1948ஆம் ஆண்டு... அதிக எண்ணிக்கை (12) அறிமுக வீரர்கள் கண்ட டெஸ்ட் மேட்ச்!

1948ஆம் ஆண்டு... முதல் பிரிட்ஜ் டவுன் டெஸ்டில் அறிமுகமான சில வீரர்கள் பிற்காலத்தில் சாதனை படைத்தார்கள். இந்த டெஸ்ட் மற்றும் அறிமுக வீரர்கள் குறித்த சுவாரசியமான தகவல்கள்...
England VS West Indies
England VS West IndiesAI Image
Published on

1948ஆம் ஆண்டு இங்கிலாந்து அணி, மேற்கு இந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டது. இந்த ஆட்டத்தில் 12 வீரர்கள் அறிமுக வீரர்களாக களம் இறங்கினர். முதல் பிரிட்ஜ் டவுன் டெஸ்ட் ஜனவரி மாதம் 1948ல் நடந்தது (21 முதல் 26-ம்தேதி வரையில்). இந்த டெஸ்டில் விளையாடிய ஒரு வீரர் பிற்காலத்தில் உலக ரெகார்ட் ஏற்படுத்தினார். அது இன்னும் தகர்த்தப் படாமல் உள்ளது. எதிர்காலத்திலும் தகர்த்தப்படுமா என்பதும் சந்தேகமே. இந்த டெஸ்டில் அறிமுகமான சில வீரர்கள் பிற்காலத்தில் சாதனை படைத்தார்கள்.

இந்த டெஸ்ட் மற்றும் அறிமுக வீரர்கள் குறித்த சுவாரசியமான தகவல்கள்:

இதையும் படியுங்கள்:
3வது T20 போட்டி: தென்னாப்பிரிகாவை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி..!
England VS West Indies

* இங்கிலாந்து அணியில் 5, மேற்கு இந்திய தீவுகள் அணியில் 7 வீரர்கள் அறிமுகம் ஆனார்கள்.

* இங்கிலாந்து அணி - டென்னிஸ் புரூக்ஸ், ஸ்மித்சன், Maurice Tremlett, வின்ஸ்டன் பிளேஸ், ஜிம் லேக்கர்.

* மேற்கு இந்திய தீவுகள் அணி - ஜான் கோடார்ட், காஸ்கின், கிளைத் வால்காட், எவர்டன் வீக்ஸ், ராபர்ட் ஜூலியன் கிறிஸ்டியானி, பெர்கூசன், பிரியிர் ஜோன்ஸ்.

* இந்த டெஸ்டில் இரண்டு வால்காட்டுக்கள் பங்கு பெற்றனர். அதில் ஒருவர் அம்பயர்.

* கிளைத் வால்காட் (மேற்கு இந்திய தீவு வீரர்) ஹரோல்டு வால்காட் (அம்பயர்)

* இங்கிலாந்து வீரர் டென்னிஸ் புரூக்ஸ் 525 முதல் தர ஆட்டங்களில் குவித்த ரன்கள் 30874. ஆனால் டெஸ்ட் கிரிக்கெட்டை பொறுத்த வரையில் அவர் நிலைமை பரிதாபம். ஆம். இதுதான் அவரது அறிமுக மற்றும் இறுதி டெஸ்ட். எடுத்த ரன்கள் 10,7.

* ஸ்மித்சன் என்ற வீரர் விளையாடியது இரண்டே டெஸ்டுக்கள். இவரது டெஸ்ட் கிரிக்கெட் வாழ்க்கை இந்த மேற்கு இந்திய தீவுகள் சுற்றுப் பயணத்துடன் முடிந்து விட்டது. இந்த அறிமுக டெஸ்டில் ஒரு இன்னிங்சில் மட்டும் ஆடிய இவர் ரன் எதுவும் எடுக்கவில்லை. எடுத்தது 0.

* இரண்டாவது போர்ட் ஆப் ஸ்பெயின் டெஸ்டில் இரண்டு இன்னிங்சிலும் தலா 35 ரன்கள் எடுத்து இருமுறையும் பெர்கூசன் பவுலிங்கில் அவுட் ஆனார். இவரது மொத்த டெஸ்ட் ஸ்கோர் 70 ரன்கள். இந்த இரண்டாவது டெஸ்டில் மட்டும் எடுக்கப்பட்டது குறிப்பிட்டதக்க ஒன்றாகும்.

* மௌரைஸ் ட்ரிம்லெட். இவரது டெஸ்ட் சரித்திரமும் இந்த சுற்றுப்பயணத்தோடு முடிவு பெற்றது. இந்த பவுலர் விளையாடியது 3 டெஸ்டுக்கள். எடுத்தது 4 விக்கெட்டுக்கள்.

