இந்த விதியில் எந்த மாற்றமும் இல்லை – பிசிசிஐ அறிவிப்பால் அதிருப்தியில் கோலி!

Virat kohli
Virat kohli
Published on

கோலி முன்வைத்த கோரிக்கையை முன்னிட்டு, பிசிசிஐ ஒரு விதியை மீண்டும் பரிசீலனை செய்தது. ஆனால், அதில் தற்போது எந்த மாற்றமும் இல்லை என்று அறிவித்திருக்கிறது.

இந்திய அணி தொடர்ந்து ஒருமூச்சு பல போட்டிகளில் தோல்வியை சந்தித்து வந்தது. இதனால் கடுப்பான பிசிசிஐ ஒரு எச்சரிக்கை விடுத்தது. அதாவது சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்திய அணி வெற்றிபெறவில்லை என்றால், இந்திய அணியின் கேப்டன் முதல் பயிற்சியாளர் வரை அனைவரும் மாற்றப்படுவார்கள் என்று எச்சரித்தது. மேலும் இந்திய அணிக்கு சில விதிகளையும் போட்டது. இந்த அனைத்துமே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. வீரர்களிடம் நேரடியாக பிசிசிஐ பேசியது என்று கிரிக்கெட் வட்டார செய்திகள் கூறின.

சாம்பியன்ஸ் ட்ராபியில் இந்திய அணி வென்றாலும், அந்த விதிகளை மட்டும் இன்றும் நீக்கவில்லை.

அதாவது வெளிநாடு செல்லும்போது இத்தனை வாரங்களுக்கு பிறகு குறிப்பிட்ட நாட்கள்தான் குடும்பத்துடன் இருக்க வேண்டும், இத்தனை எடை உடைமைதான் எடுத்துக்கொள்ள வேண்டும் போன்ற பல்வேறு கட்டுபாடுகள் விதிக்கப்பட்டன.

அதேபோல் எந்த வீரர்களும் தனக்கென்று சொந்தமான சமயல்காரர்களை வைத்துக்கொள்ள கூடாது.

இப்படி பல விதிகளை பிசிசிஐ விதித்தது.

ஆனால், இந்த விதிகளில் பல வீரர்களுக்கு உடன்பாடில்லை.

குறிப்பாக விராட் கோலி ஒரு விதிக்கு எதிராக பேசினார். அதாவது வெளிநாட்டில் 45 நாட்களுக்கு மேலான தொடரில் விளையாடினால் 14 நாட்களும் அதற்கு குறைவானது என்றால் ஒரு வாரமும் அவர்களோடு குடும்ப உறுப்பினர்கள் தங்கி இருக்கலாம் என்பதில்தான் கோலிக்கு உடன்பாடில்லை.

இதுகுறித்து அதிருப்தி தெரிவித்த கோலி, சில கருத்துக்களையும் முன்வைத்தார். இதனால், பிசிசிஐ இதனை மேல்முறையீடு செய்து வந்த நிலையில், இந்த விதி மாற்றப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்த நிலையில் இந்த கட்டுப்பாட்டில் எந்தவித மாற்றமும் இல்லை என்று பிசிசிஐ செயலாளர் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பேசிய அவர், “இந்த விதியில் எந்த மாற்றமும் கிடையாது. ஏனெனில், இது தேசத்திற்கானதும் தான். எங்களுக்கும் முக்கியமானது. ஜனநாயக அமைப்பில் மக்கள் தங்களுடைய கருத்துக்களை வெளிப்படுத்துவதற்கு உரிமை இருக்கிறது. இதில் மனக்கசப்பு இருக்கலாம் என்பதை பிசிசிஐ அங்கீகரிக்கிறது. அனைவரின் நலன் கருதியும் இது செயல்படுத்தப்பட்டுள்ளது. ஆனால், இந்த விதி ஒரே இரவில் திட்டமிட்டதில்லை. இது காலம் காலமாக இருப்பதுதான். எனினும், வெளிநாட்டு சுற்றுப்பயணங்களின் போது வீரர்களுடன் குடும்ப உறுப்பினர்கள் தங்கும் காலத்தை பிசிசி அதிகரித்துள்ளது” என்றும் கூறியுள்ளார். இதனால் இந்தியாவில் நடக்கும் போட்டிகளில் வீரர்கள் அதே விதியைதான் பின்பற்ற வேண்டும் என்று தெரியவருகிறது.

இதையும் படியுங்கள்:
நாளும் மகிழ்ச்சியாக வாழ பத்து எளிய வழிகள்!
Virat kohli

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com