சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் பாகிஸ்தான் அணி வெளியேறியதை அடுத்து இந்திய முன்னாள் வீரர் சுனில் கவாஸ்கர் பேசியிருக்கிறார்.
சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்திய பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது. இந்திய அணி வீரர்கள் பல சாதனைகளையும் படைத்துள்ளனர். இதனால், இந்திய ரசிகர்கள் பெரும் குஷியில் இருந்தாலும், பாகிஸ்தான் வீரர்கள் தனது சொந்த வீரர்களையே சமூக வலைதளத்தில் திட்டி தீர்த்து வருகிறார்கள்.
ஏனெனில், பாகிஸ்தான் விளையாடிய முதல் போட்டியும் தோல்வியில் முடிந்தது. இதனால், முதல் அணியாக பாகிஸ்தான் அணி தொடரை விட்டு வெளியேறுகிறது.
இதனால், பாகிஸ்தான் முன்னாள் வீரர்கள் அணி வீரர்களையும், நிர்வாகத்தையும் கடுமையாக பேசியிருந்தார்கள்.
பாகிஸ்தான் கிரிக்கெட் நிர்வாகத்துக்கு அறிவும் கிடையாது, என்ன செய்ய வேண்டும் எனவும் தெரியவில்லை என்று சோயித் அக்தர் கூறினார். என் வாழ்நாளில் இது போன்ற ஒன்றை நான் பார்த்ததேயில்லை. மிக மோசமான நிகழ்வு இது என்று வசீம் அக்ரம் பேசினார். சொந்த நாட்டு முன்னாள் வீரர்களே இப்படி பேசியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இப்படி சொந்த நாட்டு வீரர்களே கடும் விமர்சனங்களை செய்து வரும் நிலையில், இந்திய வீரர்கள் ஆதரவு தெரிவித்து வருகின்றனர்.
முன்னாள் வீரர் யுவராஜ் சிங்கின் தந்தை யோக்ராஜ் சிங் கூட கருத்து தெரிவித்தார். நானாக இருந்திருந்தால், பாகிஸ்தான் அணியை மீண்டும் நன்றாக உருவாக்கி இருப்பேன் என்று பேசியிருந்தார்.
இப்போது சுனில் கவாஸ்கர் பேசியிருக்கிறார். அதாவது, “நீங்கள் பேட்டிங் நுட்பம் குறித்து என்னிடம் கேட்டால், நான் பாபர் அசாமிடம் ஒன்றை மட்டும் கூறுவேன். பந்தை எதிர்கொள்ளும் போது அவரது நிலைப்பாடு அகலமாக இருக்கிறது. அவர் க்ரீசில் நிற்கும்போது தனது கால்களுக்கு இடையே இருக்கும் அகலத்தை குறைத்தால் அவருக்கு இரண்டு நன்மைகள் கிடைக்கும். அவர் பந்தை எதிர்கொள்ள முன்னோக்கியோ அல்லது பின் நோக்கியோ நகரும் போது எந்த விதமான சங்கடமும் இருக்காது.
இரண்டாவதாக உங்கள் இடைவெளியை மூடும் போது பந்தை எதிர்கொள்வதற்கான உங்கள் உயரமும் அதிகரிக்கிறது. நீங்கள் உயரமாக நிமிர்ந்து நிற்கும்போது பந்தை எளிதாக சமாளிக்க முடியும். அதற்குப் பிறகு நீங்கள் ரன்கள் அடிப்பதற்கான திறமை எளிதாக வந்து விடும். இப்படி மட்டும் விளையாடுனீர்கள் என்றால், ஒட்டுமொத்த உலகமும் உங்களது பேட்டிங் கண்டு மகிழ்ச்சியடையும்.” என்று பேசினார்.