சிஎஸ்கேவின் புதிய விக்கெட் கீப்பர் இவர்தான்!

MS dhoni
MS dhoni
Published on

சிஎஸ்கே அணியில் தோனிக்கு அடுத்து விக்கெட் கீப்பராக செயல்படப்போகும் வீரரை அறிவித்திருக்கிறது சிஎஸ்கே நிர்வாகம்.

கடந்த ஆண்டு ஐபிஎல் தொடர் பல எதிர்பார்ப்புகளுக்கும் ட்விஸ்ட்களுக்கும் நடுவே விறுவிறுப்பாக நடந்து முடிந்தது. கடந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் மூன்று கேப்டன்கள் சாதாரண வீரர்களாக அணியில் விளையாடினர். விராட் கோலி, தோனி மற்றும் ரோஹித் ஷர்மா. தோனி தனது பதவியை ருதுராஜிடம் ஒப்படைத்தார்.

ஆனால், மும்பை அணி நிர்வாகமே ரோஹித் கேப்டன் பதவியை ஹார்திக் பாண்டியாவிடம் கொடுத்தது. இதனையடுத்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து விமர்சனங்கள் எழுந்தன. ஹார்திக் பாண்டியா மிகவும் வருத்தப்பட்டார். பின் உலகக்கோப்பையில் இந்தியா வெற்றிபெறுவதில் பாண்டியா சிறப்பான பங்களிப்பை கொடுத்ததன் மூலம் மீண்டும் ரசிகர்கள் மனதைக் கவர்ந்தார்.

இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் மெகா ஏலம் சென்ற ஆண்டு இறுதியில் நடைபெற்றது. இதனையடுத்து பயிற்சியாளர்கள், துணை பயிற்சியாளர்கள், விக்கெட் கீப்பர்கள் போன்ற அனைத்தையும் அனைத்து அணிகளும் தேர்ந்தெடுத்து வருகின்றனர். அந்தவகையில், தற்போது சிஎஸ்கே அணியின் விக்கெட் கீப்பர் பற்றிய செய்தி வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்கள்:
உணவு அருந்துவதற்கு முன் வாழை இலையில் தண்ணீர் தெளிப்பதன் காரணம் தெரியுமா?
MS dhoni

சிஎஸ்கே அணியின் தூண் எம்.எஸ்.தோனி. ஆனால், அவர் தனது கெரியர் கடைசி ஸ்டேஜில் இருக்கிறது. எப்போது வேண்டுமென்றாலும் தனது ஓய்வை அறிவிக்கலாம். ஐபிஎல் 18ஆவது சீசனில் மகேந்திரசிங் தோனி, சில போட்டிகளில் மட்டும் விளையாடிவிட்டு, சேப்பாக்கத்தில் பேர்வெல் போட்டியுடன் விடைபெற அதிக வாய்ப்புள்ளது அதற்கான முன்னேற்பாடை சென்ற ஆண்டே தொடங்கிவிட்டார். அதாவது அணியின் சாதாரண வீரராக இருந்து கேப்டனுக்கு அனைத்தையும் கற்றுத் தந்தார். இதன் அடுத்த கட்டமாக இம்முறை விக்கெட் கீப்பருக்கு கற்றுத் தரவுள்ளார்.

இதையும் படியுங்கள்:
'குட் பேட் அக்லி' ரிலீஸ் எப்போது? வெளியான மாஸ் அப்டேட்!
MS dhoni

சிஎஸ்கே அணியின் அடுத்த விக்கெட் கீப்பராக கே.எல்.ராகுல், ரிஷப் பந்த், ஷ்ரேயஸ் ஐயர் ஆகியோரில் யாராவது ஒருவர் வருவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அணி நிர்வாகம் ஏலத்தில் யாரையும் தேர்ந்தெடுக்கவில்லை.

இறுதியில், ருதுராஜ் கெய்க்வாட்டை, புது விக்கெட் கீப்பராக தேர்வு செய்திருப்பதாகவும் கூறப்படுகிறது. இவர் இதற்கு முன்னர் ஏற்கனவே மும்பை அணியில் விக்கெட் கீப்பராக விளையாடியிருக்கிறார்.  ஐபிஎல் 18ஆவது சீசனுக்கான பயிற்சியின்போது, அவர் விக்கெட் கீப்பர் பயிற்சியிலும் ஈடுபடுவார் எனத் தகவல் வெளியாகி உள்ளது.

Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com