* வின்ஸ்டன் ப்ளேஸ் இந்த அறிமுக டெஸ்டில் அவ்வளவாக சோபிக்கவில்லை. 3 டெஸ்டுக்கள் மட்டுமே இவரால் ஆட முடிந்தது. அதில் ஒரு சதம் (107 ரன்கள்).

* ஒரே டெஸ்டில் 19 விக்கெட்டுக்கள் எடுத்து சாதித்த இங்கிலாந்து அணியின் ஜிம் லேக்கரின் அறிமுக டெஸ்ட் இது. இந்த அறிமுக டெஸ்டில் அவர் வீழ்த்திய மொத்த விக்கெட்டுக்கள் 9. ஜிம் லேக்கரை தவிர மற்ற அறிமுக வீரர்கள் 3 டெஸ்டுகளுக்கு மேல் ஆடவில்லை என்பது குறிப்பிட்டத்தக்கது. ஜிம் லேக்கர் 46 டெஸ்டுக்களில் 193 விக்கெட்டுக்கள் வீழ்த்தினார்.

* மேற்கு இந்திய தீவின் அறிமுக வீரர் ஜான் கோடார்ட் விளையாடிய 27 டெஸ்டுக்களில் 22 ல் கேப்டனாக திகழ்ந்தவர். அறிமுக டெஸ்டில் இவர் எடுத்த ரன்கள் 28, 18.

* இந்த டெஸ்டில் ஆட துவங்கிய கிளைத் வால்காட் 44 டெஸ்டுக்களில் 3,798 ரன்கள் எடுத்தவர். இவரது சராசரி கிட்டத்தட்ட சமமானது டெஸ்ட் (56.68) முதல் தர ஆட்டத்தில் (56.55). அறிமுக டெஸ்டில் வால்காட் எடுத்த ரன்கள் 8, 16. கேட்சுக்கள் 3.

இதையும் படியுங்கள்:
ஒரே மாதத்தில் மூன்று உலகக் கோப்பைகள்: விளையாட்டு உலகை ஆட்சி செய்யும் இந்திய மகளிர் அணி..!
England VS West Indies

* வால்காட்டுடன் இந்த டெஸ்டில் அறிமுகம் ஆன மற்றும் ஒரு விக்கெட் கீப்பர் ராபர்ட் ஜூலியன் கிறிஸ்டியானி. இவர் முதல் இன்னிங்சில் எடுத்தது 1 ரன். இரண்டாவது இன்னிங்சில் அடித்த ரன்கள் 99. ஆக மொத்தம் 100 ரன்கள். இது ஒரு ரிக்கார்ட்.

* புகழ் பெற்ற எவர்டன் வீக்ஸ் இந்த டெஸ்டில் அறிமுகம் ஆனார். 48 டெஸ்டுக்களில் 4,455 ரன்கள். சராசரி (58.61). இந்த டெஸ்டில் ரன்கள் 35, 25. தொடர்ந்து 5 இன்னிங்ஸ்களில் சதங்கள் அடித்து சாதித்தவர், எவர்டன் வீக்ஸ்.

* காஸ்கின் அறிமுக டெஸ்டில் ரன்கள் 10, 7 மற்றும் வீழ்த்தியது 1 விக்கெட். மொத்தம் விளையாடியது 2 டெஸ்டுக்கள்.

* பிரியர் ஜோன்ஸ். ரன்கள் 10*,7. பவுலிங் 4 விக்கெட்டுக்கள்.

* வில்பிரட் பெர்குசன் இந்த அறிமுக டெஸ்டில் எடுத்தது 0 மற்றும் 56* நாட் அவுட் ரன்கள். ஸ்பின் பவுலிங்கில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் தலா 1 விக்கெட் எடுத்தார்.

* டிராவில் முடிந்த இந்த டெஸ்டில் இங்கிலாந்து பவுலர் டிக் ஹோவோர்த் மொத்தம் 7 விக்கெட்டுக்கள்.

* இங்கிலாந்து வீரர் ஜோ ஹார்ட் ஸ்டாப் ரன்கள் 98.

* ஜாக் ராபர்ட்சன் 80, 51 ரன்கள் ஸ்கோர் செய்தார்.

* இங்கிலாந்து வீரர் ஜாக் இகின் மற்றும் விக்கெட் கீப்பர் எவன்ஸ் இந்த டெஸ்டில் தலா 4 கேட்சுக்கள் பிடித்தனர்.

இதையும் படியுங்கள்:
#BREAKING: ஐ.சி.சி. டி20 உலகக் கோப்பை 2026: இந்திய அணி அறிவிப்பு..!
England VS West Indies

* மேற்கு இந்திய தீவுக்கள் அணி சார்பாக ஜெபிரேய் ஸ்டாலிமெய்ர் 78, 31, கோம்ஸ் 86 மற்றும் எப் வில்லியம்ஸ் 72 ரன்கள் குவித்தனர்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com