சாப்பிட்ட பிறகு விஷமாக மாறும் உணவுகள் இவை தான்... கவனமாக இருங்க!

சாப்பிட்ட பிறகு விஷமாக மாறும் உணவுகள் இவை தான்... கவனமாக இருங்க!
Published on

சாப்பிட்ட பின் நஞ்சாக மாறும் உணவுப் பொருட்கள் பற்றி பார்ப்போம். உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் சராசரியாக 16 லட்சம் பேர், 'உண்ட பின் நஞ்சாக மாறும்' (Food Poison) உணவினால் பாதிக்கப்படுவதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது. நம்மை அறியாமையே நாம் உணவு என்ற பெயரில் சில விஷத்தை சாப்பிட்ட வருகின்றோம். இதையெல்லாம் தினமும் தானே சாப்பிடுகிறோம் என அதிர்ச்சியில் உறைய வைக்கிறது. அப்படி என்னென்ன உணவுகள் நஞ்சாகும் என தெரிந்துகொள்ளலாம்.

கழுவப்படாத காய்கறிகள்

பச்சை காய்கறிகள் சில நேரங்களில் சால்மோனெல்லா, ஈ.கோலி மற்றும் லிஸ்டீரியா போன்ற நுண்ணுயிரிகளைக் கொண்டிருக்கலாம். அவற்றை கவனமாக சுத்தம் செய்த பின்னரே உணவாக உட்கொள்ள வேண்டும்.

முளைகட்டிய பயறுகள்

முளை கட்டிய பயறுகளை அதிக நேரம் ஈரமாக வைத்திருக்கக் கூடாது. குறிப்பாக, காற்றோட்டம் இல்லாத இடத்தில் அதிக நேரம் வைக்கக் கூடாது.

சேமிக்கப்பட்ட மாவு

எந்தப் பழத்தையும், காய்கறிகளையும் அதிக நேரம் வீட்டில் வைக்கக் கூடாது. அதே போல் நீண்ட நாள் ஆன தோசை மாவு, இட்லி மாவு இவற்றையும் பயன்படுத்தக்கூடாது. நேரம் செல்ல செல்ல இவற்றில் நுண்ணுயிர்கள் வளர்ந்துகொண்டே இருக்கும்.

பச்சை பால், இதர பால் பொருட்கள்

பச்சை பாலில் தயாரிக்கப்படும் ஐஸ்கிரீம், தயிர் போன்றவையும் தீங்கு விளைவிக்கும். பச்சைப் பாலில், அடிவயிற்றில் காசநோய் ஏற்படுத்தும் அபாயமும் அதிகம். பாலில் உள்ள சத்துக்கள் அதை சூடாக்கும் போது பெரிய அளவில் அழிந்து போவதில்லை என்பதால் அதைச் சூடாக்கிச் சாப்பிடுவதே நலம்.

பச்சை முட்டை

முட்டையை வேகவைக்கும் போது அதன் வெள்ளைக்கரு மற்றும் மஞ்சள் கரு கெட்டியாகும் வரை வேகவைக்க வேண்டும். அதை சேமித்துவைக்கும் போது குளிர்சாதன பெட்டியை சரியான வெப்பநிலையில் வைக்க அறிவுறுத்தப்படுகிறது.

பச்சை இறைச்சி

பச்சையான அல்லது வேகவைக்கப்படாத இறைச்சியை உண்பதால் ஆபத்துகள் அதிகம். இவற்றில் உள்ள நுண்ணுயிரிகளில் கேம்பிலோபாக்டர் என்ற பாக்டீரியா உள்ளது. சாப்பாட்டுக்குப் பின் மீதமுள்ள இறைச்சியை, சமைத்த இரண்டு மணி நேரத்திற்குள் குளிர்சாதன பெட்டியில் வைக்கலாம்.

பச்சை மீன்

மீனின் பச்சை வாசனை மறையும் வரை அவற்றை சுத்தம் செய்து சமைக்க வேண்டும். பச்சை மீனை எப்போதும் உண்ணக்கூடாது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com