ஒவ்வொரு வெற்றிக்கு பின்னரும் தோனி ஸ்டம்பை எடுத்துச் செல்ல இதுதான் காரணம்!

Dhoni
Dhoni
Published on

ஒவ்வொரு போட்டியிலும் தனது அணி வெற்றிபெற்றவுடன் எம்.எஸ்.தோனி ஸ்டம்ப் தூக்குவதை கவனத்திருக்கிறீர்களா? ஏன் அவ்வாறு செய்கிறார் என்று தெரியுமா?

இந்தியாவின் மிகவும் முக்கியமான ஒரு வீரர் எம்.எஸ்.தோனி. இவருக்கு இந்தியா முழுவதும் ஏராளமான ரசிகர்கள் உள்ளனர். இவர் கிரிக்கெட் ஆடும் ஸ்டைலே தனி. மேலும், அவ்வப்போது கூல் லுக் கொடுத்து கூல் கேப்டனாக நிறைய ஹேர் ஸ்டைலையும் அறிமுகப்படுத்துவார்.

தோனிக்கு எப்போதும் சில வழக்கங்கள் இருக்கும். அதாவது தோனி சிக்னேச்சர் ஸ்டைல் அல்லது போஸ் என்று நிறையவே இருக்கும். அந்தவகையில், அவர் வெற்றியடைந்ததும் எப்போதும் செய்கின்ற ஒரு வழக்கத்தைப் பற்றித்தான் பார்க்கவுள்ளோம்.

அதாவது வெற்றிக்கு பிறகு தோனி ஒரு ஸ்டம்பை எடுத்துக்கொள்ளும் பழக்கத்தை பல ஆண்டுகளாக பின்பற்றி வருகிறார். அப்படி செய்வதற்கான காரணத்தை அவரே ஒரு பேட்டியில் கூறியிருக்கிறார்.

“இந்த போட்டிக்காக நாம் எவ்வளவு உழைத்தோம், எவ்வளவு போராடி வெற்றிபெற்றோம் என்பதை மறக்காமல் இருப்பதற்காக ஒரு பரிசாகவே இந்த ஸ்டம்பை எடுத்து வைத்துக்கொள்வேன். நான் கிரிக்கெட் விளையாடிய காலத்திலிருந்து என் மனதுக்கு நிறைவான போட்டியில் இருக்கும் ஒரு ஸ்டெம்பை நான் எடுத்து வந்திருக்கிறேன்.

இதற்காக என் வீட்டில் ஒரு தனி அறை இருக்கிறது. ஸ்டம்பை எடுத்துவந்து வைத்துவிட்டு, வீடியோ பார்த்து அது எந்த போட்டிக்கான ஸ்டம்ப் என்பதைப் பார்த்து பிரித்து வைத்துக்கொள்வேன்.” என்று கூறினார்.

இதில் ஒரு டிவிஸ்ட் என்னவென்றால், 2015 ஆம் ஆண்டுக்குப் பிறகு போட்டியில் பயன்படுத்தப்படும் ஸ்டெம்பை வீரர்கள் எடுத்துச் செல்ல ஐசிசி தடை விதித்தது. ஏனெனில், அந்த ஆண்டு முதல், LED ஸ்டம்ப் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன்விலை லட்சக்கணக்கு என்பதால், வீட்டிற்கு எடுத்துச்செல்ல தடை விதிக்கப்பட்டது.

இதையும் படியுங்கள்:
இதுதான் இந்தியாவின் அடையாளம் – போலந்தில் பிரதமர் உரை!
Dhoni

அப்போது தோனி என்ன செய்திருக்கிறார் தெரியுமா? ஐசிசியிடம் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார். அதன்படி போட்டிக்கு எந்த ஸ்டெம்ப் பயன்படுத்தப்படுகிறதோ அதேபோல் மரத்தால் ஆன அதே நிறமுடைய ஸ்டெம்பை தயாரித்து அதனை வீரர்களுக்கு வழங்க வேண்டும் என தோனி கூறி இருந்தார்.

வெற்றிபெற்ற போரில் எதிரி நாட்டிலிருந்து எப்படி வீரர்கள் பொருட்களைப் பரிசாக எடுத்து திரும்புகிறார்களோ? அதேபோல்தான் இதுவும்…




Other Articles

No stories found.
logo
Kalki Online
kalkionline.com