சாம்பியன்ஸ் தொடரில் இந்த வீரர்கள் நிச்சயம் அசத்துவார்கள் – கங்குலி நம்பிக்கை!

Saurav Ganguly
Saurav Ganguly
Published on

இந்த ஆண்டு சாம்பியன்ஸ் ட்ராபி தொடரில் இந்த இரண்டு வீரர்கள் மிகச்சிறப்பாக விளையாடுவார்கள் என்று கங்குலி தெரிவித்துள்ளார்.

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் மொத்தம் 8 அணிகள் மோதவுள்ளன. 29 ஆண்டுகளுக்கு பின் பாகிஸ்தானில் முதல்முறையாக சாம்பியன்ஸ் ட்ராபி நடைபெறவுள்ளது. இதற்காக பாகிஸ்தான் கிரிக்கெட் அமைப்பு பல நூறு கோடிகளையும் செலவிட்டுள்ளது.

பாகிஸ்தானில் ராவல்பிண்டி, லாகூர் மற்றும் கராச்சி ஆகிய மூன்று இடங்களில் போட்டிகள் நடத்தப்படும். ஐசிசி ஆண்கள் சாம்பியன்ஸ் டிராபியின் ஒன்பதாவது தொடர் மொத்தமாக 19 நாட்கள் நடைபெறும். இந்த ஐசிசி சாம்பியன்ஷிப் தொடர் பிப்ரவரி 19ம் தேதி கராச்சியில் தொடங்குகிறது. இறுதிப் போட்டி மார்ச் 9 அன்று நடைபெறும்.

8 அணிகள் போட்டியிடும் இந்த தொடரில் 15 போட்டிகள் நடைபெறும். அதன்படி குரூப் ஏ வில் பாகிஸ்தான், இந்தியா, நியூசிலாந்து, வங்கதேசம் இடம் பெற்றிருக்கிறது. குரூப் பி யில் தென்னாப்பிரிக்கா, ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து ஆகிய அணிகள் இடம் பிடித்திருக்கின்றன. இந்தியா விளையாடும் போட்டிகள் மட்டும் ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் நடத்தப்படும்.

இதையும் படியுங்கள்:
sweeta, styla, smarta ... ட்ரெண்டி லினென் காட்டன்ஸ்!
Saurav Ganguly

அந்தககையில் இந்திய அணியின் வீரர்களை சமீபத்தில் பிசிசிஐ அறிவித்தது. ரோஹித் சர்மா தலைமையிலான அந்த அணியில் ஜஸ்பிரித் பும்ரா, ஷமி, விராட் கோலி உள்ளிட்ட முதன்மை வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார்கள். இதில் ரோஹித் ஷர்மா மற்றும் விராட் கோலியின் பேட்டிங் கடந்த சில போட்டிகளாக சரியாக இல்லை. இதனால் பல விமர்சனங்களுக்கு ஆளானார்கள்.

இதையும் படியுங்கள்:
ராணிபுரம் மலைகளின் இயற்கை அழகு: சுற்றுலா பயணிகளின் சொர்க்கம்!
Saurav Ganguly

ஆனால், கங்குலி இனி வரும் சாம்பியன்ஸ் தொடரில் அவர்கள் இருவருடைய பேட்டிங்கும் சிறப்பாக இருக்கும் என்று கூறியுள்ளார். இதுகுறித்து அவர் பேசுகையில், “வெள்ளைப்பந்து கிரிக்கெட்டில் விராட் கோலி, ரோகித் சர்மா பெரிய வீரர்கள். சாம்பியன்ஸ் டிராபியில் குறிப்பாக துபாயில் பிட்ச்கள் நன்றாக இருக்கும் என்று நாம் நம்பலாம். கடந்த சில வெள்ளைப்பந்து உலகக்கோப்பைகளில் அவர்கள் மிகவும் சிறப்பாக விளையாடியுள்ளார்கள். எனவே விராட் கோலி, ரோஹித் சர்மா நிச்சயம் நன்றாக செயல்பட வாய்ப்புள்ளது.” என்று பேசினார்.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com