அந்த அறிக்கை மூலம் வெளியாகி இருக்கிறது.
மேலும் ஆண்களுக்கு மட்டுமே ஏற்படும் ஒரு குறைபாடு இருப்பதும் கண்டறியப்பட்டது. அதாவது 5-alpha reductase insufficiency என்ற குறைப்பாடு இருக்கிறதாம். இந்த குறைப்பாடு இருந்தால் முகத்தில் மீசை தாடி போன்றவை இருக்காது என்று அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இந்த மருத்துவ அறிக்கையை ஒரு ஃப்ரென்ச் பத்திரிக்கையாளர் வெளியிட்டிருக்கிறார்.
இதற்கு முன்னர் பல முறை இந்த சர்ச்சை கிளம்பும்போது தான் ஒரு பெண்தான் என்று அவர் பல பேட்டிகளில் கூறியிருக்கிறார். இதனையடுத்து இப்போது வெளியான இந்த மருத்துவ அறிக்கை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.