நியூசிலாந்து அணியை கிழித்துத் தொங்கவிட்ட தமிழக வீரர்… 7 விக்கெட்டுகள் எடுத்து அசத்தல்!

Washington Sundar
Washington Sundar
Published on

 நியூசிலாந்து அணிக்கும் இந்திய அணிக்கும் இடையே இரண்டாவது டெஸ்ட் போட்டி தொடங்கியது. இந்தநிலையில் முதல் நாளே தமிழக வீரர் 7 விக்கெட்டுகள் எடுத்து அசத்தியிருக்கிறார்.

இந்தியா நியூசிலாந்து இடையே மூன்று போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர் நடைபெற்று வருகிறது. இதில் முதலாவது டெஸ்ட் போட்டி முடிவடைந்தது. முதல் இன்னிங்ஸில் இந்திய அணி சொதப்பியதால், இரண்டாவது இன்னிங்ஸில் எவ்வளவு முடிந்தும் வெற்றிபெற முடியவில்லை.

இதனால், நியூசிலாந்து அணி 3 போட்டிகளில் ஒரு போட்டியில் வென்று முன்னிலை வகிக்கிறது. இதனையடுத்து இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று தொடங்கியது. முதலில் நியூசிலாந்து அணி பேட்டிங் செய்தது. இதனையடுத்து நியூசிலாந்து அணியின் கேப்டன் டாம் லாத்தம் 15 ரன்கள் எடுத்திருந்த நிலையில், அஸ்வின் பந்தில் ஆட்டமிழந்தார்.

அடுத்ததாக கான்வே மற்றும் வில் யங் ஆகியோர் விளையாடினர். வில் யங் 18 ரன்களில் ஆட்டமிழக்க, கான்வே அரைசதம் அடித்து இந்தியாவுக்கு நெருக்கடி கொடுத்தார். ஆனால், அஸ்வின் கான்வேவை 76 ரன்களில் அவுட்டாக்கிவிட்டார்.

ஆனாலும், ரச்சின் அடுத்து இந்திய அணிக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார். அரைசதம் அடித்து சிறப்பாக விளையாடிக்கொண்டிருந்த நேரத்தில்தான், இந்திய (தமிழக) வீரர் ஆட்டத்தை இந்தியா பக்கம் திருப்பினார். அப்போது நியூசிலாந்து அணி மூன்று விக்கெட்டுகள் இழப்பிற்கு 197 ரன்கள் எடுத்திருந்தது.

அப்போது சுந்தர் தொடர்ந்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார். ரச்சின் ரவீந்திரா 65 ரன்களிலும், டாம் பிளண்டல் மூன்று ரன்களிலும் டேரல் மிட்செல் 18 ரன்களிலும் அடுத்தடுத்து ஆட்டம் இழந்தனர்.

இதையும் படியுங்கள்:
T20 கிரிக்கெட்டில் வரலாற்றுச் சாதனை! ஜிம்பாப்வே அடிச்சாலே சிக்ஸ் தான்!
Washington Sundar

சுந்தரின் பந்துவீச்சை எதிர்க்கொள்ள முடியாமல் நியூசிலாந்து வீரர்கள் தடுமாறினர். பின்னர் சாண்டனர் மட்டுமே 33 ரன்கள் எடுத்தார். ஆனால், அதன்பின்னர் வந்த அனைவரும் வந்த வேகத்தில் திரும்பினர்.

இதனால் நியூசிலாந்து அணி 259 ரன்களில் ஆல் அவுட் ஆனது. வாஷிங்டன் சுந்தர் 59 ரன்களை மட்டுமே விட்டுக்கொடுத்து 7 விக்கெட்டுகள் எடுத்து இந்திய அணிக்கு மிகப்பெரிய பலமாக செயல்பட்டார். இதனையடுத்து இந்திய அணி பேட்டிங்கில் களமிறங்கியது. ரோஹித் ஷர்மா டக் அவுட்டாகி வெளியேறினார். ஜெய்ஸ்வாலும்  கில்லும் விளையாடினர். அதற்குள் இன்றைய நாளின் ஆட்டம் முடிந்தது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com